29 June, 2006
என்.டிவியின் செய்தி, ஒரு செய்தித்திரிப்பா?
விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் லண்டனில் வைத்து இந்தியத் தொலைக்காட்சி நிறுவனம் ஒன் றுக்கு வழங்கிய பேட்டி சர்ச்சையை உருவாக்கியிருக்கின்றது.
""ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவம் ஒரு பெரிய வரலாற் றில் மறக்கமுடியாத துன்பியல் நிகழ்வு. அதற்காக நமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.'' என்று அன்ரன் பாலசிங்கம் கூற, அதற்கு வேறு அர்த்தத்தைக் கொடுத்து, அவ ரது கூற்றைத் திரிபுபடுத்தி போட்டடித்திருக்கிறது சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனம்.
பாலசிங்கம் கூறிய மேற்படி கருத்துக்களை வைத்துக்கொண்டு ராஜீவ் கொலைக்கான பொறுப்பை, இப்போது பதினைந்து ஆண்டு கள் கழித்து புலிகள் முதல் தடவையாக ஏற்றுக் கொண்டுள்ளனர், அதற்காகத் தங்களை மன்னிக்கும்படி இந்தியாவிடமும், இந்திய மக்களிடமும் புலிகள் மன்றாடுகின்றார்கள் என்றெல்லாம் சாரப் பட தனது கருத்தை மதியுரைஞர் பாலாவின் கருத்தாகக் குறிப் பிட்டு பிரசாரம் செய்தது அந்தத் தொலைக்காட்சி நிறுவனம்.
ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக மதியுரைஞர் பாலா தெரி வித்த முக்கிய கருத்தை அந்த நிறுவனம் ஒளிபரப்பவில்லை.
""ராஜீவ் கொலையை ஒரு தனி மனித கொலைச் சம்பவமாக அணுகுவது அல்லது பார்ப்பது தவறு. ஈழத் தமிழரின் தேசிய இனப் பிரச்சினையில் இந்தியா இராணுவ ரீதியில் தலையிட்ட அரசியல் வரலாற்றுப் பின்புலத்தின் அடிப்படையில்தான் இச் சம்பவத்தை தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டும்.'' என்று பாலா குறிப்பிட்டதை அமுக்கிவிட்ட அந்த நிறுவனம், பாலா தெரி விக்காத கூற்றுக்கு பதில் கருத்துக்களை புலிகளுக்கு எதிரான பிரமுகர்களைத் தேடிப்பிடித்து அவர்கள் மூலம் வெளிப்படுத் தித் தனது திருகுதாள வேலையை கனகச்சிதமாக முன்னெடுத் திருக்கின்றது.
""கடந்த கால சம்பவங்களை மறந்து, விடயங்களைத் தாராள மனப்பான்மையோடு புதிய போக்கில் அணுகுமாறு இந்திய அரசையும், இந்திய மக்களையும் நாம் வேண்டுகின்றோம்.'' என்று ஈழத்தில் அல்லல்படும் தமிழர்களின் சார்பில், ஈழத் தமி ழர்களின் ஏக அதிகாரபூர்வ பிரதிநிதிகளான விடுதலைப் புலிகளின் பிரதிநிதியாக நின்று மதியுரைஞர் பாலசிங்கம் அழைப்பு விடுக்க
அதற்குப் பதிலடி கொடுப்பதற்கு புலிகள் மீது பகையுறவும், விரோதப் போக்கும் கொண்ட இந்தியப் பத்திரிகையாளர் ராம் மற்றும் புலனாய்வாளர் கார்த்திகேயன் போன்றோரைத் தேடிப் பிடித்து அந்த சமரச முயற்சிக்கு முளையிலேயே ஆப்பு வைக் கும் திருவிளையா டலை நிறைவேற்றியிருக்கிறது இந்தியத் தரப்பின் ஊதுகுழல் நிறுவனம். மதியுரைஞர் பாலா வழங்கிய சுமார் ஒரு மணி நேரப் பேட்டியில் சில நிமிடங்களை மட்டும் "முண்டத்தை' மட்டும் ஒளிபரப் பிய அந்த நிறுவனம் அதை முழுமையாக ஒளிபரப்புமானால் அது நிச்சயம் ஈழத் தமிழர்களின் அவல நிலை குறித்து இந்திய அரசினதும், இந்திய மக்களினதும் நெஞ்சை ஆழமாகச் சென்று தைக்கும் தொடும் என்ற நம்பிக்கை தமிழர் தரப்புக்கு உண்டு.
மதியுரைஞர் பாலாவின் கருத்தை எடுத்தெறியும் விதத்தில் அந்தச் செவ்வியை ஒட்டி கருத்து வெளியிட்ட இந்திய வெளி விவகார அமைச்சர் ஆனந்த் சர்மாவின் பதில்கள் குறித்து அழு வதா, சிரிப்பதா என்பது தெரியாமல் சஞ்சலப்படுகின்றார்கள் ஈழத் தமிழர்கள்.
""இந்தியாவைப் பொறுத்தவரை அது இலங்கையில் அமைதி, ஸ்திரம், ஐக்கியம் ஆகியவற்றையே விரும்புகின்றது.'' என்று வலியுறுத்திக் கோரிய இந்திய இணை அமைச்சரிடம் அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கடைசியாக ஒரு கேள்வி கேட்கப் பட்டது.
""இலங்கைப் பிரச்சினை இவ்வளவு மோசமான வடிவம் எடுக்க முன்னர் ஆரம்பத்தில் புலிகளுக்கு இந்தியாவே பயிற்சியளித் தது என்ற சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதை பாலசிங்கமும் மீண்டும் சுட்டிக்காட்டியிருக்கின்றாரே?'' என்ற கேள்விக்கு இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் அளித்த பதில் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளும், ஆச்சரியத்துக்குள் ளும் மூழ்கடித்தது.
முதலாவதாக
""இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்துபவர் யார்? அவர் புலி களின் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியா என்பது எங்களுக்குத் தெரியாது.'' என்று இந்தியத் தரப்பில், அதுவும் வெளிவிவ காரத்துக்குப் பொறுப்பான இணை அமைச்சர் பதவியிலிருக் கும் ஒருவர் கூறியிருப்பது வியப்புக் குரியது.
அன்ரன் பாலசிங்கம் புலிகளின் தத்துவாசிரியர். மதியுரை ஞர், பேச்சாளர். அமைதி முயற்சிகளுக்கான புலிகளின் பேச்சுக் குழுவின் தலைவர். இந்தியா உட்பட சர்வதேச ரீதியிலும், தேசிய ரீதியிலும் புலிகளின் சார்பில் பல மட்டங்களில் தொடர்பு கொண்டு பங்காற்றியவர். தலைவர் பிரபாகரன் முன்பாகப் பத் திரிகையாளர்கள் திரண்டிருந்த சமயம் தலைவரையும் வைத் துக்கொண்டு ""தலைவர் பிரபாகரன் கூறினாலும் நான் கூறி னாலும் ஒன்றுதான்'' எனத் தலைவரின் குரலாகப் பகிரங்கமாக ஒலித்தவர்; ஒலிப்பவர்.
அவரைப் பார்த்து ""அவர் யார்? புலிகளின் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியா அவர் என்பது தெரியாது.'' என இந்திய அமைச் சர் கூறுவது அவரது பதவிக்குப் பொருத்தமற்ற வகையில் கேலிக் கூத்தானது.
எண்பதுகளின் நடுப்பகுதியில் புலிகள் உட்பட அனைத்து ஈழத் தமிழ்ப் போராளிகளுக்கும், போராளிகள் அமைப்புகளுக் கும் இந்தியா தனது மண்ணில் ஆயுதப் பயிற்சி கொடுத்துத் தூண்டி விட்டது என்பது சர்வதேசம் அறிந்த பரகசியம்.
அந்தப் பயிற்சி வழங்கப்பட்ட காலத்திலேயே புலிகளின் மதியுரைஞ ராகவும், பேச்சாளராகவும் இருந்தவர் பாலசிங்கம். அவர் யார் என்று இப்போது கேட்கும் இணை அமைச்சர் ஆனந்த் சர்மா அப்போது இந்திய அரசியலிலேயே ஒரு பிரமுகராக இருந் திருப்பாரோ என்பது தெரியவில்லை.
அந்தக் கேள்வியில் கேட்கப்பட்டது போல ஈழத் தமிழ்ப் போரா ளிகளுக்குப் பயிற்சி கொடுத்துத் தூண்டிவிட்டு இலங்கைத் தீவு, இரத்தத் தீவாக மாறுவதற்குக் காரணமாக இருந்த மூல சக்திகளில் இந்தியாவும் ஒன்று.
அந்தப் பொறுப்பை அப்படியே பொய் என்று மறுத்திருக் கிறார் இந்திய அமைச்சர் ஆனந்த் சர்மா.
இந்தியா ஈழத் தமிழ்ப் போராளிகளுக்கு ஆயுதங்களும், பயிற் சியும் வழங்கியது சரியா, தவறா என்பது வேறு விடயம்.
ஆனால், அப்படிச் செய்துவிட்டு, அதை மறந்து, இப்போது மறுத்து, ""இலங்கையில் அமைதி,ஸ்திரம், ஐக்கியம் ஆகிய வற்றையே இந்தியா விரும்புகின்றது.'' என்று உருத்திராட்சப் பூனை போல இந்தியத் தரப்பு பேச முடியுமானால்
""கடந்த காலத்தை ஒதுக்கிவிட்டு இந்தியாவுடன் புதிய போக் கில் நல்லுறுவு பேண ஈழத் தமிழர்களும், புலிகளும் விரும்புகின்றார்கள்'' என்று புலிகளின் பிரதிநிதி கூறுவதில் தவறே தும் இல்லை. அப்படி எதிர்பார்ப்பது நியாயமானதும் கூட.
நன்றி>உதயன்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வழமை போல அருமையான படைப்பு உதயன் பத்திரிகையிடம் இருந்து.
இங்கு பதிப்பித்தமைக்கு நன்றி....
வரவுக்கு நன்றி அனானி, எப்படியோ உன்மை வெளிவரவேண்டும்.
Post a Comment