23 February, 2006
TBC வானொலியின் பணிப்பாளர் ராமராஜ் போலீசாரால் கைது.
நேற்று ஜெனிவாவில் ஜேவிபி, ஜாதிககெல உறுமய கட்சியின் ஆதரவாளர்களும், தமிழ்குழுக்களின் ஆதரவாளர்களும் இணைந்து தமிழீழ தேசியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினர். வெகு குறைவானவர்கள் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தில் கைகலப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ரிபிசி பணிப்பாளர் ராமராஜ் உட்பட சில தமிழர்கள் சுவிஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி இந்த ஊர்வலத்தை ஒழுங்கு செய்வதில் முக்கிய பங்காற்றிய சிலருடன் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளையின் முக்கிய உறுப்பினர்கள் தங்களை படம் பிடிக்க முற்பட்டதாகவும், அதனாலேயே தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். அப்பொழுது தாங்கள் இருவரை பிடித்து வைத்திருந்ததாகவும், ஓடிப் போன மற்றையவர்கள் பொலிஸாரை அழைத்து வந்து ராமராஜ்தான் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியதால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர். அத்துடன் ராமராஜ் இன்று காலை விடுவிக்கப்படுவார் எனவும் கூறினார்கள்.
இவர்களின் கூற்றின்படி ஊர்வலத்தை படம் பிடித்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதும், ரிபிசி பணிப்பாளர் ராமராஜ் கைது செய்யப்பட்டதும் உண்மை என்று தெரிகிறது. சென்ற முறை இவர்கள் நடத்திய ஊர்வலத்தின் போதும் தேசியத்திற்கு ஆதரவான இரண்டு சிறுவர்கள் படம் பிடிக்க முற்பட்டதாக கூறி இவர்களால் துன்புறுத்தப்பட்டிருந்தனர். ஊர்வலம் போவதன் நோக்கமே, தங்களையும் தங்களின் கோரிக்கைகளையும் உலகுக்கு அறிய செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். அதனாலேயே மக்கள் கூடுகின்ற வீதிகளால் ஊர்வலம் போகின்றனர். ஒரு வெளிப்படையான ஊர்வலத்தை படம் பிடிக்கும் ஜனநாயக உரிமை அனைவருக்கும் உண்டு. தங்களை படம் பிடித்து விடுவார்கள் என்று அஞ்சுபவர்கள் வீதியில் இறங்கி போராடக் கூடாது. ஆனால் யுத்தம் வேண்டாம் என்று ஊர்வலம் போகின்ற இவர்கள் தங்களை படம் பிடிப்பவர்கள் மீது மேற்கொள்ளும் அராஜகங்களில் இருந்தே, இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என அறிந்து கொள்ளலாம். இவ்வாறானவர்கள் தங்களை ஜனநாயகத்திற்காக குரல் கொடுப்பதாக சொல்லிக் கொள்வது மிகவும் நகைப்பிற்கிடமான ஒன்று.
அதே வேளை ராமராஜ் மீதான கைதும் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. இது ஒரு உள்வீட்டு வேலை என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஊர்வலத்தில் பல ஈபிடிபி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். ஈபிடிபிக்கும் ரிபிசிக்கும் ஆகாது என்பது உலகு அறிந்த விடயம். டக்ளஸ் தேவானந்தாவை ரிபிசி தொடர்ந்து விமர்சித்து வருவதால், ஆத்திரத்தில் இருந்த ஈபிடிபியினர் பொலிஸாரிடம் ராமாராஜை காட்டிக் கொடுத்தனர் எனச் சொல்லப்படும் செய்தியையும் புறம் தள்ளுவதற்கில்லை.
நன்றி>வெப்புலகம்.
உங்கை ஒரு தளம் புரண்டு புரண்டு அழுது வடிக்குது. உவன் காமரசான் வரலாறு இது தான். அண்டப் புழகு புழுகி ஒரு பெண்ணை சுவிசிலை மடக்கினான்.. அவ நல்ல காசு வைச்சிருந்தான் அது தான் பிறவு அங்கை கள்ள மட்டை கடன் மட்டை தூள் வியாபாரம் போடர் போன்ற வற்றிலை இருக்க சுவிஸ் பொலிஸ் இவனை மடக்கிப்போட்டுது. பிணையிலை வெளியிலை வந்த ராமராசு அங்கை மடக்கின பொட்டையை மயக்கி லண்டனுக்க தப்பி வந்திட்டான். பிறகு திரும்ப அங்கை போகையில்லை. உந்த ரீபீசி நடத்தின பணக்கொள்ளை விழா சுவிசிலை நடந்தும் போகயில்லை. ஆன இப்ப பிரித்தானிய புத்தகம் சமாளிக்கலாம் எண்டு போனவனை சுவிஸ் பொலிஸ் மடக்கிப்போட்டுது. உந்த வ பிறந்ததுதின்றை மனிசியும் இப்ப ரீபிசியிலை அழுது கொட்டுறா. தம்பி காமராசுவும் உண்டியலானும் இப்ப மொட்டை கடிதாசி பிசினசு தான் செய்யினம். ஆனால் கடைசியை காமராசனுக்கே இந்த கதி என்டால் உண்டியலான்???? வெகு விரைவில்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
nantri thagavalukku
வணக்கம் சதயம்,
நான் ஆதாரமற்ற எந்த தகவலையும் போடவில்லை, வந்த தளங்களின் முகவரியும் இட்டு அதுபற்றி எனது கருத்தையும் இடுகிறேன், உங்கள் கருத்துக்களையும் விவாதங்களையும் வேண்டி நிற்கிறேன்.
வணக்கம் anonyam வரவுக்கு நன்றி, உங்கள் கருத்தையும் இடுங்கள்.
ஜெனிவா பேச்சுக்களின்போது ஸ்ரீலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இயங்கும் ஒட்டுப்படைகளின் ஆயுதக் களைவிற்கு ஸ்ரீலங்கா அரசு இணக்கம் தெரிவித்தமைக்கு சர்வதேச அழுத்தமே காரணமென தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர் நிறுத்த ஒப்பந்த விதிகளின் படி அரச கட்டுப்பாட்டில் இயங்கும் துணை ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு வடக்கு கிழக்குப் பகுதிகளிலிருந்து அவர்கள் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும் விடுதலைப் புலிகளினாலும், நோர்வே அரசினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க முதல் நாள் பேச்சுக்களின் போது ஸ்ரீலங்கா அரசு ஏற்க மறுத்திருந்தது.
இதனால் இரு தரப்பிற்குமிடையே கடுமையான முறுகல் நிலை நீடித்தபோதும் ஸ்ரீலங்கா அரச தரப்பு தமது நிலைப்பாட்டில் விட்டுக் கொடுக்கா போக்கை கடைப்பிடித்தனர்.
ஸ்ரீலங்கா அரசின் இந்த கடும்போக்கு குறித்து உனடியாகவே அமெரிக்கா உட்பட்ட ஸ்ரீலங்காவிற்கு உதவி வழங்கும் நாடுகளின் கவனத்திற்கு கொண்டுவந்த நோர்வே அரசு உரிய அழுத்தங்களை ஸ்ரீலங்காவிற்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்தது.
இதனையடுத்தே இணைத்தலைமை நாடுகளின் சார்வில், அறிக்கை வெளியிட்ட அமெரிக்க இரு தரப்பும், விட்டுக்கொடுப்புடனும், அர்ப்பணிப்புடனும் பேச்சுக்களில் ஈடுபடுமாறு வலியுறுத்தியது.
ஜெனிவா பேச்சுக்களானது இரு தரப்பினருக்கிடையேயுமான நம்பிக்கையினை மீண்டும் கட்டியெழுப்புவதற்குரிய நல்லதொரு சந்தர்ப்பம் எனவும், இதன்மூலம் யுத்த நிறுத்த உடன்படிக்கையை உரிய முறையில் கடைப்பிடிப்பதற்குரிய வழிகளை ஏற்படுத்த இரு தரப்பும் இணங்க வேண்டும்மெனவும் அமெரிக்கா தனது அறிக்கையில் தெரிவித்திருந்து.
அதேவேளை ஸ்ரீலங்கா அரசு ஒட்டுப்படைகளின் ஆயுதக் களைவிற்கு இணங்காமை தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்ற சில வெளிநாட்டு இராதந்திரிகள் ஸ்ரீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் தொடர்பு கொண்டு, ஸ்ரீலங்கா அரசின் நிலை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டதாகவும், தனது இந்த கடும்போகு நிலையை ஸ்ரீலங்கா அரசு விட்டுக்கொடுக்காது விட்டால் சர்வதேச நாடுகள் மத்தியில் ஸ்ரீலங்கா தொடர்பான நிலைப்பாட்டில் தவறான எண்ணத்தை ஏற்படுமென தெரவித்தனர்.
இதனையடுத்தே அரச தரப்பு பேச்சுக்குழுவினருக்கு ஒட்டுப்படைகளின் ஆயுதக் களைவு பற்றிய உறுதி மொழியினை வழங்குமாறு மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். எனினும், இதனை எழுத்து மூல ஒப்பந்தங்களில் இணைக்க இடமளிக்கக் கூடாது என வலியுத்தியதாக தெரியவருகிறது.
இதன் காரணமாகவே பேச்சுக்கள் தொடர்பாகவும், பேச்சுக்களின்போது இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் விடுதலைப் புலிகளுடன் இணைந்து கூட்டறிக்கையை ஸ்ரீலங்கா அரசு தரப்பு வெளியிட மறுத்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment