21 March, 2006

நோர்வேயை விலக்கக்கோரி பிக்குமார்இன்றுஆர்ப்பாட்டம்.

நோர்வேயை விலக்கக்கோரி பிக்குமார்இன்றுஆர்ப்பாட்டம். சமாதானப் பேச்சுக்கு அனுசரணைப்பணி வகித்துவரும் நோர்வேயுடனான உறவை இலங்கை முற்றாக வெட்டிவிட வேண்டும் எனக்கோரி தேசிய பிக்குமுன்னணி இன்றுமுதல் எதிர்ப்புப் போராட்டங்களை ஆரம்பித்துள்ளது.இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு கொழும்பு விஹாரமாதேவி பூங்காவிற்கு முன்பாக ஒன்று கூடும் தேசிய பிக்கு முன்னணியினர் கண்டனப் பேரணி ஒன்றை நடத்தவுள்ளனர்.இப்பேரணி நோர்வேத் தூதரகத்தை நோக்கிச் சென்று நோர்வே தூதரகத்தை முற்றுகை யிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்துத் தேசிய பிக்கு முன்னணியின் தலைவரான வண. அம்பரஅமில தேரர் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது : சர்வதேச அங்கீகாரத்துடன் இலங்கை யின் இறையாண்மையை சீர்குலைக்கும் வகையில் தமிழீழத்தை விடுதலைப் புலிக ளிடம் ஒப்படைப்பதற்கு நோர்வே சதிசெய்து வருகிறது. அதை நாம் அனுமதிக்க மாட்டோம்.FPRIVATE "TYPE=PICT;ALT=" இராஜதந்திர உறவுகளுக்கான எல்லை களை நோர்வே மீறிவிட்டது. நோர்வே தொடர்ந் தும் அனுசரணையாளர்களாகச் செயற்பட்டால் வெகுவிரைவில் தமிழீழம் விடுதலைப் புலிகளுக்குக் கிடைத்துவிடும். எனவே, நோர்வே அனுசரணையாளர்களை இனியும் இங்கு செயற்பட நாம் அனுமதிக்க மாட்டோம்.நோர்வேக்கும் இலங்கைக்குமான சகல உறவுகளும் துண்டிக்கப்பட வேண்டும். இதற்கென இன்று கொழும்பு விஹாரமா தேவிப் பூங்காவில் ஆரம்பமாகவுள்ள கண்ட னப் பேரணி, நோர்வேத் தூதரகத்தை முற்று கையிடவுள்ளது. இந்தப் பேரணிக்கு அனைத்து தேசப்பற்றுள்ள தேசிய இயக்கங்களும், சக்தி களும் ஒத்துழைப்பு வழங்கி கலந்து கொள்ள வுள்ளன என்றார் வண. அமில தேரர் நன்றி>லங்காசிறீ

0 comments: