31 May, 2006

மகிந்தவுடன் புலம்பெயர் கனடா தமிழர் போர் பிரகடனம்!

அன்பான உறவுகளே! எமது உறவுகள் நாளும் எம் தாயக மண்ணில் கொன்றொழிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர். நாயைப் போல், தெருவிலும், பயிலும் இடத்திலும், தொழிலகத்திலும், படுக்கையிலுமாக எம் உறவுகள் குதறப்படுகின்றனர். நான்கு வருடம் சர்வதேசத்தின் வேண்டுதலுக்காக எம் உறவுகள் ஒரு சமாதானப் பயணத்தில் நம்பிக்கையுடன் பயணித்தனர். என்ன நடந்தது? சமாதானம் வந்ததா? தீர்வு கிட்டியதா? ஒரு போர் நிறுத்த ஒப்பந்தமே நான்கு ஆண்டுகளின் பின் தனது வாழ்நாளை எண்ணிக்கொண்டிருக்கின்றது. முதலில் இயல்பு வாழ்க்கை வரும் என்றது சர்வதேசம். இன்று எம் மக்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள தங்கள் வாழ்விடங்களைவிட்டே ஓடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆக்கிரமிப்பு நாய்களின் வெறியாட்டம் எங்கும் தலைவிரித்தாடுகின்றது. இந்நிலையில் தான் உதவுகிறேன் நம்புங்கள் என்று வந்த சர்வதேசமும் மனிதத்தை தொலைத்துவிட்டு நிற்கின்றது. வழிசமைத்து கொடுப்பதை விடுத்துவிட்டு, வழியடைத்து படுகொலை ஒன்றிற்கு துணைபோகின்றது. தாயகத்தில் ஒரு இனப்படுகொலையை நடாத்தியவாறு, புலம்பெயர்ந்த மக்கள் மீதும் வீண்பழி சுமத்தி, அங்கும் அவர்களை வாழா மடந்தையாக்க சிங்களத்தின் மகிந்தர் முனைந்து நிற்கின்றார். இன்று, எம் தாயக உறவுகளுக்காக, அவர்கள் உண்மை நிலையை சர்வதேசத்திற்கு வெளிக்கொணருவதற்காக சர்வதேசமெங்கும் ஒன்றுகூடி நிற்கின்றோம். இவ்வொன்று கூடலை எமது அடுத்த நகர்வுகளின் படிகற்களாக கொள்வோம். ஆம், நாம் சிந்தித்து ஒற்றுமையுடன் விரைந்து செயலாற்றும் காலம் இன்று எம் முன்னால் விரிகின்றது. துன்பத்தை தருபவனுக்கு அந்த துன்பத்தை திருப்பிக் கொடுப்போம். எம் உறவுகளை சர்வதேசத்தில் இருந்து அன்னியப்படுத்தி அவர்களை ஒரு பெரும் இனப்படுகொலைக்கு உள்ளாக்கி, அடிமைப்படுத்தி விடலாம் என மகிந்தர் கனவு காண்கின்றார். இன்று, 12 நாடுகளில் நாம் அணிவகுத்து நிற்கின்றோம். நாங்கள் சர்வதேசத்தில் அதன் குடிமக்களாக நிமிர்ந்து நிற்கின்றோம். 2006ஆம் ஆண்டின் தோற்றுப் போன தேசங்களில் ஒன்றான அறிவிக்கப்பட்டுள்ள சிறீலங்காவை சர்வதேசத்தில் இருந்து முழுமையாக அன்னியப்படுத்துவோம். முதலில், எம் உறவுகள் மீது ஏற்கனவே ஒரு உத்தியோகப்பற்றற்ற பொருளாதாரத் தடையை விதித்திருக்கும், மதிந்தருக்கு அதிர்ச்சி வைத்தியமான எமது பொருளாதாரத் தடையை அமுல்செய்வோம். சிறீலங்கா அரசின் பொருட்களின் கொள்வனவுகளை எமது புலம்பெயர்ந்த நாடுகளில் தவிர்ப்போம். தற்போது உள்ள சரக்குக்கள் போக தொடர்ந்த சிறீலங்கா அரச பொருட்கள் தொடர்பான கொள்வனவுகளை நிறுத்துமாறு எமது வணிகர்களை அன்புடன் வேண்டுவோம். மாற்றீடான கொள்வனவுகள் உண்டு என்பதால், அது குறித்த முயற்சிகளில் உடன் கவனம் செலுத்துமாறு வணிகர்களை வேண்டுவோம். எமது கொள்வனவுகளால் மட்டும், பல மில்லியன் டொலர்களை மகிந்தர் அரசு வருவாயாகப் பெறுகின்றது என்பதை நாம் அனைவரும் நன்கறிவோம். எம்பணத்தில் எம் உறவுகளை கொல்லுகின்றார் மகிந்தர். புலம்பெயர்ந்த 8 லட்சம் தமிழர்ளை வேறு மதிந்தர் சீண்டிப் பார்க்கின்றார். அவருக்கு பதில் சொல்லும் வலுவில், வல்லமையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் நாம் இருக்கின்றோம்; என்பதை உடன் காட்டும் முயற்சியில் இது வெறும் ஆரம்பமே. வரும் நாட்களில் மேலும் பல விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வோம். எமது வர்த்தகர்களுக்கு பங்கம் வராத வகையிலும் எமது ஒற்றுமையின் வெளிப்பாடாகவும் கனடா தினமான வரும் யுூலை 1ஆம் நாள் முதல் முழுமையான சிறீலங்கா பொருட்களின் புறக்கணிப்பை அனைவருமான முன்னெடுப்போம். சமாதானத்திற்கான கனடா தமிழர்கள் நன்றி>சங்கதி. இதேபோன்று ஜரோப்பிய, அவுஸ்ரேலிய தமிழரும், வர்தகர்களை பாதிக்காதவாறு போராட முன்வரவேண்டும், வர்தகர்கள் இந்தியா, மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து தமது வர்தகபொருட்களை இறக்குமதி செய்து இப்போராட்டத்துக்கு ஆதரவு நல்க வேண்டும்.

1 comments:

Anonymous said...

நல்லதொரு பதிவு, இப்படியொரு போராட்டத்தை புலம்பெயர் மக்கள் மேற்கொள்வதுதான் நல்லதொருமுடிவு.