12 March, 2006
ஜே.வி.பி ஜனாதிபதிக்கு வைத்த ஆப்பு.
ஜே.வி.பி.யின் எச்சரிக்கையை நிராகரித்த மகிந்த!
நோர்வேயை மத்தியஸ்த பணியிலிருந்து நீக்காது விடின் மகிந்த அரசிற்கான ஆதரவு மீள பெறப்படும் என ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்கவும், பொதுச் செயலாளர் விமல் வீரவன்சவும் விடுத்திருந்த எச்சரிக்கையினை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பேச்சுக்களுக்கு முன்னதாக நோர்வேயை மத்தியஸ்த பணியிலிருந்து நீக்காது விடின் மகிந்த அரசிற்கான ஆதரவு மீள பெறப்படும் என கடந்த புதன்கிழமை கண்டியில் ஜே.வி.பி. கட்சி விடுத்திருந்த எச்சரிக்கையினையே மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,
இப் பேச்சுகளின் ஊடாக சமாதானத்தை உருவாக்குவதில் மிகவும் கடினமானதும் சவாலானதுமான ஒரு சூழ்நிலையில், மூன்றாம் தரப்பொன்று வகித்து வரும் மத்தியஸ்த பணி தொடர்பாக எதுவித தெளிவுமின்றி ஜே.வி.பி.யினர் இருப்பதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக பாலசிங்கம் கொழும்பு வாரப்பத்திரிகைக்கு கடந்த வெள்ளிக்கிழமை மேலும் கூறுகையில்,
ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்றவற்றின் ஆதரவை காட்டி சமாதனத்திற்கு எதிரான மிகவும் வலுவான சக்கதிளுடன் இயங்கி வரும் மகிந்தவின் அரசின் சமாதான அணுகுமுறைகளை விடுதலை புலிகள் மிகவும் சந்தேகத்துடனேயே எதிர்நோக்குவதாகவும் தெரிவித்தார்.
சிறிலங்கா அரசின் ஊடக அமைச்சர் பிரியதர்சன யாப்ப, ஜே.வி.பி.யின் எதிர்ப்புக்கும் மத்தியிலும் நோர்வேயை தொடர்ந்தும் மத்தியஸ்த பணியினை வகிக்கும் என்ற மகிந்தவின் முடிவினை கடந்த வியாழக்கிழமை உறுதிப்படுத்தியிருந்தார்.
அரசியல் கட்சிகள் தங்களது அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவது அவர்களது உரிமை எனினும், சர்வேதேச நிலைப்பாடுகளை எடுக்கும் அதிகாரம் சிறிலங்கா அரசிற்கு மட்டுமே இருப்பதுடன், அரசு தனது நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருப்பதாக பிரியர்சன யாப்ப மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சிறிலங்கா விடுதலை புலிகளினதும் அழைப்பினையடுத்தே, நோர்வே மத்தியஸ்த பணிபுரிய முன்வந்தாகவும், தொடர்ந்தும் தனது பணியினை நோர்வே மேற்கொள்ள தனது நாடு தீர்மானித்திருப்பதாகவும் நோர்வே நாட்டு தூதரக பேச்சாளர் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment