19 February, 2006

லண்டனில் இன்று நடந்த ஊர்வலமானது அவசியமான ஒன்றா?

பேர்ச்சுவார்த்தைக் குழுவில் பேரியல் அஸ்ரப் சேர்த்துக்கொள்ளப்பட்டமை சட்டவிரோதமானது - ஹக்கீம அரசாங்க பேச்சுவார்தைக் குழுவில் முஸ்லீம் தரப்பு பிரதிநிதியாக அமைச்சர் பேரியல் அஸ்ரப் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்தைகளில் முஸ்லீம்கள் தனித்தரப்பாக கலந்து கொள்ள வேண்டும் என முஸ்லீம் காங்கிரஸ் வலியுறுத்திவந்துள்ளது எனினும் தனித்தரப்பாக முஸீம்கள் கலந்து கொள்ள வேண்யடிதில்லை என்றும் அரசாங்க பேச்சுவார்தைக் குழுவில் முஸ்லீம் பிரதிநிதித்துவம் இடம்பெறும் என்றும் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்திருந்தார் இதனை அடுத்து முஸ்லீம் தரப்பு பிரதிநிதியை தெரிவு செய்யும் சந்தர்ப்பம் முஸ்லீம் கட்சிகளுக்கு வழங்கப்பட்டது எனினும் இதனை முஸ்லீம் காங்கிரஸ் புறக்கணித்தது தற்போது அரசாங்க பேச்சுவார்தைக் குழுவில் அமைச்சர் பேரியல் அஸ்ரப் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறித்து முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். முஸ்லிம் தனித்தரப்பு கோரிக்கையினை அரசங்கம் நிராகரித்தால் பேச்சுவார்தைகளில் அரசாங்க தரப்பு பிரதிநிதியாக முஸ்லீம்கள் கலந்து கொள்வதில்லை என்று ஏற்கனவே அனைத்து முஸ்லீம் கட்சிகளும் இணக்கம் கண்டுள்ள நிலையில் அதனை புறக்கணித்து விட்டு பேரியல் அஸ்ரப் அரசாங்க பேச்சுக்குழுவில் தன்னை இணைத்து கொண்டுள்ளதாக ரவூப் ஹக்கீம் குற்றம் சுமத்தியுள்ளார். நன்றி> பதிவு. இன்று நடந்த ஊர்வலத்தில் முஸ்லிம்களை இனைத்துக்கொள்ளவில்லை என முஸ்லிம்கள் தரப்பில் கூறப்பட்டது, ஆனால் பேரியல் அஸ்ரப் கலந்து கொண்டதுக்கு ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டி உள்ளார். யாழ் மாநகரசைக்கு போட்டியிடும் மெளலி எஸ்.எம். லகீஸ் மற்றும் எஸ்.எம்.ஸஹப் கூறுகிறார்கள், தேசியத்தலைவர் முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறவும், தமிழர்களுடன் முஸ்லீம்கள் ஒற்றுமையாக வாழவழி சமைப்பார் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வே.

0 comments: