13 June, 2006

ஜுன் 16-இல் ஈழத் தமிழர்களுக்கான ஆர்ப்பாட்டம் தமிழகத்தில்.

நெடுமாறன், இராமதாசு, வைகோ, கொளத்தூர் மணி, திருமாவளவன் பங்கேற்பு தமிழ்நாடு முழுவதும் எதிர்வரும் ஜுன் 16ஆம் நாளன்று ஈழத் தமிழர்களுக்கான ஆர்ப்பாட்டத்தை தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு நடத்த உள்ளது. இது தொடர்பாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை: சிங்கள முப்படைகளின் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு ஆளாகி ஆயிரக் கணக்கான தமிழர்கள் தப்பிப் பிழைத்து இந்தியாவில் அகதி களாகக் குவியத் தொடங்கியுள்ளனர். மேலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகித் தப்பி வர வழியில்லாமல் தவிக்கின்றனர். இந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக மக்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்பவேண்டிய அவசரமும் அவசியமும் ஏற்பட்டுள்ளது. இதை வலியுறுத்தும் வகையில் வரும் வெள்ளிக்கிழமை (16-ந்தேதி) மாலை 4 மணிக்கு சென்னையிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் அனைத்துக் கட்சிகள், அனைத்து தமிழர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடைபெறும். 1. இலங்கைத் தமிழர் பகுதியில் உண்மை நிலவரங்களைக் கண்டறியவும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆறுதல் கூற வும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அனைத்துக்கட்சிக் குழு ஒன் றினை உடனடியாக அனுப்ப வேண்டும். 2. இந்தியப் பிரதமரை சிங்களத் தலைவர்கள் அடிக்கடி சந்தித்துப் பேச அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஈழத்தமிழர் பிரதிநிதிகள் சந்தித்துப் பேச அனுமதிக்கப்படவில்லை. இலங்கை நாடாளுமன்றத் தமிழ் உறுப்பினர்களின் குழு பிரதமரைச் சந்தித்துப் பேச அனுமதிக்க வேண்டும். இவற்றை வலியுறுத்தி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நிறு வனர் மரு.இராமதாசு, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் வே.ஆனைமுத்து, விடுதலை சிறுத்தைகள் பொதுச் செய லாளர் தொல்.திருமாவளவன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் சேதுராமன், பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழக ஒடுக் கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் பொழிலன், பா.ம.க. தலைவர் கோ.க.மணி, தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் சௌந்தரராசன் மற்றும் தமிழ்த் தேசிய அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். மதுரையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க பொருளாளர் மாணிக் கம், தமிழ் தமிழர் இயக்கத் தலைவர் தியாகு மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள் கிறார்கள். சேலத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.மணி, தமிழ்த் தேசியக் கட்சிப் பொதுச் செயலாளர் இளமுருகனார் கலந்து கொள் கிறார்கள். தஞ்சையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் சி.முருகேசன் பங்கேற்கிறார்கள். கோவையில் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ராமகிருட்டிணன், தமிழர் தேசிய இயக்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் காந்தி கலந்து கொள்கிறார்கள். சிவகங்கையில் உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவர் மெல்கியோர், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் பரந்தாமன் கலந்து கொள்கிறார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி>லங்காசிறி

9 comments:

Anonymous said...

மிகவும் வரவேற்கக்கூடிய செய்தி,
அரசியலினால் பல்வேறு கருத்து வேறுபாடுகளை கொண்டிருந்தாலும் இந்த தலைவர்கள் ஒன்று பட்டு இப்பிரச்சனையை உலக அரங்கிற்கு (இந்திய அரசின் வழியாக) கொண்டு செல்லட்டும் . அது இவர்களின் கடமையே ஆகும்.

தீ

said...

வரவுக்கு நன்றி தீ,
அய்யா பழநெடுமாறன் தலமையிலான இந்த உணர்வாளர்களுக்கு தலை வணங்குகிறேன், மேலும் தமிழக உணர்வாளர்கள் கட்சிபேதமின்றி இதில் இணைந்து கொள்ளவேண்டும், ஈழத்தமிழர்களுக்காக ஏதாவது செய்யவேண்டும் என எண்ணும் தமிழ்மண நன்பர்கள் இதை அனைத்துமக்களும் அறியும் வண்ணம் கொண்டு போகவேண்டும், நடக்கும் ஆர்ப்பாட்டங்களில் பெருமளவுமக்கள் கலந்து கொள்ளும்போது ஊடகங்களினதும், மத்திய அரசினதும், சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்க்கும் என்பதில் அய்யமில்லை.

said...

இந்த சூழ்நிலையில் மிக அவசியமான ஆர்பாட்டம்!இந்திய அரசாங்கம் இதற்குப் பிறகாவது தன் கவனத்தை தமிழர்கள்பால் திருப்பினால் நலம்1

said...

வணக்கம் பிரியன் வரவுக்கு நன்றி,
இப்போராட்டம் மிகப்பெரிய அளவில் நடை பெறவேண்டும், அப்போதுதான் எதிபார்க்கும் பலனை பெற்முடியும், உணர்வாளர்கள், தமது நேரத்தை ஒதுக்கி கைகொடுக்க முன்வரவேண்டும்.

Anonymous said...

அய்யா பழநெடுமாறனின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
வளர்க தமிழர் ஒற்றுமை.

Anonymous said...

இன்று நடை பெறும் ஆர்ப்பாட்டத்துக்கு எனது வாழ்த்துக்கள்.

said...

தமிழ்கத்தில் நெருக்கடியாக இருந்த போதெல்லாம் நாங்கள் புதுவையில் தொடர் போராட்டத்தை நடத்தியுள்ளோம்.

இன்று நாங்கள் புதுவையிலும் இப்போராட்டத்தை நடத்துகிறோம்.

புதுவையில் இன்று ஈழமக்கள் ஆதரவு கூட்டமைப்பு சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் இன்று(16-06-2006) மாலை 5.00 மணியளவில் நடக்கிறது. பார்க்க எனது பதிவு.

said...

இத்தகைய போராட்டங்கள் வரவேற்கத்தக்கவை.. இதை துவக்கி வைக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள்.. நானும் என் மூலமான முயற்சிகளான இதைப்பற்றிய விழிப்புணர்வை பரப்ப முயலுகின்றேன்...

இந்த போராட்டக்குழுக்கள், போராட்டத்துடன் நின்றுவிடாமல் இந்திய ஊடகங்களினால் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கும் பல இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதும் என் குறிக்கோள்..

விடுதலைப்புலிகள் என்றாலே பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், அவர்கள் செய்வது தப்பு என்று, நாம் என்ன பேச வருகின்றோம் என்று காதுகொடுத்து கேட்க கூட மாட்டாத நிலையில் தான் பலர் உள்ளனர்.. :-(

said...

வணக்கம் இரா சுகுமாரன் ,யாத்திரீகன் உங்கள் வரவுக்கும் ஆதரவுக்கும் நன்றிகள், உணர்வுள்ள ஒவ்வொருவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.