24 June, 2006

கருணா குழுவை அடக்கினால் தாக்குதல்களை நிறுத்துவீர்களா?

இரு வாரங்களுக்கான தற்காலிக பயிற்சித் திட்டமாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்னெடுத்துள்ள அந்தரங்க முன்னெடுப்புக்கள், சிறிலங்கா அரசியல் உலகை அதிர வைத்துள்ளன. சண்டே லீடர் வெளியிட்டுள்ள அதிர்ச்சிதரும் செய்தியின் படி, துணை இராணுவக்குழுவான கருணா குழுவின் தாக்குதல்களை முற்றுமுழுதாக நிறுத்திக் கொண்டால், விடுதலைப் புலிகளும் இராணுவத்தின் மீதான தாக்குதல்களை முற்றாக நிறுத்த முன்வருவார்களா என்று இரகசிய ஒப்பந்த ரீதியாக வினவியுள்ளார் என்று தகவல் வெளியிட்டுள்ளது. யாழிலிருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் ஆசிரியர் என்.வித்யாதரன் மற்றும் அதன் வெளியீட்டாளர் ஈ.சரவணபவன் ஆகியோரிடம், கடந்த செவ்வாய்க்கிழமை (20.06.06) மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டதன்படி, இராணுவமும், விடுதலைப் புலிகளும் போரை ஆரம்பிக்கும் நிலையில் உள்ளதால், இதை நிறுத்த ஒரு மாற்று உத்தியை தான் முன்னெடுக்க யோசித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரையும் கடந்த செவ்வாய்க்கிழமை மகிந்தவின் உத்தியோகபூர் வாசஸ்தலத்தில் சந்தித்த மகிந்த, இதற்கான இணக்கப்பாட்டை விடுதலைப் புலிகளிடமிருந்து கண்டறிந்து தனக்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். போரொன்று ஆரம்பிக்கும் பட்சத்தில், சிறிலங்காவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிப்படையலாம் என்று குறிப்பிட்ட மகிந்த, சிறிலங்காவின் அனைத்து சமூகங்களும் இதனால் பாதிப்படைய வாய்ப்புள்ளது என்று தெரிவித்ததுடன், நோர்வேயின் அனுசரணையில் தங்கியிருக்காது, அவர்களை விலக்கிவிட்டு, நேரடிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது அவசியம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இத்தகைய நேரடிப் பேச்சுவார்த்தைகளில் காணப்படும் இணக்கப்பாட்டை அமுல்படுத்த இரு வாரங்களுக்கு முயற்சித்துப் பார்த்து, அதில் வெற்றி காணும் பட்சத்தில் அந்த வெற்றியைத் தொடர்ந்து செயற்படுத்த இருதரப்பும் முயலலாம் என்றும் அவர் விளக்கியுள்ளார். இந்த இருவார காலப்பகுதியில், விடுதலைப் புலிகள் மீதோ அல்லது பொதுமக்கள் மீதோ, கருணா குழுவினர் எதுவித தாக்குதல்களையும் தொடுக்காது இருக்க தான் பொறுப்பெடுக்க முடியும் என்று தெரிவித்த மகிந்த, இத்தகைய இருவார நேரடி போர் நிறுத்தத்திற்கு விடுதலைப் புலிகள் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என்று தான் கேட்டுக்கொள்வதாகவும் அவர்களிடம் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் இந்தக் கோரிக்கையை, உதயன் நாளேட்டைச் சேர்ந்த இவ்விருவரும் கடந்த புதன்கிழமை கிளிநொச்சியில் சு.ப.தமிழ்ச்செல்வனிடம் விளக்கியதாகவும், அதற்கான பதிலை விடுதலைப் புலிகள் பின்னர் தெரிவிப்பதாக அவர்களிடம் கூறிவிட்டதாகவும், சண்டே லீடர் மேலும் தெரிவித்துள்ளது. நன்றி>புதினம்.

5 comments:

Anonymous said...

//இந்த இருவார காலப்பகுதியில், விடுதலைப் புலிகள் மீதோ அல்லது பொதுமக்கள் மீதோ, கருணா குழுவினர் எதுவித தாக்குதல்களையும் தொடுக்காது இருக்க தான் பொறுப்பெடுக்க முடியும் என்று தெரிவித்த மகிந்த//
இங்கு இரண்டு உண்மைகளை மகிந்த ஒப்புக்கொண்டிருக்கிறார். கருணா குழுவினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர் (தமது ஆசியுடன்); மற்றது, கருணா குழுவினரை இயக்குவது யாரென்பதை அம்பலப்படுத்துகிறார்.

said...

வணக்கம் கொண்டோடி,அனானி வரவுக்கு நன்றி,

தன்னால் கருணா குழுவை கட்டுப்படுத்தமுடியும் என்றால், ஒன்று கருனா குழு இவரது பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் இருக்கவேண்டும். அல்லது கருனாவே நாட்டில் இல்லை அவரது பெயரில் இவர்கள் நடத்துகிறார்கள் வேள்வி, எனக்கென்னவோ இரண்டாவது பொருந்திவாறமாதிரி இருக்கு.
ஏனெனில் பிபிசியில் கருனா கொடுத்த பேட்டியில், தம்மோடு வந்த பெடியளை தாம் வீடுகளுக்கு அனுப்பிபோட்டு வந்தோம் என்று ஒரு இடத்தில் கூறுகிறார், வந்தோம் என்றால் எங்கு வந்தோம்? இந்தியாவிற்கா? சிங்கபூருக்கா? சிந்திக்க வேண்டியவிடயம்.

said...

அப்ப கருணா எங்களோடை இல்லை எண்டதெல்லாம் என்ன?
இது பேயனுமாக்கி வேறயெதுவுமோ ஆக்கிற கதை. கேள்விப்பட்டிருக்கிறியளே?

Anonymous said...

சண்டேலீடரில ஓரளவு விரிவா வந்திருக்கு. ஜெனிவாப் பேச்சுக்கு முன்பே வித்யாதரன் ஊடாக புலிகளோடு மகிந்த தொடர்புகொண்டுள்ளார்.

அதைவிட சிங்களத்தரப்பு இப்போது யுத்தத்தை விரும்பா நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. எப்படியாவது ஒரு யுத்தத்தை இப்போது தடுப்பதுதான் அவர்களின் குறிக்கோள். அதுதான் மகிந்தவின் இந்த நடவடிக்கை. இராணுவத்தளபதி மீதான நேற்றைய தாக்குதலின் பின் எந்த பதில் நடவடிக்கையும் அரசதரப்பால் நடத்தப்படவில்லை. தொட்டதுக்கெல்லாம் குண்டுவீசி, எறிகணை வீசி தாக்குதல் நடத்துபவர்கள் இந்தப் பெரிய இழப்பின் பின் சத்தம்போடாமல் இருக்கிறார்களென்றால் விசயமிருக்கிறது. நேற்று வான்தாக்குதலை எதிர்பார்த்து, அதைச்சாட்டாக வைத்து பெரியதொரு பதில்தாக்குதலுக்குப் புலிகள் தாயாராக இருந்திருப்பார்கள்.
ஆனால் மகிந்தவின் அமைதி, புலிகளுக்கு ஏமாற்றம் தான்.

இலங்கைப்பிரச்சினை தீர்க்கமான கட்டத்தை எட்டுகிறது.

said...

வணக்கம் ஜெயபால் தமிழன், வரவுக்கு நன்றி.

அரசுக்கு தெரியும் இனி வான்தாக்குதல் நடத்தினால் பெரியதொரு எதிர்தாக்குதல் நடத்தப்படும் என்று, தெளிவாகவே தமிழ்செல்வன் கூறிவிட்டார், விமானத்தாக்குதல் தொடர்ந்தால் போருக்கான தொடக்கமாகவே இருக்குமென்று.
அதோடு நேரடிப்பேச்சுக்கு ராஜபக்சா அழைப்பு விட்டிருக்கிறார், புலிகள் அதை நிராகரித்து இருக்கிறார்.
பண்டா செல்லாவா காலத்தில் ஒரு மூண்றாம் தரப்பு இருந்திருந்தால் காலிமுகத்திடலில் ஜேஆர் வாக்கிங் போனதற்க்கே ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டிராது. மூண்றாம்தரப்பு இருக்கும்போதே இந்தபாடு படுத்துகிறார்கள், அவர்களும் இல்லையென்றால் தாம் நினைத்தை செய்யலாம் என எண்ணுகிறார்கள்.