03 June, 2006

இது முடிவல்ல ஆரம்பம்.

சர்வதேச அழுத்தங்கள், தடைகளை எதிர்த்தும், சிங்கள அரசின் இன அழிப்பையும் சமாதானம் என்ற கபட நாடகத்தையும் கண்டித்தும் இந்த வாரம் நிகழ்த்தப்பட்ட ஒன்றுகூடல்கள் சிங்கள அரசுக்கு அதிர்ச்சியையும், உலக நாடுகளுக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கும் என்பது உண்மை. அவுஸ்திரேலியா முதல் கனடா வரை பொங்கியெழுந்த பல ஆயிரம் தமிழ் உள்ளங்களைக்கண்டு உலகமே ஒருகணம் அதிர்ந்திருக்கும். சிங்கள அரசால் எம்மீது சர்வதேசத்தில் சேறு பூசலாம் என்றால் எம்மால் அதை துடைத்தெறியவும் சிங்களத்தினதும் அதற்கு முண்டு கொடுக்கும் சில சர்வதேச நாடுகளினதும் முகமூடியை கிழித்தெறியவும் முடியும் என உணர்த்தியுள்ளார்கள் எம் உறவுகள். உலக பொலிஸ்காரனான அமெரிக்காவை அழைத்து வந்த சிறிலங்காவும், அதன் கைகாட்டலுக்கு தலையசைத்த கனடா, மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் மிகப்பெரும் ஏமாற்றமடைந்திருக்கும். சிங்கள அரசின் உள்நோக்கம் தடைமூலம் புலம்பெயர்ந்த தமிழ் மக்களினதும், விடுதலைப் புலிகளினதும் உறவை அறுப்பதாகும். ஆனால் அவர்களின் தடைகள் எதிர்மறையான விழைவையே கொடுத்துள்ளது. இதை உணர்த்திய பெருமை புலம்பெயர்ந்த மக்களையே சாரும். 1995 இல் யாழ். குடாவை ஆக்கிரமித்த சிங்களப்படைகளை புறக்கணித்து நாவற்குழிப்பாலத்தை ஐந்து இலட்சம் மக்கள் ஒரே இரவில் கடந்து உலகிற்கு எப்படி எதிர்ப்பை காட்டினார்களோ அதே போலவே இதுவும். ஓன்றுகூடல் எதிர்ப்பு மனுக்கள், பேரணிகள் என பங்குபற்றிய ஒவ்வொரு மக்களும் ஆற்றிய பங்களிப்பு தமிழீழ விடுதலை, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆற்றிய பங்களிப்பாகவே என்றென்றும் நன்றி கூரப்படும். அண்மையில் கொண்டுவரப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தடையுடன் தளர்ந்து போன அப்பாவி மக்களின் நெஞ்சங்களில் நம்பிக்கையை ஏற்படுத்திய நிகழ்வு. சமாதானத்திற்கான தடை என பிரச்சாரத்தை முடுக்கிவிட்ட சிங்கள அரசின் உள்நோக்கத்தை தகர்த்துள்ளது. இவ் ஒன்றுகூடல்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவருவதற்கு முதல் நடைபெற்றதனால் தடை அறிவிப்பு தமிழ் மக்களிற்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதுடன் சிங்கள தேசத்pற்கு பெரும் ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது. சிங்களப் பேரினவாதிகளிடம் தடைக்கு முன் இருந்த ஆர்ப்பரிப்பு அதன்பின் மறைந்து போயுள்ளது. தமிழ் மக்களின் ஒன்றுகூடல்களின் பின் வெளியிடப்பட்ட இணைத்தலைமை நாடுகளின் அறிக்கை அரசையும் அதன் பிரதான ஆயுதத்துணைக்குழுவான ஈ.பி.டி.பியையும் கடுமையாக சாடியுள்ளதுடன் நில்லாமல் சர்வதேச ஆதரவையும் சிறிலங்கா இழக்க நேரிடும் என எச்சரித்துள்ளன. இறுதியாக வெளிவந்த ஐரோப்பிய ஒன்றிய அறிக்கையில்கூட விடுதலைப் புலிகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் உறவை பேணப்போவதாக கூறியுள்ளது. அதாவது தமிழர் மீது வீசப்பட்ட வலையில் சிங்கள தேசம் மெல்ல, மெல்ல சிக்கப்போகிறது. எனவே புலம்பெயர்ந்த மக்களின் பரப்புரைகளின் மூலம் சிங்கள அரசின் கபட நோக்கத்தை இலகுவாக வெளியுலகிற்கு காட்டமுடியம் என்பது நிதர்சனம். இப்போது புலம்பெயர்ந்த மக்களினால் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றுகூடல்கள் எதிர்ப்பு மனுக்கள், பேரணிகள் தொடர்ந்து பெருமளவில் நடத்தப்பட வேண்டும். சிங்கள அரசினால் அப்பாவி மக்களின் மீது வீசப்படும் வாளுக்கு நாம் கேடயம் ஆக வேண்டும். இவை வெறும் எதிர்ப்பைக்காட்டும் ஒன்றுகூடல்கள் அல்ல எத்தனையோ அப்பாவி மக்களினதும் பிஞ்சுக்குழந்தைகளினதும் உயிர்களைக்காக்கும் போராட்டம். விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை இத்தடைகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை, இது ஆரூடம் இல்லை வரலாறு. 1978 இல்; அவசரகாலச் சட்டவிதிகளின் பிரகாரம் (நுஅநசபநnஉல சுநபரடயவழைளெ) சிறிலங்கா அரசு புலிகளை தடைசெய்தது. அப்போது விடுதலைப் புலிகள் சில பத்துப் போராளிகளையும் சிறுரக சாதாரண துப்பாக்கிகளையும் (303 ரைபிள், உப இயந்திரத்துப்பாக்கி, கைத்துப்பாக்கி) கொண்ட சிறு குழு. ஆனால் புலிகளை தடையாலும் பெரும் சிங்கள இராணுவ இயந்திரத்தாலும் நசுக்க முடியவில்லை. மாறாக 1980 களின் நடுப்பகுதியில் இராணுவம் தான் முகாம்களுக்குள் முடங்கிப்போனது. 1987 இல் உலகின் ஐந்தாவது பெரிய இந்திய இராணுவம் புலிகளுடன் மோதும் போதும், சில ஆயிரம் தமிழ்த் துரோக துணைக்குழுக்கள் இந்தியப்படைக்கு ஒத்தாசை வழங்கும் போதும் புலிகளின் கதை முடிந்ததாக சிங்களம் மகிழ்சிக் கூத்தாடியது. ஆனால் இந்தியப்படை புறமுதுகிட மலையென வரிப்புலிகள் எழுந்தது வரலாறு. 1992 இல் பிரயோகிக்கப்பட்ட இந்தியத்தடையின் பின்பு புலிகளின் பின்தளம் (சுநயச டீயளந) முடக்கப்பட்டுவிட்டது என ஆர்ப்பரித்தது சிங்கள தேசம். ஆனால் 1992 இன் பின்பு பேரழிவைச் சந்தித்தது சிங்கள இராணுவம் தான் புலிகளல்ல. சமாதான காலத்தில் வந்த தடைகளையும் கருணாவின் துரோகத்தையும் பயன்படுத்தி நிழல்போரை ஆரம்பித்தபோது சிங்கள தேசம் அந்த நிழல்பொறியில் தான் சிக்கப்போகிறேன் என கனவிலும் நினைத்திருக்க மாட்டாது. புலிகளை குறிவைத்து சிங்கள அரசால் ஆரம்பிக்கப்பட்ட நிழல் யுத்தம் புலிகள் வேறு மக்கள் வேறு இல்லை என்பதை சிறிலங்காவிற்கும் சர்வதேசத்திற்கும் புரியவைத்துள்ளது. புலிகளையும் மக்களையும் வேறுபிரித்து அறியமுடியாத அவலத்தில் கண்ணில் காண்போரை எல்லாம் கொன்று குவிக்கின்றன சிங்களப்படைகள். படுகொலைகளை கண்டு பயந்து நடு, நடுங்கி விடுவர். தமிழர் என்ற சிங்கள தலைவர்களின் கணக்கு தவறாகிப்போனது. பொங்கி எழுந்தன மக்கள் படைகள் கைக்குண்டு, கிளைமோர், கைத்துப்பாக்கி, இயந்திர துப்பாக்கிகள் கொண்டு ஒரு நகர்புறச்சமரில் ஆரம்பித்து, காடு, கடல் ஏன் சிங்களத்தின் தலைநகர் வரை பரவிவிட்டது மக்கள் படையின் தாக்குதல்கள். ஒரு கையில் குழந்தை மறுகையில் ஆயுதம் ஏந்திய பெண்கள் சாதாரணமாக நடந்து போகும் காட்சி. வயது, வேறுபாடின்றி தற்காப்பு பயிற்சியில் கவனமெடுக்கும் மக்கள் இவை தான் இன்று தமிழீழம் தொடர்பாக சர்வதேச ஊடகங்களை ஆக்கிரமிக்கும் காட்சிகள். புலிகளின் வடக்கு கிழக்கு தொடர்பை துண்டிக்க முனைந்த அரசிற்கு வடக்கில் புதைந்து போயுள்ள அதன் 40,000 படைகளின் வழங்கல் பாதை ஆட்டம் கண்டுள்ளது. வடமராட்சி கிழக்கில் நடந்த கடற்சண்டையில் இந்தியா நோக்கி தப்பியோடி பின் இந்தியாவினால் காங்கேசன்துறையில் கொண்டுவந்து விடப்பட்ட பேர்ள்குரூசர் - ஐஐ திரும்பி திருமலை போக வழியின்றி கைவிடப்பட்டு இருந்தது. படையினர் ஒருவரும் பயணிக்க விரும்பவில்லை. பின்னர் இரவோடு இரவாக 12 கடற்படைக்கப்பல்கள் பாதுகாப்பு வழங்க 400 படையினரை வலுக்கட்டாயமாக ஏற்றிக்கொண்டு சர்வதேசக் கடற்பரப்பால் திருமலை கொண்டு செல்லப்பட்டு அங்கு கைவிடப்பட்டுள்ளது பேர்ள்குரூசர்-ஐஐ. கண்காணிப்புக்குழுவை நம்பி போர்நிறுத்த காலத்தில் வாடகைக்கு அமர்த்தப்பட்ட இக்கப்பல் 13 கடல் மைல் வேகமுடையது. 37 தெடக்கம் 45 கடல்மைல் வேகமுடையதும் நவீன ஆயுதங்களும் கொண்ட டோராக்களே தப்பி ஓடும் போது இக்கப்பலால் எவ்வாறு தாக்குபிடிக்க முடியும்? இப்போது அதிவேக துருப்புக்காவி கப்பலை தேடி உலகெங்கும் அலைகிறது சிங்கள அரசு. எனவே இராணுவ வல்லமையில் இத்தடைகள் எந்த மாற்றத்தையும் புலிகளுக்கு ஏற்படுத்தப்போவதில்லை ஆனால் உலக அரங்கில் எமது விடுதலைப் போரை சர்வதேச மயப்படுத்தவும், தமிழீழத்தில் புலிகளையும் தமிழ் மக்களையும் மேலும் பலப்படுத்தவும் புலம் பெயர்ந்த மக்களின் பங்களிப்பு தான் இன்று முக்கியமானது. இரண்டாம் உலகப்போரின் பின்பு புலம்பெயர்ந்த யூத மக்களின் ஆதரவும் உழைப்பும், பொருளாதார தொழில்நுட்ப உதவிகளும் தான் இன்று உலகில் ஒரு வல்லமை மிக்க நாடாக இஸ்ரேலை உயர்த்தியுள்ளது. ஹிட்லரின் இன அழிப்பில் இருந்து தப்பிக்க அகதிகளாக உலக நாடுகளிற்கு ஓடிய யூத மக்களில் 20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானி அல்பேட் ஐயன்ரீனும் (யுடடிநசவ நுiளெவநin) ஒருவர். இவரின் அணுசக்தி கோட்பாட்டாலும், தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வுகளின் பலனாலும் உருவானது தான் அணுக்குண்டு. இக்குண்டு தான் இரண்டாம் உலகப்போரின் போதும் அதன் பின்பும் உலகில் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டுவந்தது. எனவே 29.05.06 அன்று சர்வதேசத்தில் நிகழ்ந்த ஒன்றுகூடல்கள் தமிழீழ மக்களிற்கு மிகப்பெரும் தென்பாகவும் சிங்கள தேசத்திற்கு மிகுந்த ஏமாற்றத்தையும் கொடுத்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அகிம்சைப் போராட்டங்கள் தொடர்ந்தும் உலகில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதுடன் எமது தேசத்தின் பொருளாதாரத்தையும் அறிவியல் தொழில் நுட்பத்தையும் பெருக்கவேண்டிய கடற்பாடு புலம்பெயர்ந்த தமிழர் கைகளிலேயே உள்ளது. இது எங்களின் முடிவல்ல சிங்கள இனவெறியாளர்களின் முடிவின் ஆரம்பம் என்பதை நாம் விரைவில் உணர்த்துவோம். --------------- நன்றி>அருஸ் (வேல்ஸ்)

1 comments:

Anonymous said...

அருமையான கட்டுரை இவை போண்றவற்றை மேலும் எதிபாக்கின்றோம்.