27 March, 2006
பாகிஸ்தான் உதவியுடன் இலங்கையில் ஜிகாத்.
பாகிஸ்தான் புலனாய்வுத்துறை உதவியுடனே முஸ்லிம் ஜிகாத் குழு: பாலசிங்கம் அதிர்ச்சித் தகவல்!
கேள்வி: முஸ்லிம் ஜிகாத் குழு இயங்கிவருவதாக நீங்கள் கூறியிருந்தீர்கள். இந்தக் குழு பற்றி நீங்கள் சொல்ல முடியுமா? ஏனெனில் இந்தக் குழு கிழக்குப் பிரதேசத்தில் இல்லை என்று முஸ்லிம்கள் மறுத்து வருகின்றனர்..
பதில்: ஓம். முஸ்லிம் அரசியல் அமைப்புகளின் தலைவர்கள் ஏன் இதை மறுக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். சிறிலங்காவில் முஸ்லிம் பயங்கரவாதக் குழு இயங்குவதானது சர்வதேச சமூகத்தை நிச்சயம் பாரிய அளவில் கவலை கொள்ளச் செய்யும் என்பதாலே அவர்கள் இத்தகைய மறுப்பை வெளியிடுகின்றனர்.
இந்த ஜிகாத் அமைப்புக்கும் பாகிஸ்தானிய இராணுவ புலனாய்வுத்துறைக்கும் உள்ள உறவு தொடர்பான ஆதாரங்களை நாம் வைத்திருக்கிறோம். ஆகையால் அவர்கள் பொதுவாக நிராகரிக்கிறார்கள். ஆனால் எங்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. முஸ்லிம் தலைவர்கள் எங்களைத் தொடர்புகொண்டால் மேலதிக ஆதாரங்களை கையளிப்போம்.
கேள்வி: தற்போதைய சர்வதேசச் சூழலில் ஒரு அரசாங்கமே பாகிஸ்தானுடன் தொடர்புடைய இத்தகைய முஸ்லிம் ஜிகாத் குழு இயங்க அனுமதிப்பது...
பதில்: ஓம். அது ஆபத்தானது. ஆனால் சிறிலங்கா அரசாங்கமானது பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நெருங்கிய உறவு வைத்துள்ளது என்பது எமக்கு வருத்தமளிக்கிறது. பாகிஸ்தானிடமிருந்து இராணுவ உதவி மற்றும் பயிற்சிகளை சிறிலங்கா பெற்றுக்கொண்டு வருகிறது. மேலும் சீனாவுடனும் நெருங்கிய உறவை சிறிலங்கா கொண்டிருக்கிறது.
ஆகையால் இந்த விடயத்தில் பாகிஸ்தானின் தலையீடு குறித்து நாம் பாரிய கவலை கொள்கிறோம். ஜிகாத் குழுவுக்கு பயிற்சியும் உதவிகளும் செய்வதானது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த ஜிகாத் குழுக்கள் பற்றி மேலதிகமாக இந்தியா அறிந்துகொள்ளும் போது இந்தியாவிலும் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்.
கேள்வி: கடும்போக்கு அரச தலைவருடனான உறவு நிலை தொடர்பாக...
பதில்: உறுதிமொழிகளை அளித்துவிட்டு எதையும் செய்யாத மென்மையான போக்கு கொண்டவர்களைவிட கடும்போக்காளர்களுடன் உடன்பாட்டுக்குத் தயாராக இருக்கிறோம். ஆகையால்தான் இந்த சவாலான நிலைமையை எடுத்துக் கொண்டு கடும்போக்காளர்களுடன் பேசி வருகிறோம். இந்தப் பிரச்சனையை அவர்கள் எப்படி கையாள்கிறார் என்று பார்க்கிறோம்.
சிங்களக் கடும்போக்காளர்கள்தான் உண்மையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் தடங்கலாக உள்ளனர் என்ற உண்மையை சர்வதேச சமூகம் உணரவேண்டும்.
கேள்வி: ஆகையால் அரசாங்கத்துக்கு எத்தகைய அழுத்தத்தை சர்வதேச சமூகம் கொடுக்க வேண்டும்?
பதில்: சிறிலங்காவின் அரசியல் அமைப்பு முறை மீதான செல்வாக்கை சர்வதேச சமூகம் செலுத்த வேண்டும். ஏனெனில் சிறிலங்கா அரசாங்கமானது முழுவதுமே வெளிநாட்டு நிதியை நம்பி, உதவி வழங்கும் நாடுகளை நம்பியே உள்ளது.
சர்வதேச சமூகத்தின் உதவி வழங்குகிற நாடுகளின் இணைத் தலைமை நாடுகள் போதுமான அழுத்தத்தை சிறிலங்கா அரசியல் தலைவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இதனால் ஓரளவாவது தமிழ்மக்களுக்கு சாதகமாக நடைபெறலாம். தற்போதைய இறுதி நிலைகளிலாவது இதை சர்வதேச சமூகம் செய்யலாம் என்றார் அன்ரன் பாலசிங்கம்.
நன்றி: ஏபிசி தொலைக்காட்சி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment