05 March, 2006
முஸ்தபா முஸ்தபா உன்பாடு ரெம்பகஸ்ரம் முஸ்தபா.
பிரஸ் கிளப்பில் வந்திறங்கிய பின்னர் அங்கிருந்தபடி அரண்மனைக்குள் இடம்பெற்ற முதல் நாள் காலை அமர் வின் போதான பேச்சுகளின் விவரங்களை ஊடுருவி அறி யும் நோக்கில் பலருடனும் தொலைபேசி மூலம் தூண்டில் போட்டபடி இருந்தோம். புலிகளின் மதியுரைஞர் பாலாவின் அங்குரார்ப்பண உரையினதும் அரசுத் தரப்புப் பேச்சுக் குழுத் தலைவர் அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வாவின் ஆரம்ப உரையினதும் பிரதிகள் கிடைத்ததால் அவற்றை மொழி பெயர்ப்புச் செய்து அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கும் மும்முரத்தில் நாம் ஈடுபட்டிருந்த போதுதான் அதே ஊடகவியலாளர் மீண்டும் நாம் இருந்த பக்கம் அவசர அவசரமாக வந்தார்.
""அங்கு ஆர்ப்பாட்டத்துக்கு மிகமுக்கியமான ஒரு பிர முகர் வந்திருக்கிறார். அதுபற்றிய செய்திகளைச் சேகரிக்க நீர் செல்லவில்லையா?'' என்று என்னிடம் அவசர அவசர மாக வினாவினார்.
""யார் அப்படி முக்கியமான நபர்?'' நான் பதில் கேள்வி கேட்டேன்.
""என்ன ஐஸே! இப்படிக் கேட்கிறீர்? ராம்ராஜ் வந்திருக்கி றார். போய் விடயங்களைச் சேகரித்து அலுவலகத்துக்குச் செய்தி அனுப்பும்'' என்று "அன்புக் கட்டளை'யிட்டார்.
""ஓ! அப்படியா?'' என்று சிரித்துக்கொண்டு தலை யாட்டினேன். தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு எதிராகச் செயற்படும் புல்லுருவிகள், இந்த ஊடகவியலாளர் போன்ற பேரினாவதிகளைப் பொறுத்தவரை மிக முக்கிய பிரமுகர்தான் என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டேன்.
""ஆர்ப்பாட்டத்தில் எத்தனை பேர் பங்கு பற்றுகின்றார் கள்?'' என்று சாட்டுக்குக் கேட்டு வைத்தேன்.
""ஐந்நூறுக்கும் அதிகமானோர்!'' என்று அவரிடமிருந்து பதில் வந்தது.
ஆச்சரியமாக இருந்தது. அது சரிதானா என்று உறுதிப் படுத்த ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தை நோக்கி எட்டி ஒரு நடைபோட்டேன். ஏன் வீண் வம்பு என்று தூரத்தில் நின்ற படியே நோட்டம் விட்டேன். ஒரு நூற்றியைம்பது பேர்வரை அந்தக் குளிரிலும் கூடிநிற்பதை அவதானிக்க முடிந்தது. பதா கைகள் பெரும்பாலும் சிங்களத்தில் காணப்பட்டன. கோஷங் களும் அந்த மொழியில்தான் அமைந்திருந்தன.
இந்த ஆர்ப்பாட்டத்துக்காகவா லண்டனிலிருந்து சுவி ஸுக்கு ராம்ராஜ் என்ற பிரகிருதி வந்தார் என எண்ணிக் கொண்டேன். கடந்த மாவீரர் தின நிகழ்வு ஜேர்மனியில் நடை பெற்>ற சமயம் அதற்கெதிராக அதைத் தடுத்து நிறுத்து வதற்காக ஜேர்மன் அதிகாரிகளிடம் நேரடி முறைப்பாடு செய்வதற்காக ராம்ராஜும் அவரது அணியினரும் லண்ட னில் இருந்து ஜேர்மனியின் டுஸில்டோர்வ் நகருக்கு வந்து சென்றார்கள் என அறிந்திருந்தேன். அதனால் அவர் இந்த ஆர்ப்பாட்டத்துக்காக லண்டனிலிருந்து சுவிஸுக்கு வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கவில்லை. அத்தோடு விட யத்தை விட்டு விட்டேன்.
சற்று நேரத்தில் பிரஸ் கிளப்புக்கு ஒரு தகவல் வந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வந்திருந்த ராம்ராஜை சுவிஸ் பொலீ ஸார் காத்திருந்து அள்ளிப் போட்டுக்கொண்டு போய்விட் டார்கள் என்பதுதான் அத்தகவல். அதையடுத்து அது பற்றிய செய்தியைத் தோண்டத் தொடங்கினோம். கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாயிற்று அது.
* * *
ராம்ராஜ் அல்லது அவரது லண்டன் பாஸ் போர்ட்டில் குறிப்பிட்டபடி விராஜா ரமியராஜ் அண்மைக் காலத்தில் ரி.பி.ஸி. என்ற புலி எதிர்ப்பு வானொலிச் சேவை ஒன்றை லண்டனிலிருந்து "திறம்பட' இயக்கிப் புகழ்பெற்றவர். வெளிநாடுகளில் வதியும் தமிழர்களிடையே அவரது புலி எதிர்ப்புப் புறணி காரணமாக அதிகம் பேசப்பட்டவர்.
தமிழர்கள் பலர் எரிச்சலோடும் சிலர் விருப்போடும் கருதும் நபர் இவர்.
சுவிஸ் பொலீஸாருக்கும் இவருக்கும் இடையிலான கசப்புகளை அறிவதற்கு எண்பதுகளின் பிற்பகுதிகளையும் தொண்ணூறுகளின் முற்பகுதியையும் நாம் ஒரு தடவை தோண்டிப் பார்க்க வேண்டியிருக்கும்.
1989இல் புளொட் தலைவர் உமாமகேஸ்வரன் கொழும் பில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட் டார். அவரைச் சுட்டுக்கொன்றவர் அவரின் முன்னாள் மெய்ப் பாதுகாவலரான ராபின் என்பவரே என்ற பேச்சு புளொட் வட்டாரத்தில் பின்னர் அடிபட்டது.
இந்த ராபின் 90களின் முற்பகுதியில் இயக்க நட வடிக்கைளை எல்லாம் துறந்து சுவிஸில் தஞ்சம் புகுந்து சாதாரண வாழ்கையை ஆரம்பித்தார். இலங்கையிருந்து ஒரு தமிழ்ப் பெண்ணை சுவிஸுக்கு அழைப்பித்து அங்கேயே மணந்து கொண்டார்.
பேர்ன் கன்டனில் லஸ்கன்தாள் என்ற இடத்தில் அவர் மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென அவரதும் மனைவியதும் சத்தம் சந்தடி அடங்கியதால் அயலவர்கள் பொலீஸாரின் உதவியுடன் அவர்கள் வசித்த வீட்டை உடைத்துப் பார்த்தனர்.
வீட்டுக்குள் மூன்று நாள்களுக்கு முன்னர் ராபினும் அவ ரது மனைவியும் கத்தியால் குத்தப்பட்டு இறந்த நிலையில் அழுகிய சடலமாகக் காணப்பட்டனர்.
விசாரணைகள் நடந்தன. சம்பவதினம் பகல் வீட்டுக்குள் நுழைந்த சிலர் தனியாக இருந்த ராபினின் துணைவியாரை நான்கு மாதக் கர்ப்பிணியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் கத்தியால் குத்திப் படுகொலை செய் தமையும், பின்னர் வீட்டுக்குள் மறைந்து, காத்திருந்து மதிய போசனத்துக்காக அலுவலகத்திலிருந்து வீடுதிரும்பிய ராபினை மடக்கிக் கொலை செய்தமையும் விசாரணைகளில் அம்பலமாகின.
ராபினின் மனைவியின் அந்தரங்க உறுப்பிலிருந்து மூன்று வெவ்வேறு நபர்களின் விந்துப்பாய எச்சங்களும் விசா ரணையாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டன.
உமா மகேஸ்வரனுக்குப் பின்னர் புளொட் அமைப்புக் குத் தலைமை வகித்த மாணிக்கதாசனே நேரடியாக சுவிஸில் வந்துநின்று உமா படுகொலைக்குக் காரணமானவரை மற் றும் சிலரோடு நேரில் பிரசன்னமாகி தீட்டித் தள்ளிவிட்டு சுவி ஸில் இருந்து வெளியேறியுள்ளார் என சுவிஸ் விசாரணை யாளர்கள் கருதுகின்றார்கள்.
இந்தப் படுகொலைகள் தொடர்பாக புலிக்குட்டி எனப் படும் புளொட் ரஞ்சன் உட்படச் சிலர் கைதாகினர். சுமார் ஒன்றரை வருடம் விளக்கமறியலில் இருந்த புலிக்குட்டி பின்னர் விடுவிக்கப்பட்டார். மற்றொருவருக்கு எதிராக வழக்கு விசாரணை நடந்தது. எனினும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரும் விடுவிக்கப்பட்டார்.
ஆனால், கொலை விவகாரத்தை சுவிஸ் புலனாய்வாளர் கள் மூடி, மறந்துவிடவில்லை.
இதே காலப்பகுதியில் சுவிஸில் பெரும் போதைவஸ்துக் கடத்தல், வியாபாரம் ஆகியவற்றை, மேற்கொண்ட கும்ப லின் தலைவரான "முஸ்தபா' என்ற நபர் சுவிஸ் அதிகாரி களின் வலைக்குள் சிக்கவிருந்த சமயத்தில் நாட்டை விட்டுத் தப்பினார்.
இவை எல்லாவற்றுக்கும் பின்னர் நீண்ட பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து லண்டனில் தோற்றிய ராம்ராஜ் அங்கு அரசியல் தஞ்சம் பெற்று லண்டன் பிரஜையானார்.
லண்டன் பிரஜாவுரிமை பெற்ற ராம்ராஜ் சுவிஸ் பக்கம் தலைவைத்துப் படுப்பதில்லை. ஆனாலும், கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரசியல் பிரமுகர் அந்தஸ்தோடு அவர் சுவிஸில் தோற்றினார். அப்போதுதான் சுவிஸ் பொலீஸாரிடம் வகையாக மாட்டினார்.
ராபினினதும் அவரது மனைவியினதும் படுகொலைகள் தொடர்பாகத் தாம் தேடிவரும் சந்தேக நபர்களில் ஒருவரும்
"முஸ்தபா' என்ற பெயரில் இயங்கிய போதைவஸ்துக் கடத்தல் கும்பல் தாதாவும்
தாம் தற்போது கைது செய்திருக்கும் ராம்ராஜ்தானா என் பதைக் கண்டறிவதுதான் சுவிஸ் விசாரணையாளர்களின் தற்போதைய நோக்கம் எனத் தெரிகிறது.
தாம் வைத்திருக்கும் பல்வேறு ஆதாரங்கள், தொலைபேசி உரையாடல் பதிவுகள் என்பவற்றின் வலுவோடு இந்த விசா ரணைகளை சுவிஸ் புலனாய்வாளர்கள் முடுக்கி விட்டிருக்கின்றனர் என்பதை சுவிஸ் புலனாய்வு வட்டாரங்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி நாம் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் அறியமுடிந்தது.
இவ்விடயங்களில் ராம்ராஜுக்குத் தொடர்பு ஏதும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் அல்லது முன்னாள் "முஸ்தபா' அவர்தான் என்பது கண்டறியப்பட்டால் நீண்ட பல வரு டங்களுக்கு அவருக்கு மீட்சியே இல்லை என் கின்றன சுவிஸ் வட்டாரங்கள்.
ஜெனீவாப் பேச்சுகள் பற்றிய செய்திகளைத் திரட்ட வந்திருந்த ஒரு பத்திரிகையா ளரினால் முக்கிய அரசியல் பிரமுகராகக் குறிப்பிடப்பட்ட ஒருவர், சுவிஸ் வந்து சில மணிநேரத்தில் பழம்பெரும் சந்தேகநபர் என்ற கோதாவில் அந்த நாட்டு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டமை பேச்சு நடவடிக்கையை ஒட்டிய ஒரு கொசுறுத் தகவல்தான்.
நன்றி> உதயன்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment