18 June, 2006

சிறிலங்காவிற்கான ஐப்பான் உதவிகள் நிறுத்தப்படலாம்.

இலங்கையில் சமாதானமுற்சிகள் தேய்வடைந்து போருக்கான சூழ்நிலை அதிகரித்து வரும் நிலையில் சிறிலங்காவிற்கான ஐப்பானின் நிதி உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன. ஐப்பான் உதவிகள் நிறுத்தப்பட்டால் சிறி லங்காவிற்கான ஐக்கிய நாடுகளின் உதவிகளும் நிறுத்தப்படலாம் என மேலும் அச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கைக்கான அபிவிருத்தி உதவிகளை நிறுத்துவது தொடர்பாக ஜப்பான் பரிசீலித்து வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் வன்முறைகள் அதிகரித்து ஒரு முழு அளவிலான யுத்தம் தொடங்கும் நிலை இருப்பதால் தனது உதவிகளை நிறுத்த ஜப்பான் முடிவு செய்திருப்பதாக கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பில் உத்தியோகப்பூர்வமற்ற முறையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஜப்பான் தெரிவித்திருப்பதாகவும் ஜப்பான் தனது உதவிகளை நிறுத்தினால் ஐக்கிய நாடுகள் சபை உதவியும் நிறுத்தப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது. தமிழ் மக்களினது சட்டப்பூர்வமான முறைமைகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று டோக்கியோ இணைத் தலைமை நாடுகள் வலியுறுத்தியிருந்தது. ஆனால் அதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. மேலும் துணை இராணுவக் குழுவினருக்கும் அரசாங்கப் படைகளுக்கும் தொடர்பில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறுவதை நம்பவும் ஜப்பான் மறுத்து ட்டது. இந்த நிலையில் வன்முறைகளும் அதிகரித்து யுத்தம் தொடங்கக் கூடிய சூழலில் அபிவிருத்திக்கான உதவிகளை நிறுத்த ஜப்பான் பரிசீலிப்பதாக ஜப்பான் தூதரக வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன. கொழும்பில் உள்ள சிறிலங்காவுக்கான சுவீடன் தூதுவரும் கடந்த வாரம், அமைதி முயற்சிகளை உண்மையா ஈடுபாட்டுடன் அரசாங்கம் முன்னெடுக்காத வரை அனைத்து அபிவிருத்திப் பணிகளுக்கான உதவிகளை இடைநிறுத்தப்படும் என்று பகிரங்கமாக எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி>புதினம்.

5 comments:

said...

இந்த செய்தி சிறிலங்காவிற்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு.

said...

நற்செய்தி. விரைவில் நடக்கட்டும்.

said...

வணக்கம் மஞ்சூர்ராசா, சுந்தரவடிவேல் வரவுக்கு நன்றி.

நிட்சயமாக இப்படி நடந்தால் சிறீலங்காவிற்கு பின்னடைவுதான், இதையே நாமும் எதிர்பாக்கிறோம்.

Anonymous said...

செய்திச் சேவைக்கு நன்றி ஈழபாரதி, இதையும் பாருங்களேன்.http://eelavali.blogspot.com/

Anonymous said...

நல்ல செய்தி. உலகமே இனி இவர்களின் காட்டுமிராண்டிதனங்களை புரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை.