23 June, 2006
பிரபாகரனை ஒரு தீவிரவாதியாக இந்தியா சித்தரிப்பது தவறு.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒரு தீவிரவாதியாக இந்தியா சித்தரிப்பது தவறு என்று இந்திய எழுத்தாளரான கேரளத்தைச் சேர்ந்த கமலாதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் ஆனந்த விகடன் இதழுக்கு அவர் அளித்த நேர்காணலில் இது தொடர்பில் இடம்பெற்றுள்ளதாவது:
உங்களுக்குப் பிடித்த தமிழர் என்று யாரைச் சொல்வீர்கள்?
அதிர்ச்சி அடையாதீர்கள். எனக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை மிகவும் பிடிக்கும்.
இலங்கையில் நான் தங்கியிருந்தபோது அந்த அமைப்புடன் எனக்கு நிறைய பழக்கம் இருந்தது.
பிரபாகரனை ஒரு தீவிரவாதியாக இந்தியா சித்தரிப்பது தவறு. விடுதலைப் போராளிகளுக்கும் சுயநலங்களுக்காகச் செயல்படும் தீவிரவாதிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.
வன்முறையை விடுதலைப் புலிகள் கையில் எடுத்திருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டுவதை விட ஏன் எடுத்தார்கள் என்ற கார்ணத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதுதான் தீர்வுக்கான ஒரே வழி என்றார் கமலாதாஸ்.
நன்றி>புதினம்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
பிரபாகரனை ஒரு தீவிரவாதியாக இந்தியா சித்தரிப்பது தவறு.
Unmai dhaan. Prabhakaran oru BHAYANGARA VAADHI
ஆம்! சரிதான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவன் பிரபாகரனை இந்தியா தீவிரவாதியாக சித்தரிப்பது தவறுதான். இதை நானும் ஒத்துக் கொள்கிறேன். அவரை பயங்கரவாதி என்று சித்தரித்திருக்க வேண்டும். உலகில் இதுவரை எந்த விடுதலைப் போராளிகளும், அடுத்த நாட்டு தலைவர்களை குண்டு வைத்துக் கொன்றதில்லை. அதேபோல், தங்கள் இயக்கம் செயல்படுவதுபோல் ஈழ விடுதலைக்காக போராடும் மற்ற அமைப்பின் தலைவர்களை கொல்வதில் விடுதலைப் புலிகளுக்கு நிகர் விடுதலைப் புலிகள்தான். எனவேதான் இதனை தீவிரவாத இயக்கம் என்று அழைப்பதை விட பயங்கரவாத இயக்கம் என்று அழைக்கலாம். இனவாதத்திற்கும், இனப் படுகொலைகளுக்கும் பயங்கரவாதம் தீர்வல்ல! பயங்கரவாத செயலையை தனது தொழிலாக கொண்ட எல்.டி.டி.ஈ. எப்படி ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பாக இருக்க முடியும்.
வணக்கம் அனானி, சந்திப்பு வரவுக்கு நன்றி.
சட்டியில் இருந்தால்தானே அககப்பையில் வரும், உங்களூக்கு இப்படி வருகிறது, எழுத்தாளர் கமலாதாஸ்க்கு அப்படி வருகிறது.
"வன்முறையை விடுதலைப் புலிகள் கையில் எடுத்திருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டுவதை விட ஏன் எடுத்தார்கள் என்ற கார்ணத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும்."
இதை ஆராய்ந்தால் தெளிவு வரும்.
"நாம் என்னாஅயுதம் எனுக்கவேண்டுமென்பதை எதிரியே தீர்மானிக்கிறான்"
-மாவோ-
// ஈழ விடுதலைக்காக போராடும் மற்ற அமைப்பின் தலைவர்களை கொல்வதில் விடுதலைப் புலிகளுக்கு நிகர் விடுதலைப் புலிகள்தான். //
ஆம் கருணா போன்ற தமிழ் விடுதலை? போராளிகளை?! பற்றி சொல்கிறாரா? சந்திப்பு
விடுதலைக்கு எதிராக உள்ள கைக்கூலிகளை என்ன தான் செய்வது?
//இனப் படுகொலைகளுக்கும் பயங்கரவாதம் தீர்வல்ல!//
பயங்கரவாததிற்கு இனப்படுகொலைத் தீர்வல்ல. திருப்பிச் சொல்கிறோம்.
இலங்கை இனவெறி அரசை கண்டியுங்கள் முன்னாடி அதன் பின் விடுதலைப் புலிகளை கண்டிக்கலாம்.
தம் சொந்த நாட்டு மக்களையே தம் இராணுவத்தை கொண்டு கொன்று குவிக்கும் அவலம் இலங்கையில் தான் இப்போது அதிகம்.
// உலகில் இதுவரை எந்த விடுதலைப் போராளிகளும், அடுத்த நாட்டு தலைவர்களை குண்டு வைத்துக் கொன்றதில்லை.//
இதற்கு அயர்லாந்துக்காரரிலிருந்து பாலஸ்தீனியர்கள் வழியாக நிறையக் காட்டுக்களைத் தரமுடியும்.
ஏன் ஜனநாயக அரசுகளின் வரலாற்றிலிருந்துகூட எடுத்துக்காட்டுக்கள் உண்டு தோழரே.
உங்கள் வாதங்கள் வடிகட்டின ஜே.வி.பி தனத்துடனே இருக்கின்றன.
இதைச் சொல்வதற்கு ஓர் இடதுசாரி(யாகச் சொல்லிக்கொள்பவர்கள்) வரவேண்டிய நிலைக்கு வந்துவிட்டது.
காலம் உங்களைப் போல் எப்போதும் குருடாகவே இருப்பதில்லை. அது 'பயங்கரவாதிகளுக்கு' மாலைபோட்டே தீரும்.
இராகுமரன், அனானி வரவுக்கு நன்றி.
இதை ஆராய்ந்தால் தெளிவு வரும்.
"நாம் என்னா ஆயுதம் எனுக்கவேண்டுமென்பதை எதிரியே தீர்மானிக்கிறான்"
-மாவோ-
Post a Comment