21 February, 2006

விடுதலைப்புலிகள் என்னை கொன்று விடுவார்கள்: கருணா அலறல்

கொழும்பு, பிப். 21- விடுதலைப்புலிகள் இயக் கத்தில் தளபதியாக இருந்து வந்த கருணா தனியாக பிரிந்து புதிய அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறார். இதை தொடர்ந்து இரு அமைப்புகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. தற்போது கருணா இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவர் இ-மெயில் மூலம் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:- விடுதலைப்புலிகளிடம் இருந்து அனைத்து ஆயுதங்களையும் பறிக்க வேண்டும். சர்வதேச கண்காணிப்புடன் இதை செயல்படுத்தலாம். எங்கள் அமைப்பு மட்டும் அல்லாமல் மற்ற அமைப்புகளிடம் இருந்தும் ஆயுதங்களை பறிக்கலாம். விடுதலைப்புலிகளிடம் இருந்து ஆயுதங்களை பறிக்காவிட்டால் அவர்கள் என்னை கொன்று விடுவார்கள். அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிக்காதது விடுதலைப்புலிகளுக்கு என்னை கொல்ல சட்டப்பூர்வ அனுமதி அளிப்பது போல உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அமைதி ஏற்படுத்த இலங்கை அரசின் துணை ராணுவ படையிடம் இருந்து ஆயுதங்களை பறிக்க வேண்டும் என்று ஏற்கனவே விடுதலைப்புலிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர். அதற்கு பதிலடியாக கருணா இந்த தகவலை வெளியிட்டு இருப்பதாக தெரிகிறது. இதற்கிடையே ஜெனீவாவில் விடுதலைப்புலிகள்-இலங்கை அரசு பிரதிநிதிகள் இடையே நாளையும் நாளை மறுநாளும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதற்காக இருதரப்பு பிரதிநிதிகளும் ஜெனீவாவில் உள்ளனர். நன்றி>மாலைமலர் தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது சான்றோர் வாக்கு.

2 comments:

said...

தேனி உட்பட சில புளுகுத் தளங்களுக்கு எவ்விதத்திலும் சளைத்ததில்லை நிதர்சனம் புளுகுத் தளம். அதைப் பிரதிபண்ணிப் போடும் உம்முடைய தளமும் எவ்விதத்திலும் சளைத்ததில்லை.
மக்களை முட்டாளாக நினைப்பதில் எல்லோரும் வல்லவர்கள். நிதர்சனத்தின் செய்தித்திரிப்புக்கும் படவிளையாட்டுக்கும் உவமையாக புலியெதிர்ப்புத் தளங்கள்கூட கிட்ட வரா.
அவ்வளவுக்கு மக்களைக் கேணயர்களாக நினைத்துக்கொண்டிருக்கிறது நிதர்சனம்.
அதைப் படியெடுத்துப் போடுவதூடக நீர் என்ன சொல்ல வருகிறீர்?

கடந்த பதிவில் பின்னூட்ட முடியாமலுள்ளதால் இங்கே இப்பின்னூட்டு.

said...

வணக்கம் கொளுவி,
விடயங்களை கொடுப்பது மட்டுமே எனது பொறுப்பு, அதை சீர்தூக்கி பார்பது வாசகனின் பொறுப்பு, மக்களை எவராலும் ஏமாற்றமுடியாது. அவர்கள் 50 வருடமாக ஏமாந்து ஏமாந்து தற்போது தெளிவான சிந்தனையில் இருப்பவர்கள், தக்கதொரு தலைமையை ஏற்றிருப்பவர்கள். ஆனால் சமூகவிரோதிகளையும், எட்டப்பர்களையும் மண்ணித்து மண்ணித்தே அழிந்துபோன இனம் தமிழினம், பண்டாரவன்னியனும், கட்டப்பொம்மனும்தான் அழிந்தார்கள் அப்போது, அது வரலாறு கற்றுத்தந்த பாடம் எமக்கு, அது இனி நடவாது, காட்டிக்கொடுப்போர் இனம் காட்டப்படவேண்டும், அழிந்துபோன எம் இனம் விடுதலை பெறவேண்டும் அதுவே என் அவா.