19 June, 2006
போர் தொடங்கினால் : சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை.
மீண்டும் இன்று வன்னியில் விமானத்தாக்குதல் தொடருகிறது.
போர் தொடங்கினால் அனைத்து உத்திகளையும் கையாள்வோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு மின் அஞ்சல் ஊடாக அவர் அளித்த நேர்காணல்:
தமிழ் மக்கள் மீது மற்றொரு கொடூர யுத்தத்தை சிறிலங்கா அரசாங்கம் திணிக்குமானால் இலங்கைத் தீவு முழுமைக்கும் அது விளைவுகளை ஏற்படுத்தும்.
தமிழ் மக்கள் மீது அத்தகைய கொடூரமான போரைத் திணித்தால் தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்காக எந்த ஒரு உத்தியையும் பயன்படுத்துவோம்.
தமிழர் தாயகத்திலிருந்து ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேறி மற்ற மக்களைப் போல் எமது மக்களும் இயல்பு வாழ்க்கை வாழ்ந்திருந்தால் இராணுவத்துடனான எமது மக்களினது அல்லது எங்களின் மோதல்கள் நடைபெற்றிருக்காது.
இதனை சிங்களத் தரப்பு உணர்ந்திருந்தால் இந்தத் தீவில் அமைதி உருவாகி இருக்கும். தமிழ் மக்களினது உரிமைகள் நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வரும் நிலையில் இந்தத் தீவில் அமைதி ஏற்படாது.
தமிழ் மக்கள் படுகொலைகளை நிறுத்துவதுதான் பதற்றத்தை தணிக்க ஒரே வழி. சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக்கொண்டபடி துணை இராணுவக் குழுக்களினது ஆயுதங்கள் களையப்பட வேண்டும்.
சிறிலங்கா அரசாங்கம் மற்றும் சிங்களத் தரப்புடன் பேச்சுக்களை நடத்தி தமிழ் மக்களின் அபிலாசைகளையும் உரிமைகளையும் வென்றெடுக்கவே நாங்கள் முயற்சிக்கிறோம்.
ஆனால் இவை நிராகரிக்கப்படுட்டு தமிழ் மக்கள் மீது மற்றொரு போர் திணிக்கப்பட்டால் நாம் ஒரு உறுதியான நிலைப்பாட்டுக்கு செல்ல நேரிடும் என்றா சு.ப.தமிழ்ச்செல்வன்.
நன்றி>புதினம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment