25 June, 2006

இலங்கைத்தீவை இனி ஒருபோதும் ஒன்றாக்க முடியாது.

சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யூ இலங்கைத்தீவை இனி ஒருபோதும் ஒன்றாக்க முடியாது. அந்த ஆட்சியமைப்பை மாற்றும்படி அல்லது நெகிழ்ச்சித்தன்மையைக் கைக்கொள்ளும்படி அல்லது பிரித்து வழங்கும்படி யாராவது அவர்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும் - என சிங்கப்ப10ரின் சிற்பியான லீ குவான் யூ தெரிவித்துள்ளார். லீ குவான் யூ பற்றி வெளியிடப்பட்டுள்ள லீ குவான் யூ என்ற மனிதரும் அவரது எண்ணங்களும் என்ற நூலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.லீ குவான் யூ என்ற மனிதரும் அவரது எண்ணங்களும்” என்பது சிங்கப்பூரில் அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு நூலின் தலைப்பாகும். "ஸ்றெய்ற் ரைம்ஸ்" சஞ்சிகையைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்களான ஹவான் ப10க் குவாஸ் வாரன பெர்னாண்டஸ் மற்றும் சுமிகேரான் ஆகியோரால் எழுதப்பட்ட இந்த நூலின் லீ குவான் யூவின் வாழ்வை வழிப்படுத்திய நிகழ்வுகள் பற்றியும் அவர் சிங்கப்பூரை ஆண்ட விதம் பற்றியும் அவர் அளித்த செவ்விகள் அடங்கியுள்ளன. அந்த நூலில் சிறிலங்காவைப்பற்றி இப்படித்தான் லீ குவான் யூ கூறியிருக்கிறார்:எமது செயற்பாடுகளின் பின்விளைவுகளை நாம் எதிர்கொண்டுதான்; ஆகவேண்டும். நாங்கள் எங்கள் மக்களுக்குப் பதில்சொல்ல வேண்டியவர்கள். அவர்களுக்காக சரியான முடிவுகளை நாங்கள்தான் எடுக்கின்றோம். பழைய பிலிப்பைன்ஸ்ää பழைய இலங்கைää பழைய கிழக்குப் பாகிஸ்தான் மற்றும் பலநாடுகளைப் பாருங்கள். இந்த நாடுகளுக்கும் இடங்களுக்கும் நான் போயிருக்கிறேன். 1956ம் ஆண்டில் முதன்முதலாக கொழும்புக்குச் சென்றிருந்தபோது அது சிங்கப்பூரை விடச்சிறப்பான நகரமாக இருந்தது. சிங்கப்பூர் மூன்றரை வருடகாலம் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குக்கீழ் இருந்ததும் கொழும்பானது மவுண்ட் பேட்டனுடைய தென்கிழக்காசிய கட்டளைப்பீடத்தின் மையமாக அல்லது தலைமையகமாக இருந்ததும்தான் அதற்குக் காரணமாகும். அவர்களிடம் ஸ்ரேலிங் பவுண்களில் சேமிப்புகள் இருந்தன. அவர்களிடம் இரண்டு பல்கலைக்கழகங்கள் இருந்தன. கல்வியூட்டப்பட்ட திறமைசாலிகள் இருந்தனர். அமெரிக்க மிதவாதிகளும் பிரித்தானிய மிதவாதிகளும் சொல்வதை நீங்கள் நம்புவதானால் அவர்கள் செழித்தோங்கியிருக்கவேண்டும். ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. ஒரு ஆளுக்கு ஒரு வாக்கு என்பது தமிழ் சிறுபான்மையினருக்கு மேல் சிங்களப் பெரும்பான்மையினர் மேலாதிக்கம் கொள்ளவே உதவியது. செயல்முனைப்பும்ää புத்திசாலித்தனமும் கொண்ட இந்த தமிழ் சிறுபான்மையினர் கடுமையாக உழைத்தார்கள். ஆதற்காகவே தண்டிக்கவும் பட்டார்கள். அவர்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட்டார்கள். சிங்களம் ஆட்சி மொழியாகியது இரண்டு பல்கலைக்கழகங்களிலும் அவர்களுக்கு கோட்டா வழங்கப்பட்டது. இப்போது அவர்கள் வெறிகொண்ட புலிகளாகிவிட்டார்கள். இப்போது நினைத்துப் பார்க்கும் பொழுது துங்கு புத்திசாலித்தனமாக நடந்துகொண்டார். என்றுதான் தோன்றுகிறது. (துங்கு என்பது மலேசியப் பிரதமராக இருந்த துங்கு அப்துல் ரஹ்மானைக் குறிக்கிறது. இவரது ஆட்சியின் கீழ்தான் சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்தது ஆட்சியமைப்பை நெகிழ்ச்சியுள்ளதாக்கும் யோசனையை நான் முன்வைத்தேன். “இல்லை வெட்டொன்று துண்டு இரண்டாக செல்வோம். நீங்கள் உங்கள் வழியில் போங்கள்” என்று அவர் சொன்னார். பலவீனமான தலைவர்களையும் தவறான தலைவர்களையும் கொண்டிருந்ததாலயே அவர்கள் (சிறிலங்கா மக்கள்) வெற்றிபெறத்தவறிவிட்டார்கள். இணைப்பு : newstamilnet.com

4 comments:

Anonymous said...

என்றோ தெரிந்திருக்க வேண்டிய விடயம். இனியாவது சிங்களத்துக்கு புரியுமா?

Anonymous said...

Sri lanan Politicians never learn a subject from History.

said...

பாவம் லீ குவான் யூ. இனி ஜே.வி.பி. உம் பிக்குமாரும் நடத்தாப் போகும் ஆர்ப்பாட்டங்களாலும் கொடும்பாவி எரிப்புக்களாலும் கரைச்சல் படப் போகினம்.
சிங்கப்பூருக்கு எதிராக பல முனை ஆர்ப்பாட்டங்கள், ஏன், சிங்கப்பூருக்கே சென்று ஆர்ப்பாட்டங்கள் என்று திருவிழா இருக்கெண்டு சொல்லுறியள். பாப்பம்.

said...

வணக்கம் அனானிகள்,ஜெயபால் வாரவுக்கு நன்றி,ஓம் கொடுபாவி எரிப்பு,சிங்கப்பூரில் ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்வினம், ஆனால் உண்மையை மட்டும் புரிந்து கொள்ளாயின், லீ குவான் யூ இலங்கை வந்தபோது சிங்கப்பூரைவிட பெரிய நகரமாக இருந்த கொழும்பை இப்போது நரகமாக்கி வைத்திருக்கிறார்கள், தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள். இலங்கை தீவு எப்படி ஆனாலும் இவர்களுக்கு கவலையில்லை, தானும் தனது குடும்பமும் உண்டு கழித்து வாழ்ந்தாலே போதும்.