25 March, 2006

நாம் பொறுமையின் எல்லைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்

நாம் பொறுமையின் எல்லைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்-சு.ப.தமிழ்ச்செல்வன் சிறிலங்கா அரசின் செயல்களால் தமிழீழ விடுதலைப்புலிகள் பொறுமையின் எல்லைக்கு வந்துவிட்டார்கள் என தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார். மன்னார் ஆண்டாங்குளம் றோமன் கத்தோலிக்கப் பாடசாலையில் பிரதேச மக்களுக்கான சமகால அரசியல் கருத்தரங்கில்கலந்துகொண்டுசிறப்புரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார் அவர்மேலும் கடந்த நான்கு ஆண்டுகளாக நாம் சமாதானப் பேச்சுக்களில் பொறுமையுடன் ஈடுபட்டு வந்தோம்.சமாதானத்தின் மூலம் போரை முடிவுக்குக் கொண்டு வரலாம் என்ற நோக்கத்திலேயே பேச்சுக்களில் பங்குகொண்டோம். ஆனால் சிறிலங்கா அரசும் அதன் படைகளும் அப்படிச் செயற்படாமல் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக ஒடுக்குமுறைகளை மேற்கொண்டு வருகின்றன.இதனால் நாம் பொறுமையின் எல்லைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அமைதி வழியில் தீர்வு காணலாம் என்றுதான் சிறிலங்கா அரசாங்கத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டோம். இதன் மூலம் போரை நிறுத்துவது மட்டுமல்ல- தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா அரச படைகளை படிப்படியாக விலக்கி இடம்பெயர்ந்த எமது தமிழ் மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்தலாம் என்று எண்ணினோம். ஆனால் சிறிலங்கா அரச படைகள் இதனைக் கவனத்தில் எடுக்கவில்லை. இதனால் சிறிலங்கா அரசு மீதான நம்பிக்கையை நாம் இழந்துவிட்டு பொறுமையின் எல்லையில் நிற்கின்றோம் என்றார் சு.ப. தமிழ்ச்செல்வன். நன்றி>பதிவு

0 comments: