30 May, 2006

தமிழ் கவுன்சிலர் லண்டனில் 101 மணித்தியாலம் உண்ணாவிரதம்.

பிரித்தானிய அரசின் விசேட அனுமதியுடன் தயா இடைக்காடர் எதிர்வரும் 2ம் திகதிமுதல் 6ம் திகதிவரை தொடர் 101 மணிநேரம் உண்ணாவிரதம் இருக்க முடிவு எடுக்கபட்டுள்ளது. இதற்கான அனுமதியும் பிரித்தானிய அரசு வழங்கியுள்ளதுடன் ஒரு மீற்றர் நீளமும் மூண்று மீற்றர் அகலமும் உடைய பிரதேசத்தை இவருடைய உண்ணாவிரதத்திற்கு கொடுத்துள்ளது. இரவு பகலாக தொடர்சியாக நடைபெறும் இந்த உண்விரதத்தில் ஆதரவு கொடுக்கும் பலரும் உதவிக்கு சுற்றவர நிப்பதுடன் பிரித்தானிய அரசியல்வாதிகளின் ஆதரவும் இதன்ஊடாக பெறமுடியும் எண்று தயா தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு அமைய தமிழர் அவலத்தை பிரித்தானியாவில் அரசியல்வாதிகளுக்கு எடுத்தக்காட்ட இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் வாக்கு போட்ட ஈழத்தமிழ் மக்களின் கோரிக்கைகளை பிரித்தானிய அரசியல்வாதிகளுக்கு புரியும் விதத்தில் தெரியப்படுத்தவதே தனது பூரண விருப்பம் எனவும் வடக்கு கிழக்கு தமிழர் மிதான அரச பயங்கரவாத செயல்கள் நிறுத்தப்படல் வேண்டும் தமிழ் பொதுமக்கள் அரச நிர்வாக பகுதியில் கோரமானமுறையில் கொல்லபடுவதை முண்டங்களாக மிதப்பதையும் உலகம் கண்டித்து இலங்கை அரசிற்கு உரிய அளுத்தம் கொடுக்கவேண்டும். பெண்கள் சிறுவர்கள் பாதுகாக்கபடல்வேண்டும். தமிழருக்கு நீதியான சுதந்திரம் கிடைக்க பிரித்தானியா உதவவேண்டும். எண்ற கோரிக்கைகள் அடங்கிய சுலோக அட்டைகளும் 101 மணிநேரம் வைக்கப்பட உள்ளது. இவருக்கு ஆதரவாகவும் அனைத்துக்கும் பாதுகாவலனாக திரு.றாஜன் (07751717097) என்பவருக்கு பொலிசார் அனுமதி கொடுத்துள்ளனர். இவருக்கு அச்சுறத்தல் ஏற்படுத்தாத விதத்தில் பலரும் ஆதரவு கொடுக்க இருப்பதுடன் அனைத்து ஊடகங்களும் இவருக்கான ஆதரவை கொடுக்க இருப்பதாக அறியமுடிகிறது. நன்றி>யாழ்.கொம்

13 comments:

Anonymous said...

தயா இடைகாடரின் முயற்சிக்கு எமது வாழ்த்துக்கள்.

Anonymous said...

Let's hope that this event brings focus to the cause from the international community. At least, the british public, because politicians have their own agenda, but public opinion matters.

-kajan

said...

தயா இடைகாடர் அவர்களின் கவனஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஈழத்தில் நடக்கும் சிங்கள அரசின் பயங்கரவாத நடவடிக்கைகளை உலகில் வாழும் மக்களுக்கு தெரியப்படுத்த புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இப்படியான முயற்சிகளில் இறங்க வேண்டும். அதற்கு ஓர் முன்னுதாரணமாக திரு.தயா இடைகாடரின் முயற்சி அமையும் என நம்புகிறேன்.
வெல்க தமிழீழ விடுதலைப்புலிகள்!
மலர்க தமிழீழம்.

அன்புடன்
வெற்றி

said...

வணக்கம் வெற்றி, சாதாரண மக்கள் உண்ணாவிரதம் இருந்தால் உலகம் கண்டுகொள்ளாது, தயா இடைகாடர் அரசியலில் இருக்கிறார், அதிகாரத்தில் இருக்கிறார். அரசு கண்டு கொள்கிறதோ இல்லையோ நிச்சயம் ஊடகங்களும், மக்களும் கண்டு கொள்வார்கள், அதுவும் ஒரு பிரித்தானிய பாரளமண்ற உறுப்பினர் 101 மணிநேரம் தொடர் உண்ணாவிரதம் இருப்பது என்பது சாதாரண விடயமல்ல. இப்படி தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பாராள மண்ற உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டங்கள் செய்ய முன்வரவேண்டும்.

said...

வணக்கம் தம்பி, செய்தியின் உண்மைதெரியாது எதுவும் கூறமுடியாது, என்னைபொறுத்தவரைக்கும் உண்மையை எழுதுபவன் எதுக்கும் பயப்படதேள்வையில்லை, சத்தியத்தை எழுது சத்தியத்தின் வழிவாழ். வரவுக்கு நன்றி.

said...

வணக்கம் அனாமிகள், உங்கள் வாழ்த்து அவரை போன்றவரைமேலும் உற்சாகப்படுத்தும். வரவுக்கு நன்றிகள்.

Anonymous said...

இன்று உன்ணாவிரதத்தை ஆரம்பிக்கும் தமிழின காவலர், அய்யா தயா இடைக்காடருக்கு எனதும் எனது குடும்பத்தினரதும் அன்பும் வாழ்த்துக்களும், எடுத்த காரியத்தில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்

Anonymous said...

அது சரி!
உதென்ன? 101மணி;
83 கலம்பகத்தோட, நான் 3 நாள் சாப்பிடயில்ல!!;
உதுகள் இந்த உண்ணாவிரதமென்ற மாகாத்மாவின்; பெரிய ஆயுதத்தைக் கேலி செய்வது.
இருந்தால் சாகும் வரை என இருங்கோ!!!!
பயந்தா விட்டுவிட்டு வேறவேலை பாருங்கோ!
நான்;நீங்க எல்லோரும் சாவுக்குப் பயந்து ஒடிவந்த கூட்டம் தான்!!!! ஆனால்
இது உண்ணாவிரதத்தின் மகிமையைக் கெடுத்துப் பகிடியாக்கி விடும்.
பரமலிங்கம் கணபதிப்பிள்ளை

said...

வணக்கம் அனானி உங்கள் வரவுக்கு நன்றி, உங்களதும் எங்களதும் பிரார்த்தனை இதுவே.

said...

வணக்கம் அதிரடி வரவுக்கு நன்றி, தயா இடைக்காடர் அதிகாரத்தில் இருப்பவர், அதிகாரத்தில் இருப்பவரின் குரல் நிட்சயம் சபை ஏறும்.

said...

அய்யா பரமலிங்கம் கணவதிப்பிள்ளை நீர் தமிழர்தானா, கோயிலில் 101 தேங்காய், 1001தேங்காய் உடைப்பது என்று நேர்த்தி வைக்கிறார்கள், கை விசேடம் 101ரூபாய் அல்லது 1001ரூபாய் ஏன் கொடுப்பார்கள், தமிழர் என்றால் உமக்கு தெரிந்திருக்கும், தமிழ் கலாச்சாரம், விழுமியங்கள் புரியாத உமக்கு இது புரியாதது ஆச்சரியமில்லை, தொடங்கும் காரியம் வெற்றியாக அமைய, அது அவரது நம்பிக்கை, நீரும் செய்ய மாட்டீர் செய்பவரையும் செய்ய விடமாட்டீர், இதற்கு தமிழில் நல்லதொரு பழமொழி இருக்கு தானும் படான் தள்ளியும் படான்.

சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பாட்டினி கிடக்கும் பிச்சைகாரனும், விடுதலைக்காக உண்ணாவிரம் இருந்த மாகாத்மாவும் உமது பார்வையில் ஒன்று என்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை.
மகாத்மா சாகும்வரை உண்ணாவிரம் இருந்தாரா? அல்லது உண்ணாவிரதம் இருந்து மடிந்த திலீபனின் உண்ணாவிரதத்தை மதித்தீர்களா? அதுதான் மதிக்கத்தெரிந்த, மதித்த வெள்ளைக்கரனின் முற்றத்தில் அவர் உண்ணாவிரதம் இருக்கிறார்.

Anonymous said...

அப்போ!!! 101 நாள் ,நீங்களும் சேர்ந்திருங்கோ! பார்ப்போமே!!!
இந்த வரயறைதான்; இடிக்குது!!!!!போலி சினிமா போல இருக்கு!
இதைவிட இப் பெரியவர்மேல் எந்தக் காழ்ப்புணர்வுமில்லை!!!
பரமலிங்கம் கணபதிப்பிள்ளை

said...

பரமலிங்கம் கணவதிப்பிள்ளை, நான் இருந்தால் நீர் ஒரு பிண்னூட்டம் கூட இடமாட்டீர், தயா இடைக்காடர் என்றபடியால் வரிந்து கட்டி கொண்டு வந்திருக்கிறீர், அதிகாரத்தில் இருப்பவர்கள் கேட்டால்தானே இந்த உலகமும் கேட்கும், அவரது உண்ணாவிரதத்தை பார்க்க வந்திருக்கும், பாராளமண்ற உறுப்பினர்களின் தொகையே இதற்க்கு சாட்சி, இதற்கு சிறீலங்கா ஊடகங்களின் கவனிப்பும் இதற்க்கு சாட்சி, அதற்க்கு மேலே இதை குழப்ப மாற்றுகருத்துகாறர் போட்ட திட்டங்கள், எல்லத்திற்க்கும் மேலானதொரு பெரிய சாட்சி.
கேட்பபவன் கேட்டால்தானே எவனும் கேட்பான்.
இதில் குற்றம் கண்டுபிடித்து நீர் எதை சாதிக்கப்போறீர், இதை விட பெரியதொரு கவனயீர்ப்பை உம்மால் செய்ய முடியுமா?