31 May, 2006
சர்வதேசத்தின்மீது தமிழர்கள் அவநம்பிக்கை.
ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது விதித்துள்ள தடையுடன் தமிழ் மக்களுக்கு அற்ப சொற்பமாக சர்வதேச சமூகத்திடம் இருந்த நம்பிக்கையும் அற்றுப்போய்விட்டது. இதனை வன்னிப் பெருநிலப் பரப்பில் வெகுசன ஒன்றியத்தினர் வெளியிட்ட அறிக்கையே வெளிக்காட்டி நிற்கின்றது.
அவ்வறிக்கையில், "எமது மக்கள் கொல்லப்படும்போது தனது கண்களை இறுகப் பொத்திக் கொள்ளும் சர்வதேசம் சிங்களவர்களின் தலைமயிர் உதிரும்போதுகூடக் கண் விழித்துக் கொண்டு உரத்த குரல் எடுக்கின்றது. இவற்றின் மூலம் ஒரே ஒரு முடிவிற்கு வருகின்றோம்.நாடற்றவர்கள் உலகில் வாழும் தகுதியற்றவர்கள். அவர்கள் விலங்குகளுக்கும் கீழான நிலையிலேயே கணிக்கப்படுவார்கள்" எனத் தெரிவித்திருப்பதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதியற்ற செயல் குறித்துத் தமது வேதனையை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் மக்கள் நீண்ட அனுபவத்தின் அடிப்படையில் உலக நாடுகளின் அதிகார வர்க்கத்தின் செயற்பாடுகள் குறித்து நம்பிக்கை இழந்தவர்களாகவே உள்ளனர். ஏனெனில், நீண்ட போராட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் குறித்து எவருமே கவனத்தில் கொள்ளவில்லை. தமிழ் மக்களின் நீதியான போராட்டத்திற்கு அவை என்றுமே ஒத்துழைத்ததில்லை.
நீதியான போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்காதுவிடினும், தமிழ் மக்களுக்கும் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் சனநாயக உரிமைகள் உண்டு என்ற அடிப்படையில் அவர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கத்தானும் அவை தயாராக இருந்ததில்லை. மாறாக, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆயுத முனையில் நசுக்க முற்படும் அரசிற்கே அவர்கள் ஆதரவு வழங்கி வந்துள்ளனர்.
ஒரு தரப்பினரால் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான நியாயப்பாடு சர்வதேச மயப்படுத்தப்பட்டு சரியான முறையில் உலக நாடுகளிடம்எடுத்துச் செல்லப்படவில்லை எனக் கூறப்படுவதுண்டு. சரி அவ்வாறு தான் வைத்துக் கொண்டாலும், சர்வதேச சமூகமே கரிசனை செலுத்தியதாகக் கூறப்படும் சுனாமி அனர்த்த புனர்வாழ்வுப் பணிகளில் சிறிலங்கா தமிழ் மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியமை சர்வதேச சமூகத்திற்குத் தெரியாத தொன்றா?
இதனைச் சர்வதேச சமூகம் தெரியாது எனக் கூறுமாயின் அதனைவிட மோசடித்தனமான விடயம் வேறு எதுவுமே இருக்க முடியாது. ஏனெனில், ஐ.நா. செயலாளர் கொபி அனானில் இருந்து அமெரிக்காவின் முன்னாள்; சனாதிபதி பில் கிளிங்டன் வரையில் இவ்விடயத்தில் நேரடியாகக் கரிசனை காட்டியிருந்தனர். இலங்கையில் சுனாமியால் தமிழ் மக்களும் பேரழிவைச் சந்திருந்தனர் என்பதைத் தெரிந்திருந்தனர்.
ஆனால், அவர்களால் கூட தமிழ் மக்களின் மனிதாபிமான தேவைகளைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இதற்கு அவர்கள் இயலாது போய்விட்டது எனக் காரணம் கூறினால் அது நகைப் பிற்கிடமானதாகிவிடும். உரிமைக்காகப் போராடுகின்றார்கள் என்பதற்காக தமிழ் மக்களின் மனிதாபிமான உதவிகளைப் பெற்றுக் கொடுக்கக்கூட அவர்கள் தயாராக இல்லை என்பதே நிதர்சனமாகும்.
இது தனியாக அரசுகள் இடத்தில் மட்டும் காணப்படும் போக்கல்ல. தம்மை உலகில் மனித நேய அமைப்புக்களாகவும், பாதிக்கப்படும் மக்களுக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுக்கும் உதவி வழங்கும் அமைப்புக்களாகவும் கூறிக்கொள்ளும் அமைப்புக்களுக்கும் பொருத்தப்பாடானவையே. ஒடுக்கப்படும் மக்களின் உணர்வுகள் குறித்து அக்கறை காட்டாத அவ் அமைப்புக்கள் ஒடுக்குமுறை அரசுகளின் நலன்கள் பாதிக்கப்படாது பார்த்துக்கொள்வதில் பெரும் கவனம் செலுத்துகின்றன. இதற்கு ஐ.நா. அமைப்புக்கள்கூட விதிவிலக்காக இல்லை.
சரி, விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத பட்டியலில் சேர்த்துக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், யுத்த நிறுத்தம் அமுலில் இருந்த காலத்தில் பல கொலைகளைப் புலிகள் புரிந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளது. இக்குற்றச்சாட்டுக்கள் எதற்கும் ஆதாரம் இல்லை என்பது ஒருபுறம் இருக்க, ஐரோப்பிய ஒன்றியம் யுத்த நிறுத்த காலத்தில் இடம்பெற்ற அனைத்துக் கொலைகளுக்கும் புலிகள் தான் காரணம் எனக் கருதுகின்றதா?
அதாவது, தமிழ் தேசிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசிய உணர்வாளர்கள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அல்லைப்பிட்டிப் படுகொலை, விடுதலைப்புலிகளின்; மூத்த உறுப்பினர்கள், சிரேஸ்ட தளபதிகள் மற்றும் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் நடந்த படுகொலைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பணியாளர் கடத்தல் யாவற்றிற்கும் புலிகள்தான் காரணம் என்று கருதுகின்றதா?
அவ்வாறு ஐரோப்பிய ஒன்றியம் கருதுமாக இருந்தால் அதனதுடன் பேசிப் பயனில்லை. அவ்வாறு இல்லை எனில், விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களைவிட சிறிலங்கா இராணுவமும், அதன் ஏவுதலில் இயங்கும் ஒட்டுக்குழுக்களும் புரிந்த படுகொலைகள் அதிக அளவிலானதாகவும், ஆதாரபூர்வமானவையாக நிரூபிக்கத்தக்கவையாகவும் உள்ளன. ஆனால், இவை ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்களுக்குத் தெரியாதுபோனது ஏன்? படுகொலைகள் புரிய அரசிற்கு அங்கீகாரம் உண்டு என்பதினாலா?அவ்வாறானால் தம்மைப் பாதுகாத்தல் தமிழருக்கு உரிமை இல்லையா?
ஆனால், இவை எல்லாவற்றையும் கண்டு கொள்ளாது ஆட்சி அதிகாரம் அற்ற இனம் என்ற ஒரே காரணத்தின் அடிப்படையில் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சர்வதேசநாடுகள் மீதும், அமைப்புக்கள் மீதும் எவ்வாறு மக்கள் நம்பிக்கை கொள்ள முடியும். அவர்களை ஒடுக்குமுறையாளர்களின் அனுசரணையாளர்கள் என்று கூறாது, நீதியின் காவலர்கள் என எவ்வாறு கூறமுடியும்?
நன்றி: ஈழநாதம்
மகிந்தவுடன் புலம்பெயர் கனடா தமிழர் போர் பிரகடனம்!

30 May, 2006
தமிழ் கவுன்சிலர் லண்டனில் 101 மணித்தியாலம் உண்ணாவிரதம்.

28 May, 2006
நாளை உலகம் முழுதும், ஓங்கி ஒலிக்கிறது உரிமைக்குரல்.
நாளை 29ந்திகதி தடைக்கு எதிரான உலகம் தழுவிய, ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள். தமிழ் உணர்வாளர்களே ஒன்று கூடுங்கள். பாராளமண்றங்களை நோக்கிய முற்றுகை.
'உலகே உனக்கு கண்ணில்லையா?"
'உலக மக்கள்தான் மக்களா? எங்கள் தமிழீழ மக்கள் என்ன கற்களா?"
அனைத்துலக மனக்கதவின் மேல் எங்கள் கரங்களை தட்டி எமது உடன் பிறப்புகளை காப்பாற்றுவோம்.
அமைதி வழிமூலம் தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளை வென்றெடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் இவ் வேளையில் சிறிலங்கா அரசும் அதனுடைய கூலிப்படைகளும்; தமிழ் மக்களை கொன்றொழித்து தமிழர்களின் சாத்வீக போராட்டத்தை நசுக்க முயற்சிக்கின்றன. இவர்கள் குழந்தைகள் சிறுவர்கள் என்று கூட பார்க்காமல் நான்கு மாத குழந்தை, நான்கு வயுது குழந்தைகளை கொல்லுகிறார்கள்.
நியுூசிலாந்து தமிழ் மக்கள், சிறிலங்கா அரசாங்கத்தின் இனப் படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் முகமாக கவனயீர்ப்பு போரட்டம் ஒன்றை வெலிங்டனிலும, நீர் கூட அருந்தாமல், ஒருநாள் உண்ணாவிரத்தை ஒக்லாந்திலும் நடாத்துகிறார்கள்.
ஒக்லாந்து - உண்ணாவிரதப் போராட்டம்
காலம்: 29.05.2006 (திங்கட்கிழமை)
நேரம்: காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை
இடம்: அயோத்தியா சதுக்கம் ஒக்லாந்து நகர மையம்
வெலிங்டன் - கவனயீர்ப்பு போரட்டம்
காலம்: 30.05.2006 (செவ்வாய்கிழமை)
நேரம்: மதியம் 12.15 மணி முதல் 1.30 மணிவரை
இடம்: பாராளுமன்றம் முன்பாக
எமது இனத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகளை சர்வதேச உலகத்திற்கு எடுத்துச் சொல்லும் இறுதித் தருணம் இது என்பதால் அனைத்;து தமிழ் மக்களையும், மனிதாபிகளையும் உணர்வெழுச்சியுடன் வந்து இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
மனிதாபிமானம் உள்ள உலகத் தமிழினம் அனைத்தும் ஒன்று திரண்டு திடசங்கற்ப்பம் கொண்டிருக்கும் இவ்வேளை நியுூசிலாந்து தமிழர்களாகிய நாங்களும் எழுந்து எமது இனத்தின் உயிர்களை காக்க முயல்வோம்.
'புலம் பெயர் தமிழர்களாகிய எமது குரல்களே ஈழத்தமிழர்களின் உயிரைக் காக்கும்.
தமிழ் மக்கள் மீது தொடரும் சிறீலங்காவின் மனிதப்படுகொலை நடவடிக்கைகளை தடுத்துநிறுத்திட உதவிடுமாறு உலக சமூகத்தினைக் கோரி
உரிமைக்குரல்!
29 மே 2006 - திங்கட்கிழமை
இடம்: Sergels Torg, Stockholm
நேரம்: 14.00
(ஊர்வலமாக பாராளுமன்றம் நோக்கி செல்லல்)
சிறிலங்காவின் முப்படைகளும், துணைப்படைகளும் இணைந்து நடத்தும் இன அழிப்பு வன்முறைகள் சமாதான காலத்தில் - சர்வதேச சமூகத்தின் கண்முன்னே - தினசரி நடந்தேறுகின்றது.
தமிழின அழிப்பை நோக்காகக் கொண்டு திருமலை - யாழ்ப்பாணம் - மட்டக்களப்பு உள்ளடங்கலாக தமிழர் நகரங்களும் கிராமங்களும் கொலைக்களங்களாக்கப்பட்டு வருகின்றது.
பலநு}று மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மிகப்பெரும் படுகொலைகளை தடுத்து நிறுத்தி சிறீலங்காவின் இனஅழிப்பு நோக்கிற்கு எதிரான சர்வதேச கவனஈர்ப்பைக் கோரி அணிதிரளும் மிகப்பெரும் தேசியப் பணி இது!
சர்வதேச சமூகமே...
சிறிலங்காவின் இன அழிப்பை தடுத்து நிறுத்து!
ஆக்கிரமிப்புப் படைகளே தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறு!
போர்க்குற்றம் புரியும் சிறிலங்காவை குற்றக்கூட்டில் நிறுத்து!
தமிழர் விடுதலைக்கான குரலை அங்கீகரி !
தமிழர்களின் தேசிய தலைமைக்கு மதிப்பளியுங்கள்!
எங்கள் வேர்கள் ஆழப் பதிந்த தாயகத்தின் பாதுகாப்பிற்குக் குரல்கொடுப்பது எங்கள் சனநாயக உரிமை!
அனைவரும் வாருங்கள் - அனைத்துலகையும் திரும்பிப்பார்க்க வைப்போம்!
தொடர்புகள்: ராஜன்: 070 594 20 47
புனிதா: 070 759 30 88
வடக்கு-கிழக்கில் இடம்பெறும் மனிதப் படுகொலைகளையும் அவர்களது பாதுகாப்பை சர்வதேச சமூகம் உறுதிப்படுத்தத் தவறியதையும் கண்டித்து புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரும் உரிமைக்குரல் ஒன்றுகூடல்.
புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் இந்த உரிமைக்குரல் ஒன்றுகூடலுக்கு அவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களும் தம் ஆதரவை நல்கி, எமது மக்களின் துன்பங்களையும் துயர்களையும் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
மனித உரிமைகளையும் மனித உரிமை மீறல்களையும் பற்றி கண்டனங்களை வெளியிடும் சர்வதேச சமூகம், 4 மாத, 4 வயது குழந்கைள் உட்பட 13 அப்பாவி பொதுமக்கள் ஓரிரவில் அல்லைப்பிட்டியில் கொல்லப்பட்டது தொடர்பாக எந்தவித கண்டனங்களும் தெரிவிக்காமல் மௌனம் சாதிப்பதைக் கண்டித்து அவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களும் தமிழ் அன்பர்களும் சிட்னி, மெல்பேர்ன், கன்பரா, பிறிஸ்பேர்ன் நகரங்களிலிருந்து, பெருந்திரளாக கன்பராவில் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக கூட இருக்கின்றார்கள்.
அன்புத் தமிழ்ச் சமூகமே,
அல்லலுறும் எம்மக்களின் துயர்தீர்க்கவும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உங்கள் பங்களிப்பைச் செய்ய வேண்டிய காலம் இது. அனைவரும் பெருந்திரளாக ஒன்றுகூடி, எமது ஒருங்கிணைந்த எதிர்ப்பை சர்வதேச உலகிற்கு எடுத்துக்காட்டவும் சர்வதேசத்தின் கவனத்தை எம்மக்களின் பால் திசை திருப்பவும் ஒன்று கூடுங்கள்.
காலம்: மே மாதம் 29 ஆம் திகதி (திங்கட்கிழமை)
நேரம்: காலை 10 மணி
இடம்: கன்பரா பராளுமன்றத்திற்கு முன்பாக
சிட்னியில் பிரயாண ஒழுங்குகளுக்கும் மேலதிக விபரங்களுக்கும் ஜெகன் 0410 310 499, 02-9642 1126 ஆகிய இலக்கங்களில் தொடர்பு கொள்ளவும்.
மெல்பேணில் பிரயாண ஒழுங்குகளுக்கும் மேலதிக விவரங்களுக்கும் டொக்டர் சிவா 03-9803 6239 அல்லது சிவகுமார் 0404 894 591 ஆகியோருடன் தொடர்பு கொள்ளவும்.




23 May, 2006
தடையை நிறுத்த, புலம்பெயர் தமிழரால் முடியும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கையை தடுத்து நிறுத்துவது புலம் பெயர் தமிழரின் கைகளில் உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளவுள்ள விடுதலைப்புலிகளிற்கு எதிரான நடவடிக்கையை தடுத்து நிறுத்துவது புலம் பெயர் தமிழர்களின் கைகளில் உள்ளது என பெயர் குறிப்பிடதா ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஐரோப்பிய ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு சிறிலங்காவின் சரியான நிலைப்பாடு தெரியாது இறமையுள்ள இலங்கை என்ற நாட்டு அரசிற்கு எதிராக தீவிரவாத அமைப்பு ஒன்று போராடுகின்றது என்று தான் பெரும் பாலான ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு தெரியும். தமிழர்களின் உரிமை போராட்டம் பற்றி எதுவும் தெரியாது. எனவே உண்மை நிலையை ஐரோப்பிய மக்களிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் எடுத்துச் செல்வது புலம் பெயர் தமிழர்களின் பொறுப்பு
அண்மையில் அடக்குமுறையில் இருந்து சேர்பிய போன்ற பல ஐரோப்பிய நாடுகளை விடுவிப்பதற்கு உதவியளித்த ஐரோப்பிய ஒன்றியம் தமிழர்கள் விடயத்தில் தலைகீழாக நடந்து கொள்வது தமிழர்களின் பிரசினையை ஐரோப்பிய நாடுகள் சரியாக புரிந்து கொள்ளமையே என்று தெரிவித்தார்.
நன்றி>பதிவு.
யாழ்நூலகம் அது தமிழர்களின் ஆயுதம்.

21 May, 2006
ஜரோப்பிய தடையை எதிர்த்து, லண்டனில் ஆர்ப்பாட்டம்.
தமிழ்தேசியத்தை மீண்டும் ஆதரித்த உள்ளூராட்சி தேர்தல்.
தமிழர் தாயகத்தில் நடத்தப்பட்ட சிறிலங்காவின் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய வெற்றியடைந்துள்ளதன் மூலம் தமிழ்த் தேசியத்தின் மீதான தமிழ் மக்களின் பற்றுதல் மீண்டும் ஒருமுறை சர்வதேச அரங்கத்தின் முன்பாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழீழத்தில் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது.
அம்பாறையில் மொத்தம் 18 உள்ளுராட்சி சபைகள் உள்ளன. இவற்றில் 12-க்கு தேர்தல் நடத்தப்பட்டன.
திருகோணமலையில் 13 உள்ளுராட்சி சபைகளுக்கு 12-க்கு தேர்தல் நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் 45 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில், நாவிதன்வெளி, நிந்தாவூர் பிரதேச சபைகளுக்கான தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
திருகோணமலை நகர சபை மற்றும் 5 பிரதேச சபைகளை இரு மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்ரியுள்ளது.
அம்பாறை நகர சபை, காரைத்தீவு, திருக்கோவில், ஆலையடி வேம்பு, சம்மாந்துறை உள்ளிட்ட பிரதேச சபைகளுக்கு அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் நடத்தப்பட்டது.
திருக்கோவில் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபைகளைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருக்கோவில் பிரதேச சபையின் 9 இடங்களையும் புதிதாக உருவாக்கப்பட்ட காரைத்தீவு பிரதேச சபையின் 5 இடங்களில் 4 ஐயும் கைப்பற்றியுள்ளது.
திருக்கோவில் பிரதேச சபைத் தேர்தலில் மொத்தம் 98.29 விழுக்காடு வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளது.
காரைத்தீவில் 67.05 விழுக்காடு வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளது.
வெருகல் பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியின்றி கைப்பற்றியுள்ளது.
இது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஈச்சிலம்பற்று அரச அதிபரின் பிரிவுக்குட்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் உள்ளது.
வெருகல் பிரதேச சபையின் தலைவராக சபாபதிப்பிள்ளை சௌந்திரராஜவும் வைரன் நாகேந்திரன் பிரதித் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் 2 நகர சபைகள் மற்றும் 10 பிரதேச சபைகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு 66 ஆண்டுகால பழமை வாய்ந்த திருகோணமலை நகரசபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
மேலும் 12 இடங்களில் 10 இடங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
தமிழீழத்தின் தலைநகரமான திருகோணமலை நகர சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 75.06 விழுக்காடு வாக்குகளைப் பெற்று தமிழர் தாயகம்தான் திருகோணமலை என்று நிரூபித்து சிங்களவர்களின் செவுளில் அறைந்துள்ளது.இதர 2 இடங்களை சுயேட்சைக் குழுவினர் வென்றுள்ளனர்.
திருகோணமலை நகரசபைத் தேர்தலில் போட்டியிட்ட ஜே.வி.பி. 4.10 விழுக்காடு. துணை இராணுவக் குழுவினரான ஈ.பி.டி.பி. 1.19 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 உறுப்பினர்களில் சாகுல் ஹமீட் என்ற முஸ்லிம் மற்றும் ஒரு பெண் ஆகியோர் அடங்குவர்.
எஸ். கௌரிமுத்துநாதன், கே. செல்வராசா, கே. துரைராசா, ஜே. புலேந்திரராஜ், பி. முனியாண்டி, எஸ். அருட்செல்வம், டி. கரிகாலன், ஆர்.என்.வரதன், ஏ.எச். சாகுல் ஹமீட், ஆர். கண்மணி அம்மா ஆகியோர் திருகோணமலை நகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராவார்.
திருகோணமலையில் 1884 ஆம் ஆண்டு இங்கிலாந்து ஆட்சியின் கீழ் உள்ளுராட்சி நிர்வாக முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
1933 ஆம் ஆண்டு வரை உள்ளுராட்சி சபை என்ற பெயரில் திருகோணமலை நிர்வகிக்கப்பட்டது.
1933 ஆம் ஆண்டு முதல் 1939 ஆம் ஆண்டு வரை உள்ளுராட்சி அபிவிருத்தி சபை என்று அது மாற்றப்பட்டது.
1940 ஆம் ஆண்டு சனவரி 1 முதல் நகரசபையாக அது உயர்த்தப்பட்டது. இருப்பினும் திருகோணமலை நகரசபையை மாநகர சபையாக மாற்ற வேண்டும் என்று அம்மக்கள் தொடர்ந்து எழுப்பி வரும் கோரிக்கை கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.
1994 ஆம் ஆண்டு திருகோணமலை நகரசபை தேர்தல் நடத்தப்பட்டபோதும் 1999 ஆம் ஆண்டு அது கலைக்கப்பட்டது. அதன் பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தினாலே நேரடியாக திருமலை நகரசபை நிர்வகிக்கப்பட்டு வந்தது.
சிறிலங்கா அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்ததிற்கமைய மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு 1998 ஆம் ஆண்டு வடக்கு - கிழக்கு மாகாண சபையின் தலைநகராக திருகோணமலை இயங்கி வருகிறது.
திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பறியுள்ளது. பிரதேச சபையின் 9 இடங்களில் 6 இடங்களைக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. மொத்தம் 60.55 விழுக்காடு வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளது.
இங்கு போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 19.87, ஐக்கிய தேசியக் கட்சி 13.68, ஜே.வி.பி. 4.74, துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி. 1.16 விழுக்காடு வாக்குகளையே பெற்றனர்.
மூதூர் பிரதேச சபையை சுயேட்சைக் குழுவாகப் போட்டியிட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எம். தௌபீக் தலைமையிலான குழு கைப்பற்றியது. 11 இடங்களில் 7 இடங்களை சுயேட்சைக் குழுவினரும் 4 இடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கைப்பற்றியுள்ளது.
மூதூரில் சுயேட்சைக் குழுவினர் 58.45 விழுக்காடு வாக்குகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 41.35 விழுக்காடு வாக்குகளையும் ஈ.பி.டி.பி. 0.12 விழுக்காடு வாக்கினையும் பெற்றுள்ளன.
கிண்ணியா பிரதேச சபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளது.
இதில் ஒரு இடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்றுள்ளது.
குச்சவெளி பிரதேச சபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பறிய போதும் 5 இடங்களில் 4 இடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்றுள்ளது.
குச்சவெளியில் ஐக்கிய தேசியக் கட்சி 38.73 விழுக்காடு வாக்குகளையும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 37.64 விழுக்காடு வாக்குகளையும் பெற்றுள்ளது.
ஈ.பி.டி.பி. 0.57 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது.
சேருவில பிரதேச சபையில் 5 இடங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் ஒரு இடத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 2, ஜே.வி.பி. 1 இடங்களையும் பெற்றுள்ளன.
கடந்த முறை நடைபெற்ற சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தலைச் சந்தித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தற்போதும் போல் தமிழர் தாயகம் முழுமைக்கும் பாரிய வெற்றி பெற்று தமிழ்த் தேசியத்தின் மீதான தமிழர்களின் பற்றுதலை- தமிழீழத் தேசியத் தலைமையின் மீதான நம்பிக்கையை தமிழர்கள் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.
20 May, 2006
என் இனமே, என் சனமே, உலகத்தமிழினமே.


அல்லைபிட்டி என்ற ஒரு கிராமம் கை விடப்படுகிறது.
விடுதலைப் புலிகள் இனி சுயாதீனமாக செயற்படுவார்கள்.
சர்வதேச சமூகத்தைப் புறக்கணித்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போது சுயாதீனமாக செயற்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத் தீர்மானம் குறித்து அவர் கூறியுள்ளதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நடவடிக்கையானது அமைதி முயற்சிகளில் எதிர்விளைவை உருவாக்கும். சர்வதேச சமூகத்தை புறக்கணித்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இப்போது சுயாதீனமாக இயங்க முடியும்.
எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச சமூகம் பொறுப்பாக்க முடியாது.
இந்தத் தடையால் நிதி திரட்டல் மற்றும் ஆயுதக் கொள்வனவுக்கு தடை ஏதும் இல்லை. வேறு வழிகளில் இத்தடைகள் எதிர்கொள்ளப்படும்.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட போதும் அதனது நடவடிக்கைகள் தொடரவே செய்தன என்றார் அவர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறுகையில், தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கக் கூடாது. ஆனால் பேச்சுக்களை நடத்துவதற்கான மேலதிக சந்தர்ப்பங்களை பயன்படுத்த வேண்டும் என்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்துவிடுவதால் மட்டுமே வடக்கு கிழக்குப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது என்று முஸ்லிம் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஹசன் அலி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்னரே விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட போதும் இலங்கையில் புலிகள் செயற்பாடுகளுக்கு எதுவித பாதிப்பும் இல்லை. ஐரோப்பிய ஒன்றியத் தடைக்குப் பின்னரும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
யுத்த நிறுத்தம் மற்றும் இராணுவப் பிரச்சனைகளை மட்டுமே பேசிக் கொண்டிருப்பதால் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. பேச்சு முறைகளில் மாற்றம் வேண்டும் என்றார் அவர்.
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத் தீர்மானத்தை ஜே.வி.பி. வரவேற்றுள்ளது.
ஐரோபிய ஒன்றிய நாடுகள் அனைத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகளை முழுமையாகத் தடை செயய் வேண்டும் என்று ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார்.
நன்றி>புதினம்
உருப்படாத நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா.
உலகில் உருப்படாத நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா இணைக்கப்பட்டிருக்கின்றது ரூவண்டா,எதியோப்பிய மற்றும் சில ஆசிய வறிய நாடுகளும் இப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளான.
28 நாடுகளை உருப்படாத நாடுகளின் பட்டியலை அமெரிக்கவை தளமாக கொண்டு இயங்கும் அமைதிக்கான நிதி வெளியுறவு கொள்கைகளிற்கான மையம் வெளியிட்டுள்ளது.
நன்றி>புதினம்
19 May, 2006
ஈழத்தமிழர் பயங்கரவாதிகளா?
சர்வதேசமும் சிறிலங்காவும் கூறுவது போல் தமிழர்கள் பயங்கரவாதிகளானால் இலங்கைத் தீவே சுடுகாடாகிவிடும் என்று தமிழீழ நிதித்துறைப் பொறுப்பாளர் செ.வ. தமிழேந்தி எச்சரித்துள்ளார்.
கிளிநொச்சியில் நிதித்துறைச் செயற்பாட்டாளர்களிடையே நேற்று வியாழக்கிழமை நடந்த சமகால அரசியல் கருத்தரங்கில் செ.வ.தமிழேந்தி பேசியதாவது:
இலங்கைத் தீவில் எங்கள் இனத்தின் இருப்பை நிலை நிறுத்திக் கொள்வதற்காக- இலங்கைத் தீவில் தமிழர் தங்கள் இருப்பை- தங்கள் தாயகத்தில் தமிழீழத்தில் நிலைப்படுத்திக்கொள்வதற்காக- இலங்கை விடுதலை பெறுவதற்கு முன்பே பல்வேறு அமைதி வழி முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன.
வெள்ளைக்காரரிடமிருந்து இலங்கை விடுதலை பெற வேண்டும் என்பதற்காக- 1944 ஆம் ஆண்டு சோல்பரி ஆணைக் குழு அமைக்கப்பட்டது. அதற்கு முன்னால் தமிழர் தரப்புக் கருத்துகளை அப்போதிருந்த ஜி.ஜி. பொன்னம்பலம் முன்வைத்தார். அவரது கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அதன் பின்னாலே இலங்கையில் ஒற்றையாட்சியின் கீழ் தமிழர் தங்கள் அனைத்து உரிமைகளோடும் வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜி.ஜி.பொன்னம்பபலம் முன்வைத்த கருத்துகள் எவையுமே ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அதற்குப் பின்னர் இணைப்பாட்சி திட்டத்தின் கீழ் ஐக்கிய இலங்கையில் கூட்டாட்சித் திட்டத்தின் கீழ் தமிழர் தங்கள் தாயகத்தில் மத, மொழி உரிமையைப் பேணி ஆட்சி புரிவதற்கான ஒரு திட்டத்தை தமிழரசுக் கட்சியின் தந்தை செல்வா முன்வைத்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி என மாறி மாறி அமைந்த சிறிலங்கா அரசாங்கங்களோடு அவர் பேசினார்.
1957 ஆம் ஆண்டு தந்தை செல்வாவுடன் பண்டா ஒப்பந்தம் செய்தார். அது பண்டா- செல்வா ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை.
1965 ஆம் அண்டு டட்லி சேனநாயக்கவுடன் ஒப்பந்தம் செய்தார். அது டட்லி-செல்வா ஒப்பதம் என அழைக்கப்படுகிறது. அதுவுமே செயலற்றதானது.
பேச்சுவார்த்தைகள் மற்றும் அறப் போராட்டங்கள் என எல்லாவற்றைய்ம் நடத்தினர். எல்லாமே தோற்றுப் போயின. எவையுமே நிறைவேறவில்லை.
1970-களில் ஆயுதப் போராட்டம் உருவாகி பல்வேறு அமைப்புகள் உருவாகின. எங்கள் விடுதலைப் போராட்டத்தில் இந்திய அரசு தலையிட்டது. இந்திரா காந்தி அம்மையார் காலத்தில் தங்களது நலன்களுக்காக எங்களுக்குப் பயிற்சி அளித்தார்கள்.
இந்திரா அம்மையார் காலத்தில் கூட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. வட்டமேசை மாநாடு ஒன்று இஙகே நடந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியினர் அதில் கலந்து கொண்டனர். அந்தப் பேச்சுக்களிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
அதற்குப் பின்னால் ஆயுதம் தாங்கிப் போராடியய அமைப்புகள் மற்றும் விடுதலைக் கூட்டணி உட்பட அன்றைக்கிருந்த அமைப்புகள் அனைத்தும் திம்புவிலே இந்திய அரசின் அனுசரணையோடு நடத்திய பேச்சுக்களும் தோல்வியடைந்தன. அந்தப் பேச்சுக்களில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
தமிழரின் ஒப்புதலின்றி தன்னிச்சையாகவே முடிவெடுத்து இந்தியா தலையிட்டது. இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தைச் செய்தது. அந்த ஒப்பந்தத்தின்படி வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபை உருவாக்கபட்டது. அதன் அதிகாரங்கள் எவையும் தமிழரது நலன்களைப் பேணுபவையாக இருக்கவில்லை.
மாகாண சபையை ஈ.பி.ஆர்.எல்.எப். ஆட்சி செய்து இந்த மண்ணை விட்டு போவதற்கு முன்னால் மாகாண சபையில் ஒரு தீர்மானம் கொண்டுவந்தனர். இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் கீழ் அமைந்த மாகாண சபை தமிழர்களுக்கு எந்த உரிமையும் தராதபடியால் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்துகிறோம் என்று போலியான ஒரு நாடகத்தை ஆடினார்கள். ஆனால் அவர்கள் சில கருத்துகளை முன்வைத்தார்கள்.
இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் கீழ் தமிழரது நலன்கள் பேணப்படவில்லை என்ற கருத்தை- இந்தியாவின் கையாட்களாக இருந்த அவர்களே முன்வைத்தனர்.
ஆக இலங்கை- இந்திய ஒப்பந்தமும் எதனையும் தமிழர்களுக்குப் பெற்றுத்தரவில்லை என்பதற்கு அவர்களுடைய அந்தத் தீர்மானம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
அதற்குப் பின்னால் பிரேமதாசவுக்கும் எங்களுக்கும் இடையே பேச்சு நடந்தது. அதுவும் தோல்வியில் முடிந்தது.
1994 ஆம் ஆண்டு சந்திரிகா பிரதமராக வந்தபோது போர் நிறுத்தம் செய்யப்பட்டு பேச்சு நடந்தது. அதுவும் தோல்வியில் முடிந்தது.
2002 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எங்கள் தலைவருக்கும் செய்யப்பட்ட உடன்பாடு- போர் நிறுத்தம் இப்போது என்ன நிலையில் இருக்கிறது உங்களுக்குத் தெரியும்.
அமைதி உடன்படிக்கை ஒன்று அப்படியே இருகிறது.
போர் நிறுத்த உடன்படிக்கை அப்படியே இருக்கிறது.
அதே நேரத்தில தமிழர் மீதான கொலை நடவடிக்கையும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
சிறிலங்கா அரசாங்கம் தன்னோடு இணைந்து நிற்கிற ஒட்டுக் குழுக்கள் மூலம் விடுதலைப் புலிகளோடு இணைந்து நின்று உழைப்பவர்களையும் தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கின்றவர்களையும் கொன்று குவித்து வருகின்றனர்.
ராஜபக்ச ஆட்சிக்கு வந்தபின்பு இந்த நிலைமைகள் மேலும் சீரழியும் நிலைக்கு வந்தன.
ஆனாலும் எங்கள் தலைவர் பொறுமை காத்தார். இந்த அரசாங்கத்தோடும் பேசவும் முன்வந்தார். ஜெனீவாவில் நடந்த பேச்சில் உடன்பாட்டுக்கும் வந்தனர்.
துணைக் குழு அல்லது ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்களைக் களைவது என்று அவர்கள் உறுதி தந்தனர்.
அதன்பின்னர் திருமலையில் தமிழ்த் தேசியத்திற்காக உழைத்த- தமிழரது மேம்பாட்டுக்காக உழைத்த- திருமலையில் தமிழர் இருப்பை பேணுவதற்காக அயராது உழைத்த விக்னேஸ்வரன் கொல்லப்பட்டர்.
அண்மையில் அல்லைப்பிட்டியில் 4 மாத குழந்தை- பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தை- அன்னைக்கும் தந்தைக்கும் நடுவே சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சியை பார்த்திருப்பீர்கள். இந்த மண்ணில் வாழும் பச்சிளம்குழந்தைக்கும் கூட பாதுகாப்பு இல்லை.
நாளைக்கு உங்கள் குழந்தைக்கும் அதே நிலை வரும். அந்த நிலை வராது என்பதற்கு உறுதி எதுவும் இல்லை.
ஆகவே வலிமை உடைய- வயது வேறுபாடின்றி- அனைத்துத் தமிழர்களும் ஆயுதப் பயிற்சி; பெறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அப்போதுதான் தமிழர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
சிங்கள இரணுவம் ஊடுருவித் தாக்குதல் நடத்துகிறது. அதனோடு ஒட்டுப்படைகளும் வருகின்றனர்.
கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமல்ல. பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
ஆகையால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான நேரமிது.
தமிழினத்தை இந்த மண்ணில் பூண்டோடு அழித்துவிட வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளை சிங்களவர்கள் நீண்டகாலமாகவே செய்து வருகின்றனர்.
யாழில் சிங்கள இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்ற
"இந்த நாட்டில் சிங்களவர்தான் வாழமுடியும்- தமிழரும் சிங்களவரும் வாழ முடியாது" கூறிவருகின்றனர்.
இது சிங்கள இராணுவத்தின் கருத்து அல்ல- சிங்களவர் மற்றும் சிங்கள அரசின் கருத்து.
வரலாற்றில் துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் நடந்த போரில் எல்லாளன் கபடமாகக் கொல்லப்பட்டான். நேருக்கு நேர் நின்று போரில் கொல்லப்படவில்லை.
போர் அறத்துக்கு மாறாக அவனது யானையைத் தாக்கி அவன் விழுகின்றபோது கொன்றார்கள். அறத்தின்பால் நேருக்கு நின்று வீழ்த்தவில்லை. வஞ்சகமாக எல்லாளனைக் கொலை செய்தார்கள்.
அந்த எல்லாளன் இந்திய ஆக்கிரமிப்பாளன் என்று சொல்லுகிறார்கள்- எங்களையும் இந்திய ஆக்கிரமிப்பாளர்கள் என்றுதான் சிங்களவர் சொல்லுகிறார்கள்;.
ஆனால் தமிழர் இந்த மண்ணின் சொந்தக்காரர்கள்.
இலங்கைத் தீவு தமிழர்களுக்கே சொந்தமானது.
சிங்களவர்கதான் இந்த நாட்டின ஆக்கிரமிப்பாளர்கள்- இந்த நாட்டினது வந்தேறு குடிகள். தமிழர் தங்களது சமகால வரலாற்றை சான்றுகளோடு எழுதி வைக்கவில்லை என்பது மிகப் பெரும் குறை. நாம் விட்ட தவறு அது.
ஆனால் கிடைக்கக் கூடிய தொல்லியல் சான்றுகள் அனைத்தும் தமிழ்ரே இந்த மண்ணின் உரிமையாளர்க்ள் என்று தெட்டத் தெளிவாக சொல்லுகின்றன.
வந்தேறி சிங்களவர்கள் தாங்கள் வந்தேறியவர்கள் என்பதால் முந்திக் கொண்டு எம்மை வந்தேறு குடிகள் என்கிறார்கள்.
அப்படியானால் இந்த மண்ணிலே தமிழர்கள் எப்படி சிறுபான்மையினராக உள்ளனர்? என்ற கேள்வி எழலாம்.
கடந்த கால வரலாற்றை- குடிசன மதிப்பீட்டை எடுத்துப் பார்த்தால் தமிழர்களைவிட சிங்களவர் பெருக்க வீதம் அதிகமாக இருந்துள்ளது.
1881 ஆம் அண்டு குடிசன மதிபபீட்டையும் 1981 ஆம் ஆண்டு கணக்கையும் ஆய்வு செய்து பார்த்தால் உண்மை புரியும்.
நூறு ஆண்டுகளில் ஏற்பட்ட குடிசன வளர்ச்சியின் படி இந்த நாட்டிலே 492 விழுக்காடு சிங்களவர்கள் பெருகியிருக்கிறார்கள்.
462 விழுக்காடு முசுலிம்கள் பெருகியிருக்கிறார்கள். ஆனால் தமிழர்களோ............
எங்களது இனம் சிறுபான்மைப்பட்டமைக்கு இதுவும் காரணம்.
சிங்களம் செய்த சதிகளால் இந்த மண்ணில் சிறுபான்மையினராக தமிழர்களாக்கப்பட்டு விட்டனர்.
துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் போர் நடந்த பின்னால் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதாக அவர்கள் வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது.
அன்றைக்கு அது இரண்டு இலட்சமெனில் இன்றைக்கு அது பல லட்சமாக இருந்திருக்கும்.
இப்படித் தமிழரக்ள் அழிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையே உள்ள இந்த முரண்பாடு இன்று நேற்று ஏற்பட்டதல்ல.
ஆயிரமாயிரமாண்டு காலமாக இருந்து வரும் முரண். அவர்கள் எம்மை அழித்துவிடவேண்டும் என்று கருதுகிறார்கள். ஆனால் நாம் அவர்களை அழிக்கவேண்டும் என்று கருதவில்லை.
அவர்களும் நாங்களும் இந்த மண்ணில் வாழ வேண்டும் என்று தமிழர் கருதுகின்றனர். அவர்களோ சிங்களவர் மட்டுமே வாழ வேண்டும் என்கின்றனர்.
அவர்கள் சொல்வது போல் வந்தேறு குடிகள் வெளியேற வேண்டுமேயானால் முதலில் சிங்களவர்கள்தான் வெளியேற வேண்டும். நாங்கள் ஒன்றும் இந்த மண்ணின் வந்தேறிகள் அல்ல.
இந்த உலகில் குமரிக் கண்டனம் என்று ஒன்று இருந்தது. அதனது வடக்கெல்லை இமயம். மேற்கு எல்லை ஆப்பிரிக்கா. தெற்கெல்லை அண்டார்ட்டிக். தென்கிழக்கு எல்லை அவுத்திரேலியா. கிழக்கு எல்லை- கிழக்கிந்திய தீவுகள்.
இதற்கிடையே ஒரு பெருந்தேசம் இருந்தது.
கடல்கோளிலே இந்த தேசம் அழிந்து போயிற்று.
இதில் எஞ்சியிருப்பது இந்தியாவும் இலங்கையும் ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் தீவும்தான்.
இந்த மண்ணிலே தோன்றிய மக்கள் நாங்கள். எங்களுக்கே உரியது இந்த மண்.
வந்தேறுகுடிகள் வெளியேற வேண்டுமானால் சிங்களவர்கள் வெளியேற வேண்டும்.
உலகின் பல பகுதிகளிலும் வந்தேறிகுடிகள்தான் வெளியேற வேண்டும்.
இந்தியா- தமிழருடைய நாடு.
3,500 ஆண்டுகளுக்கு முன்பாக ஆரியர்கள் குடியேறினார்கள். அங்கிருந்து அவர்கள் வெளியேற வேண்டும்.
அமெரிக்கா செவ்விந்தியர் நாடு. அங்கிருந்து வெள்ளைக்காரர்கள் வெளியேறிச் செல்ல வெண்டும்.
அவுஸ்திரேலியா அபோர்ஜினியர்களின் நாடு. அங்கிருந்து வெள்ளைக்காரர்கள் வெளியேற வேண்டும்.
இப்படியெல்லாம் கூறினால் நடக்கப்போவதும் இல்லை- வாய்ப்பும் இல்லை-
அந்த அந்த மண்ணில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒன்றிணைந்து வாழ்ந்தவர்களை உள்ளே போ வெளியே வா என்று சொல்வது மூடச் செயல். சிங்களவர்களுக்கு இது புரியாது. அவர்களுடைய இனவாதம் எல்லாவற்றையும் மறைத்துவிடுகிறது.
இந்த மண்ணுக்குரிய நாங்கள் எங்கேயும் போக வேண்டியதில்லை. எங்கள் மண்ணில எங்கள் இருப்பைக் காப்பாற்ற நாம் போராட வேண்டும்.
இலங்கை விடுதலை அடைகிற போது நீர்கொழும்பில் 53 தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் இருந்தன. இன்றைக்கு ஒரே ஒரு பள்ளிக்கூடம் மட்டுமே இருக்கிறது. மற்ற பள்ளிக்கூடங்கள் எல்லாம் சிங்களப் பள்ளிக்கூடங்களாக மாற்றப்பட்டுவிட்டன.
தமிழ் மூலம் கற்பிக்கக் கூடிய ஆசிரியர்களை அந்தப் பள்ளிகளுக்கு நியமிக்காமல் நிறுத்தி சிங்கள ஆசிரியர்களை அமர்த்தினார்கள். சிங்கள மொழியிலே கல்வி கற்பித்து படிப்படியாக அங்கே எங்கள் இனமே இல்லாமல் முற்றாக அழித்தொழித்திருக்கிறார்கள்.
நீர்கொழும்பில் இன்றைக்கு சிங்களவர் என்று சொல்லிக் கொண்டு வாழ்கிறவர்கள் யார் என்றால் இலங்கை விடுதலையடைவதற்கு முன்பு தமிழர்களாக இருந்தவர்கள்தான்.
நீர்கொழும்பிலும் மட்டுமல்ல. சிலாபத்திலும் தெற்குப் பகுதியிலும் வாழ்ந்த தமிழர்களும் இவ்வாறு மாற்றப்பட்டவர்களே.
ஒரு இனத்தினது பயிற்று மொழி அழிந்தால் அந்த இனமே அழிந்து போகும்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து பீஜி, மொரீசியஸ், தென்னாப்பிரிக்கா என்று பல்வேறு நாடுகளுக்கும் தமிழர்கள் தொழிலாளர்களாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
இன்றைக்கு அங்கே வாழ்கிற அவர்கள் யாருக்குமே தமிழ் தெரியாது. அவர்கள் இனமாற்றம் அடைந்து விட்டனர்.
ஏன் உங்களுடைய உறவினர்கள் இன்றைக்கு வெளிநாடுகளில் வாழ்கிறார்களே- அவர்களில் எத்தனை பேருக்கு தமிழ் தெரியும்.?
இங்கிருந்து போனவர்கள் மட்டும் தமிழ் பேசுகின்றனர். 4 வயதில் போனவர்கள் கூட தமிழை மறந்துவிட்டனர். ஏனென்றால் தமிழைப் படிக்கக் கூடிய வாய்ப்பு இல்லை.
மொழி என்பது ஒரு இனத்தினது அடையாளம்- உயிர். அது இல்லாது போனால் அந்த இனம் தனது அடையாளத்தை இழந்துவிடும்.
கனடவில் 3.5 இலட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால் மூவாயிரம் பிள்ளைகள்தான் தமிழைப் படிக்கிறார்கள் அப்படியானால் அங்கே உள்ள நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும்.
தங்கள் இனத்தின் அடையாளத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கருதுகிற பெற்றோர், தங்கள் பிள்ளைகள் தமிழில் கற்க வேண்டு என்கிற பெற்றோர் பிள்ளைகளுக்கு வீட்டிலே தமிழைச் சொல்லிக்கொடுக்கிறார்கள். அதை பொருட்படுத்தாதவர்கள் விட்டுவிட்டார்கள்.
பெற்றோருக்கு அந்த நாட்டு மொழி தெரியாததால் பெற்றாருடன் பிள்ளைகள் தமிழில் கதைக்க வேண்டியிருக்கிறது. எழுதவோ படிக்கவோ அவர்களுக்குத் தெரியாத நிலையும் உள்ளது.
இந்த நிலைமை தொடருமானால் வெளிநாட்டுக்குப் போன தமிழர்கள் இனமாற்ம் அடைந்து விடுவார்கள்.
தமிழீழத்தில் எங்கள் எண்ணிக்கையில் அரைவாசிப் பேர் வெளியே சென்றுவிட்டனர். அவர்களில் மிகக்குறந்த எண்ணிக்கையே இங்கே திரும்பி வருவர்.
தமிழ் மறந்து போன தமிழ்ச் சிறார் இங்கே வரப்போவதில்லலை. அடுத்த தலைமுறை வருமா என்பதும் உறுதியில்லை.
இந்த மண் விரைந்து விடுதலையடைந்தால் அவர்கள் வரலாம். இந்த விடுதலைப் போராட்டம் தொடர்ந்தும் 30 ஆண்டுகள் இழுபட்டால் வாய்ப்பு மிக மிகக் குறைவு.
மொழி அழியவும் அழிக்கப்படவும் கூடியது. அதைத்தான் சிங்கள அரசாங்கம் இங்கே செய்து கொண்டிருக்கிறது.
நீர்கொழும்பிலும் சிலாபத்திலும் செய்ததை மலையகத்திலும் செய்ய முயற்சிக்கின்றனர். மலையகத்தில தமிழ் ஆசிரியர்களை நியமிப்பதை நிறுத்திவிட்டு சிங்கள ஆசிரியர்களை நியமிக்கிறார்கள்.
அச்சத்தின் காரணமாக மலையகத்தில் சிலர் தங்களது பெயரை சிங்களப் பெயராக மாற்றிக் கொண்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்திலும் கூட தமிழர்கள் முஸ்லிம்களாகவும் சிங்களவர்களாவும் தங்களை மாற்றிக்கொள்ள முனைந்திருப்பதை அறிந்தபோது மிகவும் துயரப்பட்டேன்.
இனம் மாற்ற நடவடிக்கைக்கு புறம்பாக வன்முறைகள் மூலமாக இந்த மண்னில் காலத்துக்கு காலம் தமிழர்கள் எப்படியெல்லாம் கொல்லப்படிருக்கிறார்கள் என்பது உங்கள் எல்லோருக்கு ;தெரியும்.
1958, 77, 81, 83 ஆண்டுகளில் சிங்கள அரசுகளின் துணையோடு சிங்கள இனவாதிகள் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளில் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு தமிழினம் அழிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு இனத்தைக் கொல்வதினால் மட்டும் அந்த இனம் அழிக்கப்படுவதில்லை. பொருளாதாரம்- கல்வி- நிலம் பறிக்கப்படுவதூடாகவும் அழிக்கப்படுகிறது.
1891 இல் தென் தமிழீழத்தில் 5,947 சிங்களவர்கள் இருந்தார்கள். 75 ஆயிரம் தமிழர்கள் இருந்தனர். 43 ஆயிரம் முஸ்லிம்கள் இருந்தனர்.
100 ஆண்டுகளுக்குப் பின்னைய புள்ளிவிவரப்படி 1981 இல் தென் தமிழீழத்தில் 4 இலட்சத்து 11 ஆயிரம் தமிழர்கள், 2 இலட்சத்து 50 ஆயிரம் சிங்களவர்கள்- 3 இலட்சத்து 19 ஆயிரம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.
சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் சேர்த்தால் தமிழர்கள் சிறுபான்மையாகி விடுவர்.
12 தமிழருக்கு ஒரு சிங்களவர் என்ற நிலை அன்று இருந்தது. இன்றைக்கு ஒரு சிங்களவருக்கு 2 தமிழர் கூட இல்லை என்ற நிலைமை உருவாகியுள்ளது.
இன்றைக்கு வன்முறைகள் எங்கள் மண்ணிலேயே நடக்கிறது. சிங்கள அரசங்கத்தின் ஒப்புதலோடு இந்தப் படுகொலை நடக்கிறது. இந்தப் படுகொலை வரிசையின் கடைசிதான் அல்லைப்பிட்டி படுகொலை.
எங்கள் இனத்தின் விடுதலைக்குப் போராடுவது பயங்கரவாதம் என்று சிறிலங்கா சொல்கிறது. இலங்கையிலிருந்து நன்மை பெற வேண்டிய சில நாடுகள் அதற்கு சங்கு ஊதுகின்றன.
அமெரிக்காவிலிருந்து ஒரு அமைச்சர் வந்தாராம். உலகத்திலேயெ இருக்கிற மிகப்பெரிய பயங்கரவாத இயக்கம் விடுதலைப் புலிகள் என்று சொல்லியிருக்கிறார்.
நாங்கள் ப்யங்கரவாதிகள் அல்லர்-
எங்கள் இன விடுதலைக்காக போராடுகிறோம்.
சிங்களவர்களும் நாங்களும் இணைந்து வாழ வேண்டும் என்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம்.
சிங்களவர்களுக்கும் உலகத்துக்கும் நாங்கள் ஒன்றைச் சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
தமிழரை இந்த மண்ணிலிருந்து முற்றாக அழிக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கையை சிங்களவர்கள் மேலும் எடுப்பார்களேயானால்- நங்கள் பயங்கரவாதிகளாக மாறினால் இலங்கைத் தீவு அழிந்துவிடும் என்பதை சிங்களவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
கண்டிப்பாக இலங்கைத் தீவு அழியும்.
தமிழர் இந்த மண்ணில் வாழ முடியாது போனால்- தமிழர்கள் பயங்கரவாதிகளாக மாறினால் இலங்கைத் தீவு அழிந்துபோகும்.
சிறிலங்காவும் அதற்கு வழிபாடு ந்டத்தும் நாடுகளும் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
எங்களுக்கு வாழ்வில்லை என்கிற போது கைகட்டி வாய்பொத்தி பார்த்திருக்க வேண்டியதில்லை. எல்லாவற்றையும் அழித்துவிட்டு நாங்களும் அழிந்துவிடலாம் என்ற முடிவுக்கு வரலாம்.
அப்படியான முடிவை நாங்கள் எடுத்தால் இலங்கைத் தீவு சுடுகாடாக மாறாகும்.
சிங்களப் பகுதிகளளைத் தாக்குவது ஒன்றும் விடுதலைப் புலிகளுக்கு சிக்கலான விடயம் அல்ல.
எங்கள் தேசியத் தலைவரை ஒரு பயங்கரவாதி என்கிறார்கள்-
என்ன காரணத்துக்காக சொல்கிறார்கள்? பிரபாகரன் செய்த குற்றம் என்ன?
- தமிழர் இந்த மண்ணில் அழிந்துபோகாமல் இருப்பதற்காக பிரபாகரன் போராடுவதுதான் அவர் செய்த குற்றம
- தமிழர் தாய்மண்ணை மீட்டெடுக்க போராடுவதுதான் பிரபாகரன் செய்கிற குற்றம
அது குற்றமாகுமேயானால்
அந்தக் குற்றத்தை
அந்தப் பயங்கரவாதச் செயலைக
கோடி முறையும
எல்லாத் தமிழர்களும் செய்ய அணியமாக வேண்டும்.
அதைத்தான் இந்த இலங்கை விரும்புமேயானால் வேறுவழியில்லை.
எப்படியாவது விடுதலைப் புலிகளின் தலைவரை அழித்துவிடலாம் என்று சிங்கள அரசு முயற்சித்து வருகிறது. அதற்குத்தான் ஊடுருவல் நடத்துக்கிறார்கள்.
உங்கள் தலைவர் மீது அளப்பரிய பற்று வைத்திருக்கிறவர்கள் நீங்கள்-
உயிரைவிட நீங்கள் அவரை மதிக்கிறீர்கள்-
அவர் இல்லையெனில் கண்டிப்பாகத் தமிழினம் இல்லை.
உலகம் முழுவதும் 8 கோடித் தமிழர்கள் வாழ்வதாகச் சொல்லுகிறார்கள். இந்தியாவிலும் 6 கோடித் தமிழர்கள் அடிமைகளாக வாழ்கின்றனர்.
தங்களைத் தமிழர் என்று சொல்ல முடியாத நிலை உள்ளது. எந்தப் பதிவிலும் இந்தியர் என்றுதான் பதிய வேண்டும்.
தமிழர் என்ற ஒரு இனம் தன் இன அடையாளத்தை இருப்பை வெளிப்படுத்டும் ஒரே இடம் இந்த மண். அதனால்தான் எங்கள் தலைவரை இல்லாது ஒழித்துவிட்டால் உலகில் தமிழினம் என்பதையே இல்லாது செய்துவிடலாம் என்று கருதுகிறார்கள்.
தமிழர்கள் இங்கே விடுதலையடைந்து விட்டால் தமிழ்நாட்டிலும் அந்த சிக்கல் உருவாகுமோ என்று இந்தியா அஞ்சுகிறது.
இந்திய நடுவன் அரசு அஞ்சுவது போல் எதுவும் நடக்காது.
எங்கள் தலைவரது வாழ்வுதான் தமிழரது வாழ்வு.
எங்களிடம் மானம் ஒன்றுதான் உள்ளது.
அந்த மானத்தை விட்டு விடப் போகிறோமா என்று முடிவு செய்ய வேண்டும்.
தமிழர் இந்த உலகத்துக்கு நாகரீகம்- பண்பாட்டை கறுத்தந்தவர்கள். நாம் பெருமைப்பட வேண்டும்.
வீரர்கள் நிறைந்த இனம் என்று இன்று பொருள்படும் படியான நிலைமையைத் தலைவர் உயர்த்தியிருக்கிறார்.
தமிழ் மொழி உலகின் முதலாவது மொழி. தமிழர் தான் உலகில் முதலில் தோன்றியவர்கள் என்று ரசியாவின் ஆய்வாளர் சொல்லியிருக்கிறார். இந்துமாக்கடல் மர்மங்கள் என்ற பெயரில் அவரது நூல் தமிழில் வெளி வந்துள்ளது.
நாங்கள் தொன்மை மிக்க நாகரிகத்தையும் உலகத்துக்கு பண்பாட்டையும் கொடுத்தவர்கள். உலகில் தமிழ், சமஸ்கிருதம், கீப்ரூ, லத்தீன், கிரீக், சீனம் ஆகியவை மூத்த மொழிகளாக சொல்லப்படுகின்றன.
தற்போது லத்தீனும் சமஸ்கிருதமும் செத்த மொழிகள் என்று சொல்லப்படுகின்றன.
இந்த மொழிகளில் ஒன்று கீப்ரு. யேசுநாதரின் மொழி எபிரேயம். அது அழிந்த மொழி.
உலகம் முழுவதும் ஒன்றரை கோடி யூதர்களே இருக்கின்றனர். ஜெர்மானியர்கள் அந்த யூதர்களை படாதபாடுபடுத்தினர். யூதர்களைக் கொண்டு புதைகுழிகளைத் தோண்டி அதற்குள் யூதர்களையே புதைத்தார்கள்.
இத்தனை கொடுமைகளுக்கும் இடையேய தங்களது தேசத்தை அவர்கள் உருவாக்கினார்கள். இஸ்ரேல் உருவாக்கப்ட்டது. இஸ்ரேலை எதுவும் செய்ய முடியாத படி இன்று வளர்ந்துள்ளனர்.
மொத்தம் இஸ்ரேலிய மக்கள் தொகை 50 இலட்சம் பேர்தான்.
உலகில் பல்வேறு நாடுகளில் 100 கோடி முஸ்லிம்கள் இருக்கலாம். இத்தனை கோடி முஸ்லிம்கள் இருந்தும் யூதர்களை எதுவும் செய்ய முடியவில்லை. ஏனெனில் அவர்களது இனப்பற்று காரணம்.
தங்களது தேசத்துக்காக எதையும் செய்யத் தயார் என்று அவர்கள் இருப்பதால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
யூதர்கள் ஒன்றரை கோடி பேரும் யூதர் என்ற எண்ணத்தோடு யூத தேசியம்- இஸ்ரேல் என்ற எண்ணத்தோடு உள்ளனர்.
அமெரிக்கா யூதர்களைப் பக்க பலமாக பாதுகாத்து வருகிறது. அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் மட்டும் 20 இலட்சம் யூதர்கள் வாழ்கின்றனர்.
அமெரிக்காவினது அரசியலை தீர்மானிக்கிற- பொருளாதாரத்தை தீர்மானிக்கிற மிகப் பெரும் சக்தியாக யூதர்கள் உள்ளனர். அவர்களை விஞ்சி அமெரிக்காவால் எதுவும் செய்ய முடியாது.
எந்த அமெரிக்கக் குடியரசுத் தலைவரும் யூதர்களுக்கு மாறாக எதுவும் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அடுத்த முறை ஆட்சிக்கு வரமுடியாது.
- யூதர்கள் தங்கள் தேசத்தை நேசிக்கிறார்கள
- இஸ்ரேலுக்காக எல்லாவற்றையும் நேசிக்கிறார்கள
- தங்கள் தேசத்தின் நினைவுகளோடு- தேசத்தைக் கட்டியெழுப்பும் நினைவோடு உறங்குகிறார்கள்- வாழ்கிறார்கள்.
வெளிநாடுகளில் உள்ள ஒரு தொகை தமிழர்கள் தங்கள் தேசத்தை நேசிக்கிறவர்களாக இருகின்றனர். அதற்காக உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
வன்னியை இரண்டாகப் பிரித்து தொடங்கப்பட்ட ஜெயசிக்குறு நடவடிக்கையை முறியடித்த வெற்றிக்குப் பின்னால் வெளிநாட்டுத் தமிழர்கள் இருக்கின்றனர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அந்தத் தமிழர்கள் அளித்த நிதியிலிருந்து வாங்கப்பட்ட போர்க்கருவிகள்தான் அந்த வெற்றிக்குத் துணையாக இருந்தன.
ஆனையிறவு தளம் 350 ஆண்டுகளாக மாற்றாரின் கையில் இருந்தது.
யாழ்ப்பாணத்தைப் போர்த்துகேயர் கைப்பற்றியபோது வன்னி தனித்து இயங்கியது.
வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு யாரும் ஊடுருவிவிடக் கூடாது என்பதற்காக ஆனையிறவில் தடை முகாம் அமைத்தனர்.
அதன் பின்னர் அந்த முகாம் ஒல்லாந்தரால் பேணப்பட்டது. பின்னர் யாழை பிரிட்டிசார் கைப்பற்றினர். பண்டாரவன்னியனையும் தோற்கடித்து வன்னியைக் கைப்பற்றினர்.
அதற்குப் பின்னர் சிங்கள அரசாங்கத்தின் கைக்கு ஆனையிறவு சென்றது.
ஆனையிறவை நாங்கள் மீட்டெடுத்ததற்கு பின்னால் அந்த மாபெரும் வரலாற்றுக்குப் பின்னால் தேசப்பற்றுள்ள- வெளிநாட்டுத் தமிழர்கள்தான் உள்ளனர் என்பதை மறுக்கிறவர் யாரும் இல்லை.
ஆனால் யூதர்களைப்போல் நாம் முழுவதுமாக இல்லை. அதுதான் நாம் முன்னேற தடை. நாம் ஒன்றுபடவேண்டிய சூழல் வந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் தமிழேந்தி.
நன்றி>புதினம்
15 May, 2006
சிங்களவனின் வெறியாட்டம் இன்னமும் தீரவில்லை.
இது 21 ஆண்டுகளின் முன் தீவக மக்கள் பயனிக்கும், குமுதினி படகில் பயனித்த மக்களை சிங்களவன் கத்திகளாலும், கோடரிகளாலும், வாள்களினாலும் வெட்டிப்போட்ட காட்சி.
இது 21 ஆண்டுகளின் பின்னரும் கத்திகளாலும் , கோடரிகளாலும், வாள்களினாலும் தூக்கத்தில் இருந்த தீவக மக்களை சிங்களவன் வெட்டிப்போட்ட காட்சி.
ஆண்டுகள் 21 ஆகியும் அவன் வெறி இன்னமும் தீரவில்லை, இவர்களோடு எப்படி தமிழன் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வது?
குழந்தைகள் கூட அவ்ர் கொலை வெறிக்கு தப்புவதில்லை. குழந்தைகள் உரிமைபற்றி வானளவுகதைக்கும் வையகம் இதற்கு என்ன கூறப்போகிறது? சிலவேளை இவர்களும் குட்டிப்புலிகளோ?
படங்கள் நன்றி> எரிமலை, பதிவு.
குமுதினி படுகொலை, ஆண்டுகள் 21.



Subscribe to:
Posts (Atom)