04 June, 2006

பத்தாயிரம்பேரின் தற்காப்பு பயிற்சி நிறைவு.

பத்தாயிரம் பேரின் தற்காப்பு பயிற்சி இன்று எழுச்சியுடன் நிறைவு. பத்தாயிரம் பேர்வரை பங்குகொண்ட தற்காப்புப் பயிற்சி நிறைவு நிகழ்வு இன்று வன்னி புதுக்குடியிருப்பில் எழுர்ச்சிபூர்வமாக இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசரீதியாக பங்குகொண்டவர்களே இந்த தற்காப்பு பயிற்சி நிறைவில் பங்கேற்றனர். தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு உந்து நத்தியாக விளங்கும் மக்கள் சக்தியின் உந்து சக்தியாக விளக்கும் மக்கள் சக்தியின் வெளிப்பாடாக இந்த நிகழ்வு எழுர்ச்சியுடன் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆண்கள் பெண்கள் என கிராம மட்டத்தில் தற்காப்பு பயிற்சினை பெற்ற இவர்களுக்கு பயிற்சியின் நிறைவு நிகழ்வாக இந்த நிகழ்வு நடைபெற்றது. புதுக்குடியிருப்பை அண்மித்தபகுதியில் இருந்து அணிவகுத்து வந்த இவர்கள் புதுக்குடியிருப்பு மாலதி விளையாட்டு அரங்கில் ஒன்று கூடினர். இந் நிகழ்வின் போது பயிற்சியாளர்களால் எடுக்கப்பட்ட உறுதி உரையினை அடுத்து தமது தற்காப்பு பயிற்சியினை நிகழ்வுக்கு வருகை தந்திருந்த விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளுக்கு தமது பயிற்சி மாதிரியினை செய்து காட்டினர். இதனை தமிழீழ கடற்படையின் சிறப்புத்தளபதி கேணல் சூசை தளபதி கேணல் ரமேஸ் உட்பட்டோர் ஏற்றுக்கொண்டனர். இதன்போது அங்கு இடம் பெற்ற அரங்க செயற்பாடுகள் நிகழ்வுக்கு எழுச்சியூட்டின எமது விடுதலையை நாமே வென்றெடுக்கவேண்டும் என்றும் எமது நிலம் எமக்கு வேண்டும். என்றும் நிகழ்வில் உணர்வு எழுர்ச்சியுடன் கோசம் எழுப்பி உணர்வு பூர்வமாக உணர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்று பிற்பகல் 4.00மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர் இளங்குமரன் அவர்கள் தமிழீழ தேசியக் கொடியேற்றி ஆரம்பித்து வைத்தார். இதே வேளை கனகபுரம் மக்களுக்கான தற்காப்புப்பயிற்சி நிறைவு நிகழ்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. தகவல்:சங்கதி

0 comments: