27 March, 2006

றோ வுக்கும் தெரியாமல் கருணா இந்திய போனது எப்படி?

றோ வுக்கும் தெரியாமல் கருணாவுக்கு இந்திய விஸா கிடைத்தது எப்படி? விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட கருணா, இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தெரியாது எவ்வாறு அந்நாட்டு விஸா பெற்று அங்கு சென்றார் என்பது தொடர்பாக கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து ஊடகமொன்று வெளியிட்ட தகவல்களில்; கொழும்பில் தங்க வைக்கப்பட்டிருந்த கருணா, கடந்த வருடம் இந்திய விஸாவை இந்தியத் தூதரகத்தில் பெற்று கட்டுநாயக்கா விமான நிலையமூடாக இந்தியா சென்றிருந்தார். கருணாவின் இந்தியப் பயணத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் கொழும்பிலுள்ள பயண முகவர் நிலையமொன்றின் ஊடாக கருணாவின் விஸா விண்ணப்பத்தை இந்திய தூதரகத்தில் கையளித்து விஸா பெற்றிருந்தனர். இந்திய விஸாவுக்குரிய ஒவ்வொரு விண்ணப்பத்தையும் இந்திய புலனாய்வுப் பிரிவு (றோ) அதிகாரிகள் பரிசீலித்தே விஸா வழங்கப்படுகையில், கருணாவின் விண்ணப்பத்தை இவர்களால் ஏன் கண்டுபிடிக்க முடியாது போனதென்ற கேள்வியும் இந்த விசாரணையில் எழுப்பப்பட்டுள்ளது. கருணா இந்தியா சென்ற மூன்று நாட்களில் அவரது மனைவி இந்திய விஸாவுக்கான விண்ணப்பத்தை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் கையளித்தபோது, அவர் யாரென்று கண்டுபிடிக்கப்பட்டு விஸா மறுக்கப்பட்டது. இதையடுத்தே, கருணா இந்தியா சென்றது தெரிய வந்தது. அத்துடன் இது பற்றிய விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. கருணாவுக்கு விஸா வழங்குவதில் கருணாவுக்கு விஸாவைப் பெற்றுக் கொடுத்தவர்களுக்கும் இந்திய தூதரக அதிகாரிகளுக்குமிடையே தொடர்புகளேதும் இருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றுள்ளது. நன்றி>லங்காசிறி.

0 comments: