28 February, 2006

குட்டையை கலக்கும் ஜே.வி.பி

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி ஜே.வி.பி. வழக்கு! [திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2006, 19:16 ஈழம்] [ச.விமலராஜா] இலங்கையில் அமுலில் உள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமயவினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தம் செல்லாது என்று கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சிறிலங்கா பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கைச்சாத்திட்ட இந்த ஒப்பந்தம் சிறிலங்காவின் அரசியல் யாப்புக்கு எதிரானது என்றும் அம்மனுவில் ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமயவினர் தெரிவித்துள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்டோர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைதிச் செயலகத்தின் ஊடாக இந்த வழக்கின் தாக்கீதை அனுப்பி வைக்குமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை மார்ச் 29 ஆம் நாள் நடைபெற உள்ளது. நன்றி>புதினம். இன்று இலங்கையின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் இருக்கிறது. ஒருகாலத்தில் சிங்கப்பூர் போன்று வருமென எதிர்பார்க்கப்பட்ட இலங்கை , இன்று முன்பிருந்த நிலைமையை விடவும் மிகவும் கீழே இறங்கிவிட்டது. இந்நிலைக்கு இருபெரும்கட்சிகளான ஜக்கியதேசியகட்சிக்கும், சிறீலங்கா சுதந்திரகட்சிக்கும் முக்கிய பங்குண்டு, அவர்கள் வழியில் இலங்கையின் பொருளாதாரத்தை சீரழிக்க ஜேவிபி ஆரம்பித்திருக்கிறது. வெளிநாடுகள் வழங்கிய உதவிப்பணத்தை, சுனாமியால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு பகிர்ந்தளிக்க உருவாக்கப்பட்ட, சாதாரன சுனாமிகட்டமைப்புக்கே தடைபோட்டதின் மூலம், இலங்கையின் சட்டத்துக்குள் இனமுரன் பாட்டைதீர்க்கமுடியாது என்ற செய்தியை சொல்லி நின்றது, இனவாதம்கக்கும் சிங்கள நீதிமண்று. மீண்டும் அங்கொருவழக்கு, ஜேவிபிக்கு ஆதரவாக தீர்ப்பு வரலாம். மீண்டும் புதிய ஒப்பந்தம் எழுதலாம், சிங்கள உறுமய வழக்குபோடும் தடைவரலாம், மீண்டும் புதிய ஒப்பந்தம், அப்புகாமி வழக்குபோடுவார்................இது ஒருதொடர்கதை ஆகும். சிங்கள இனவாத நீதிமண்று எமக்கு சொல்லி நிற்கும் ஒரு உண்மை, சிங்கள யாப்புக்குள் ஒரு தீர்வு வராது என்பதே. சிங்கள யாப்புக்குள் அடங்காத தமிழர், சிறீலங்கா மக்களா? சிறிலங்காவின் வெளிநாட்டு கடன் சுமையில் தமிழர்களும் பங்காளிகளா? இந்தபணம் எதற்காக செலவழிக்கப்பட்டது? தமிழர்களது உயிர், உடமை, வாழ்விடங்களை அழிப்பதற்காக பெறப்பட்ட, வெளிநாட்டுகடன் சுமை தமிழர் தலையிலுமா? "கொடுவாளினை எடடா கொடியோன் செயல் அறவே குகைவாழ் புலியே!!!"

0 comments: