29 June, 2006

ஈழத்திற்கான அமெரிக்க நாளேட்டின் தீர்வு.

ஈழத் தீவில் மீண்டும் யுத்தம் வெடிப்பதற்கான சூழல் மேலோங்கி வருவதாக குறிப்பிட்டு, ஆசிரியர் தலையங்கத்தை வரைந்திருக்கும், (Boston Globe)பொஸ்ரன் குளோப் எனப்படும் அமெரிக்க நாளேடு, சிங்களவர்கள் மேலாதிக்கம் செலுத்தும் சிறீலங்கா அரசாங்கத்தின் பிடியில் இருந்து, வடக்குக் கிழக்குப் பிரதேச தமிழ் மக்கள் விடுதலை பெற்று, புதிய அரசியலமைப்பின் கீழ், தன்னாட்சியுரிமையுடன் வாழும் சூழலை ஏற்படுத்துவதன் மூலமே, இனநெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என சுட்டிக் காட்டியுள்ளது. சிங்கள தேசம் கட்டவிழ்த்து விட்ட ஒடுக்குமுறைகளின் வடுக்கள், தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இருந்து நீங்காத நிலையில், தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கும், (Loose Confederation) லூஸ் கொன்பெடரேசன் எனப்படும் தளர்வான கூட்டு இணைப்பாட்சி மூலம் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், பொஸ்ரன் குளோப் நாளேடு அழைப்பு விடுத்துள்ளது. இவ்வாறான ஆட்சியமைப்பு, குறைந்த அளவிலான அதிகாரங்களைக் கொண்ட மத்திய அரசாங்கத்தையும், வலுவான அரசியல் அதிகாரங்களையும், தனியான ஆயுதப் படைகளையும் கொண்ட மாநில அரச அமைப்பையும் பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி>புதினம்.

2 comments:

said...

இப்படி ஒரு தீர்வு ஏற்படுமானால் இந்த நூற்றாண்டின் சிறந்த திருப்பமாக அமையும். நடக்குமா?

said...

வரவுக்கு நன்றி கிவியன், நம்பிக்கைதானே வாழ்க்கை, நல்லது நடக்குமென்று எண்ணுவோம்.