27 March, 2006
றோ வுக்கும் தெரியாமல் கருணா இந்திய போனது எப்படி?
றோ வுக்கும் தெரியாமல் கருணாவுக்கு இந்திய விஸா கிடைத்தது எப்படி?
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட கருணா, இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தெரியாது எவ்வாறு அந்நாட்டு விஸா பெற்று அங்கு சென்றார் என்பது தொடர்பாக கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து ஊடகமொன்று வெளியிட்ட தகவல்களில்;
கொழும்பில் தங்க வைக்கப்பட்டிருந்த கருணா, கடந்த வருடம் இந்திய விஸாவை இந்தியத் தூதரகத்தில் பெற்று கட்டுநாயக்கா விமான நிலையமூடாக இந்தியா சென்றிருந்தார்.
கருணாவின் இந்தியப் பயணத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் கொழும்பிலுள்ள பயண முகவர் நிலையமொன்றின் ஊடாக கருணாவின் விஸா விண்ணப்பத்தை இந்திய தூதரகத்தில் கையளித்து விஸா பெற்றிருந்தனர்.
இந்திய விஸாவுக்குரிய ஒவ்வொரு விண்ணப்பத்தையும் இந்திய புலனாய்வுப் பிரிவு (றோ) அதிகாரிகள் பரிசீலித்தே விஸா வழங்கப்படுகையில், கருணாவின் விண்ணப்பத்தை இவர்களால் ஏன் கண்டுபிடிக்க முடியாது போனதென்ற கேள்வியும் இந்த விசாரணையில் எழுப்பப்பட்டுள்ளது.
கருணா இந்தியா சென்ற மூன்று நாட்களில் அவரது மனைவி இந்திய விஸாவுக்கான விண்ணப்பத்தை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் கையளித்தபோது, அவர் யாரென்று கண்டுபிடிக்கப்பட்டு விஸா மறுக்கப்பட்டது.
இதையடுத்தே, கருணா இந்தியா சென்றது தெரிய வந்தது. அத்துடன் இது பற்றிய விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
கருணாவுக்கு விஸா வழங்குவதில் கருணாவுக்கு விஸாவைப் பெற்றுக் கொடுத்தவர்களுக்கும் இந்திய தூதரக அதிகாரிகளுக்குமிடையே தொடர்புகளேதும் இருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றுள்ளது.
நன்றி>லங்காசிறி.
பாகிஸ்தான் உதவியுடன் இலங்கையில் ஜிகாத்.
பாகிஸ்தான் புலனாய்வுத்துறை உதவியுடனே முஸ்லிம் ஜிகாத் குழு: பாலசிங்கம் அதிர்ச்சித் தகவல்!
கேள்வி: முஸ்லிம் ஜிகாத் குழு இயங்கிவருவதாக நீங்கள் கூறியிருந்தீர்கள். இந்தக் குழு பற்றி நீங்கள் சொல்ல முடியுமா? ஏனெனில் இந்தக் குழு கிழக்குப் பிரதேசத்தில் இல்லை என்று முஸ்லிம்கள் மறுத்து வருகின்றனர்..
பதில்: ஓம். முஸ்லிம் அரசியல் அமைப்புகளின் தலைவர்கள் ஏன் இதை மறுக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். சிறிலங்காவில் முஸ்லிம் பயங்கரவாதக் குழு இயங்குவதானது சர்வதேச சமூகத்தை நிச்சயம் பாரிய அளவில் கவலை கொள்ளச் செய்யும் என்பதாலே அவர்கள் இத்தகைய மறுப்பை வெளியிடுகின்றனர்.
இந்த ஜிகாத் அமைப்புக்கும் பாகிஸ்தானிய இராணுவ புலனாய்வுத்துறைக்கும் உள்ள உறவு தொடர்பான ஆதாரங்களை நாம் வைத்திருக்கிறோம். ஆகையால் அவர்கள் பொதுவாக நிராகரிக்கிறார்கள். ஆனால் எங்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. முஸ்லிம் தலைவர்கள் எங்களைத் தொடர்புகொண்டால் மேலதிக ஆதாரங்களை கையளிப்போம்.
கேள்வி: தற்போதைய சர்வதேசச் சூழலில் ஒரு அரசாங்கமே பாகிஸ்தானுடன் தொடர்புடைய இத்தகைய முஸ்லிம் ஜிகாத் குழு இயங்க அனுமதிப்பது...
பதில்: ஓம். அது ஆபத்தானது. ஆனால் சிறிலங்கா அரசாங்கமானது பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நெருங்கிய உறவு வைத்துள்ளது என்பது எமக்கு வருத்தமளிக்கிறது. பாகிஸ்தானிடமிருந்து இராணுவ உதவி மற்றும் பயிற்சிகளை சிறிலங்கா பெற்றுக்கொண்டு வருகிறது. மேலும் சீனாவுடனும் நெருங்கிய உறவை சிறிலங்கா கொண்டிருக்கிறது.
ஆகையால் இந்த விடயத்தில் பாகிஸ்தானின் தலையீடு குறித்து நாம் பாரிய கவலை கொள்கிறோம். ஜிகாத் குழுவுக்கு பயிற்சியும் உதவிகளும் செய்வதானது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த ஜிகாத் குழுக்கள் பற்றி மேலதிகமாக இந்தியா அறிந்துகொள்ளும் போது இந்தியாவிலும் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்.
கேள்வி: கடும்போக்கு அரச தலைவருடனான உறவு நிலை தொடர்பாக...
பதில்: உறுதிமொழிகளை அளித்துவிட்டு எதையும் செய்யாத மென்மையான போக்கு கொண்டவர்களைவிட கடும்போக்காளர்களுடன் உடன்பாட்டுக்குத் தயாராக இருக்கிறோம். ஆகையால்தான் இந்த சவாலான நிலைமையை எடுத்துக் கொண்டு கடும்போக்காளர்களுடன் பேசி வருகிறோம். இந்தப் பிரச்சனையை அவர்கள் எப்படி கையாள்கிறார் என்று பார்க்கிறோம்.
சிங்களக் கடும்போக்காளர்கள்தான் உண்மையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் தடங்கலாக உள்ளனர் என்ற உண்மையை சர்வதேச சமூகம் உணரவேண்டும்.
கேள்வி: ஆகையால் அரசாங்கத்துக்கு எத்தகைய அழுத்தத்தை சர்வதேச சமூகம் கொடுக்க வேண்டும்?
பதில்: சிறிலங்காவின் அரசியல் அமைப்பு முறை மீதான செல்வாக்கை சர்வதேச சமூகம் செலுத்த வேண்டும். ஏனெனில் சிறிலங்கா அரசாங்கமானது முழுவதுமே வெளிநாட்டு நிதியை நம்பி, உதவி வழங்கும் நாடுகளை நம்பியே உள்ளது.
சர்வதேச சமூகத்தின் உதவி வழங்குகிற நாடுகளின் இணைத் தலைமை நாடுகள் போதுமான அழுத்தத்தை சிறிலங்கா அரசியல் தலைவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இதனால் ஓரளவாவது தமிழ்மக்களுக்கு சாதகமாக நடைபெறலாம். தற்போதைய இறுதி நிலைகளிலாவது இதை சர்வதேச சமூகம் செய்யலாம் என்றார் அன்ரன் பாலசிங்கம்.
நன்றி: ஏபிசி தொலைக்காட்சி
25 March, 2006
நாம் பொறுமையின் எல்லைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்
நாம் பொறுமையின் எல்லைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்-சு.ப.தமிழ்ச்செல்வன்
சிறிலங்கா அரசின் செயல்களால் தமிழீழ விடுதலைப்புலிகள் பொறுமையின் எல்லைக்கு வந்துவிட்டார்கள் என தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார்.
மன்னார் ஆண்டாங்குளம் றோமன் கத்தோலிக்கப் பாடசாலையில் பிரதேச மக்களுக்கான சமகால அரசியல் கருத்தரங்கில்கலந்துகொண்டுசிறப்புரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார் அவர்மேலும்
கடந்த நான்கு ஆண்டுகளாக நாம் சமாதானப் பேச்சுக்களில் பொறுமையுடன் ஈடுபட்டு வந்தோம்.சமாதானத்தின் மூலம் போரை முடிவுக்குக் கொண்டு வரலாம் என்ற நோக்கத்திலேயே பேச்சுக்களில் பங்குகொண்டோம்.
ஆனால் சிறிலங்கா அரசும் அதன் படைகளும் அப்படிச் செயற்படாமல் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக ஒடுக்குமுறைகளை மேற்கொண்டு வருகின்றன.இதனால் நாம் பொறுமையின் எல்லைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
அமைதி வழியில் தீர்வு காணலாம் என்றுதான் சிறிலங்கா அரசாங்கத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டோம்.
இதன் மூலம் போரை நிறுத்துவது மட்டுமல்ல- தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா அரச படைகளை படிப்படியாக விலக்கி இடம்பெயர்ந்த எமது தமிழ் மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்தலாம் என்று எண்ணினோம்.
ஆனால் சிறிலங்கா அரச படைகள் இதனைக் கவனத்தில் எடுக்கவில்லை. இதனால் சிறிலங்கா அரசு மீதான நம்பிக்கையை நாம் இழந்துவிட்டு பொறுமையின் எல்லையில் நிற்கின்றோம் என்றார் சு.ப. தமிழ்ச்செல்வன்.
நன்றி>பதிவு
23 March, 2006
யாழில் டக்ளஸ் முன்னிலையில் மக்கள் சித்திரவதை.
யாழில் டக்ளஸ் முன்னிலையில் மக்கள் சித்திரவதை
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா யாழ்.சிறிதர் திரையரங்கில் பகல் நேரங்களில் தங்கி நிற்கும் போது அவரது முன்னிலையில் பொதுமக்கள் அழைத்துவரப்பட்டு துன்புறுத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்காளாக இத்தகைய அட்டூழியங்கள் நடைபெற்று வருவதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.
தீவகம் மற்றும் பின்தங்கிய கிராமங்களிலிருந்து தனது முகவர்கள் மூலம் பேருந்துகளில் அழைத்து வந்து அவர்களைச் சோதனை என்ற பெயரில் பல்வேறு துன்புறுத்தல்களில் ஈடுபடுவதாக அங்கு தமது துன்பத்தின் நிமித்தம் சென்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
வாசலில் வைத்து உடற்சோதனை செய்யப்படுவதுடன் பின்னர் டக்ளஸ் மறைந்திருக்கும் வாசலுக்குச் சென்றதும் மீண்டும் சோதனை என்ற பெயரில் தலையில் அடர்த்தியாக மயிர் காணப்பட்டால் அவைகளைக் கூட கைவிட்டு கிளறிப்பார்ப்பதுடன் மயிர்களை டோப்பெனக் கூறி இழுத்துப்பார்க்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்தகைய நடவடிக்கைகளைத் தமது வறுமையும் மற்றும் இடப்பெயர்வுகளையும் வைத்து ஈ.பி.டி.பி விளையாடி வருவதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.
நன்றி>புதினம்
21 March, 2006
நோர்வேயை விலக்கக்கோரி பிக்குமார்இன்றுஆர்ப்பாட்டம்.
நோர்வேயை விலக்கக்கோரி பிக்குமார்இன்றுஆர்ப்பாட்டம். சமாதானப் பேச்சுக்கு அனுசரணைப்பணி வகித்துவரும் நோர்வேயுடனான உறவை இலங்கை முற்றாக வெட்டிவிட வேண்டும் எனக்கோரி தேசிய பிக்குமுன்னணி இன்றுமுதல் எதிர்ப்புப் போராட்டங்களை ஆரம்பித்துள்ளது.இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு கொழும்பு விஹாரமாதேவி பூங்காவிற்கு முன்பாக ஒன்று கூடும் தேசிய பிக்கு முன்னணியினர் கண்டனப் பேரணி ஒன்றை நடத்தவுள்ளனர்.இப்பேரணி நோர்வேத் தூதரகத்தை நோக்கிச் சென்று நோர்வே தூதரகத்தை முற்றுகை யிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்துத் தேசிய பிக்கு முன்னணியின் தலைவரான வண. அம்பரஅமில தேரர் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது : சர்வதேச அங்கீகாரத்துடன் இலங்கை யின் இறையாண்மையை சீர்குலைக்கும் வகையில் தமிழீழத்தை விடுதலைப் புலிக ளிடம் ஒப்படைப்பதற்கு நோர்வே சதிசெய்து வருகிறது. அதை நாம் அனுமதிக்க மாட்டோம்.FPRIVATE "TYPE=PICT;ALT="
இராஜதந்திர உறவுகளுக்கான எல்லை களை நோர்வே மீறிவிட்டது. நோர்வே தொடர்ந் தும் அனுசரணையாளர்களாகச் செயற்பட்டால் வெகுவிரைவில் தமிழீழம் விடுதலைப் புலிகளுக்குக் கிடைத்துவிடும். எனவே, நோர்வே அனுசரணையாளர்களை இனியும் இங்கு செயற்பட நாம் அனுமதிக்க மாட்டோம்.நோர்வேக்கும் இலங்கைக்குமான சகல உறவுகளும் துண்டிக்கப்பட வேண்டும். இதற்கென இன்று கொழும்பு விஹாரமா தேவிப் பூங்காவில் ஆரம்பமாகவுள்ள கண்ட னப் பேரணி, நோர்வேத் தூதரகத்தை முற்று கையிடவுள்ளது. இந்தப் பேரணிக்கு அனைத்து தேசப்பற்றுள்ள தேசிய இயக்கங்களும், சக்தி களும் ஒத்துழைப்பு வழங்கி கலந்து கொள்ள வுள்ளன என்றார் வண. அமில தேரர்
நன்றி>லங்காசிறீ
18 March, 2006
17 March, 2006
ஈழத்தமிழரை ஆதரிக்கும் ஜெயலலிதா.
ஈழத் தமிழர் பிரச்சனையில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?: கா.காளிமுத்து விளக்கம்
ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? என்று அக்கட்சியின் அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கா.காளிமுத்து விளக்கம் அளித்துள்ளார்.
றிடிஃப் ஆங்கில இணையத்தளத்துக்கு கா.காளிமுத்து அளித்த நேர்காணல்:
கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகளை உங்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களான வைகோ, திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மறுமலர்ச்சி தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளீர்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலான உங்கள் கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டதாக அர்த்தமா?
பதில்: தமிழகத்தில் எதுவித ஆயுதக் குழுவினரது நடமாட்டமும் இருக்கக் கூடாது என்பதில் அம்மா(முதல்வர் ஜெயலலிதா) உறுதியாக உள்ளார். அனைத்துத் தமிழர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக உள்ளார்.
கேள்வி: அனைத்துத் தமிழர்களும் என்றால்? தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாழும் தமிழர்களையும் சேர்த்தா?
பதில்: ஆமாம். தமிழ்நாட்டிலும் யாழ்ப்பாணத்திலும் வாழ்கின்ற தமிழர்களைத்தான். தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிப்பது என்பதும் அனைத்துத் தமிழர்களை ஆதரிப்பது என்பதும் இரு வேறு விடயங்கள்.
எமது நண்பர்களான வைகோ, திருமாவளவனும் கூட தமிழகத்தில் பயங்கரவாதிகள் நுழைவதை விரும்பமாட்டார்கள் என்றார் காளிமுத்து.
நன்றி>புதினம்
12 March, 2006
ஜே.வி.பி ஜனாதிபதிக்கு வைத்த ஆப்பு.

யாழ்தமிழருக்கு சிங்களராணுவம் மிரட்டல்.
இலங்கையில் வாழும் உரிமை சிங்களவருக்கே உண்டு யாழ்ப்பாணத்தில் துண்டு பிரசுரம்
(யாழ். அலுவலக நிருபர்)
இலங்கை நாட்டில் வாழும் உரிமை சிங்களவருக்கே உண்டு.
தமிழர்கள் நீங்கள் வந்தேறு குடிகள். இதையே மகாவம்சமும் கூறுகிறது. எமது நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கே உண்டு.
இவ்வாறு இலங்கை தேசத்தின் பாதுகாப்பாளர்கள் என தங்களை வெளிப்படுத்தி ""அன்பான யாழ்ப்பாண மக்களே. இது எங்களோட நாடு'' என்ற தலைப்பில் யாழ். நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் இராணுவத்தினரால் விநியோகிக்கப்படும் துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த துண்டுப் பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உலக நாடுகள் எதுவும் எம்மை அடக்க முடியாது. மஹிந்தவின் சிந்தனைப்படியே நாம் செய்வோம். ஒற்றை ஆட்சிக்குள்ளும் ஒரு படைக்குக் கீழும் வாழ்வதாயின் இங்கு வாழும் உரிமையுண்டு.
ஜெனிவாவில் பேசினாலும் நோர்வேயின் தலைமையினாலும் இந்தியாவின் உறவாலும் நாட்டைப் பிரித்து உங்களிடம் தரமுடியாது. யாழ்ப்பாணத்தில் இராணுவம் சொல்வதே தீர்ப்பு. சிங்கள மொழிதான் எல்லோருக்கும் தாய்மொழி. இங்கு வேறு எந்த மொழியும் இருக்க முடியாது.
எல்லா மக்களையும் பாதுகாப்பது சிங்கள இராணுவம்தான். உங்களையும் நாங்கள்தான் பாதுகாப்போம். நோர்வே இராணுவமோ இந்திய இராணுவமோ உங்களை பாதுகாக்காது. புலிகளும் உங்களைப் பாதுகாக்கமாட்டார்கள். உங்களை எம்முடன் உறவு வைத்துக் கொள்ள சொல்கிறோம்.
உங்கள் பிள்ளைகள் எங்கள் படையில் சேர்ந்தால் கைநிறைய சம்பளம் கிடைக்கும். எல்லா வசதிகளும் கிடைக்கும். அமெரிக்கா எமக்கு காசு தரும். சிங்களத்தை படியுங்கள். உங்களுக்கு நல்ல காலம் உண்டு.
புலிகளால் எங்களை வெல்ல முடியாது. யாழ்ப்பாணத்தை பிடிக்கமுடியாது. யாழ்ப்பாணம் பத்து வருடங்களாக எம்மிடமே இருக்கிறது. புலிகளில் கொஞ்சப்பேர்தான் இருக்கிறார்கள். எங்களிடம் இலட்சம் பேர் இருக்கிறார்கள். ஆகவே நீங்கள் நாங்கள் சொல்வதுபோல நடவுங்கள். உங்களை நாங்கள் பாதுகாப்போம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>வீரகேசரி
தமிழீழ தலைநகரில் ஜிகாத்.

05 March, 2006
முஸ்தபா முஸ்தபா உன்பாடு ரெம்பகஸ்ரம் முஸ்தபா.

03 March, 2006
தமிழ்நாட்டு தமிழர் பாராத தமிழர் கந்துரையாடல்

02 March, 2006
பெரும் நிதிமோசடியில் சிறீலங்கா.

01 March, 2006
Mosat Wanted Fugitive

Subscribe to:
Posts (Atom)