13 June, 2006

சிறுவர் படுகொலையை சர்வதேசம் கண்டிக்காதது ஏன்?

சிறிலங்கா படைகளினால் 24 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டது, தொடர்பில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மௌனமாக இருப்­ப­தாக தமிழீழ விடுதலைப்புலிகள் குற்றம் சாட்­டியுள்ளனர். சிறுவர்களை படையில் சேர்ப்பதாக இச்சர்­வதேச உரிமை அமைப்புக்கள், விடுதலைப்­புலி­கள் மீது தொடர்ச்சியாக குற்றம் சாட்டி­வந்­த­ன.ஆனால் இன்றைய நிலையில், இலங்கை இனப்பிரச்சினையால் அண்மைக்காலமாக சிறு­வர்கள் கொலை செய்யப்படுவதைக் கண்­டிப்பதற்கு இச்சர்வதேச அமைப்புக்கள் தவ­றிவிட்டன என, விடுதலைப்புலிகள் குற்­றம் சுமத்தியுள்ளனர். சிறுவர்களின் நலன்களில் அக்கறை செலுத்­து­­வ­தாகக் கூறிக்கொள்ளும் இச்சர்வதேச உரிமை நிறுவனங்கள், தற்போது நடை­பெறும் சிறுவர்களின் ஒவ்வொரு படு­கொலை­யின் பின்னரும் தமது கண்டனத்தை வலியுறுத்திக் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் தொடர்ந்தும் மௌன­மாகவே இருக்கின்றனர். அண்மைய நாட்களில் படுகொலை செய்­யப்­பட்ட 24 சிறுவர்களின் பெயர்க­ளை­யும் புலி­கள் பட்டியல் படுத்தியுள்ளனர். இதில் அண்­மையில் மன்னார், வங்காலையில் கொடூ­ரமாக படுகொலை செய்யப்பட்டு தூக்கி­லிடப்பட்டிருந்த குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்களும் அடங்குகின்றனர். கடந்த மாதமும் யுனிசெவ் அமைப்பு விடு­தலைப்புலிகள் சிறுவரை படையில் சேர்ப்­பதாக குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்­பிடத்­தக்கது. நன்றி>புதினம்.

4 comments:

said...

இங்கு புலிகள், இராணுவம் என்பதனையும் தாண்டி சிறார்களின் உயிர் என்பதால் எவராயிருப்பினும் கண்டிக்கப் படல் வேண்டும். ஆனால் கூட இருப்பவன் என்ன செய்தாலும் சந்தோஷமாக வேடிக்கை பார்க்கும் மேற்கத்திய ராணுவப் பார்வைதானே இங்கு எல்லோருக்கும்?

said...

அதெல்லாம் கண்டிக்க மாட்டாங்க...இப்போது மட்டும் வானத்தை பார்ப்பாங்க..

said...

நீங்கள் சொல்வது சரிதான்.ஆனால் எம்மை பார்ப்பனியத்திடம் விற்ற சோழ மன்னர்களின் பெயரில் ஒரு பிளாக்கா?எம்மைப் பொறுத்தவரை தமிழ்ப் பாசிசம் உட்பட எல்லாப் பாசிசத்தையும் எதிர்க்கிறோம்.

said...

மணிகண்டன்,செந்தழல்ரவி,மிதக்கும்வெளி உங்கள் வரவுக்கு நன்றி, சிறுவர்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகள் கூட மைளனித்து இருப்பது ஏன்?