28 February, 2006
குட்டையை கலக்கும் ஜே.வி.பி
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி ஜே.வி.பி. வழக்கு!
[திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2006, 19:16 ஈழம்] [ச.விமலராஜா]
இலங்கையில் அமுலில் உள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமயவினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தம் செல்லாது என்று கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சிறிலங்கா பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கைச்சாத்திட்ட இந்த ஒப்பந்தம் சிறிலங்காவின் அரசியல் யாப்புக்கு எதிரானது என்றும் அம்மனுவில் ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமயவினர் தெரிவித்துள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்டோர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைதிச் செயலகத்தின் ஊடாக இந்த வழக்கின் தாக்கீதை அனுப்பி வைக்குமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை மார்ச் 29 ஆம் நாள் நடைபெற உள்ளது.
நன்றி>புதினம்.
இன்று இலங்கையின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் இருக்கிறது. ஒருகாலத்தில் சிங்கப்பூர் போன்று வருமென எதிர்பார்க்கப்பட்ட இலங்கை , இன்று முன்பிருந்த நிலைமையை விடவும் மிகவும் கீழே இறங்கிவிட்டது. இந்நிலைக்கு இருபெரும்கட்சிகளான ஜக்கியதேசியகட்சிக்கும், சிறீலங்கா சுதந்திரகட்சிக்கும் முக்கிய பங்குண்டு, அவர்கள் வழியில் இலங்கையின் பொருளாதாரத்தை சீரழிக்க ஜேவிபி ஆரம்பித்திருக்கிறது.
வெளிநாடுகள் வழங்கிய உதவிப்பணத்தை, சுனாமியால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு பகிர்ந்தளிக்க உருவாக்கப்பட்ட, சாதாரன சுனாமிகட்டமைப்புக்கே தடைபோட்டதின் மூலம், இலங்கையின் சட்டத்துக்குள் இனமுரன் பாட்டைதீர்க்கமுடியாது என்ற செய்தியை சொல்லி நின்றது, இனவாதம்கக்கும் சிங்கள நீதிமண்று.
மீண்டும் அங்கொருவழக்கு, ஜேவிபிக்கு ஆதரவாக தீர்ப்பு வரலாம். மீண்டும் புதிய ஒப்பந்தம் எழுதலாம், சிங்கள உறுமய வழக்குபோடும் தடைவரலாம், மீண்டும் புதிய ஒப்பந்தம், அப்புகாமி வழக்குபோடுவார்................இது ஒருதொடர்கதை ஆகும்.
சிங்கள இனவாத நீதிமண்று எமக்கு சொல்லி நிற்கும் ஒரு உண்மை, சிங்கள யாப்புக்குள் ஒரு தீர்வு வராது என்பதே.
சிங்கள யாப்புக்குள் அடங்காத தமிழர், சிறீலங்கா மக்களா?
சிறிலங்காவின் வெளிநாட்டு கடன் சுமையில் தமிழர்களும் பங்காளிகளா?
இந்தபணம் எதற்காக செலவழிக்கப்பட்டது?
தமிழர்களது உயிர், உடமை, வாழ்விடங்களை அழிப்பதற்காக பெறப்பட்ட, வெளிநாட்டுகடன் சுமை தமிழர் தலையிலுமா?
"கொடுவாளினை எடடா கொடியோன்
செயல் அறவே குகைவாழ் புலியே!!!"
27 February, 2006
பெருந்திரளான மக்களுடன் விடுதலையின் வாசலில்.
கருணாவுக்கு புதிய அடையாள அட்டை.
வினாயகமூத்தி முரளீதரன் என்ற கருணாவுக்கு இலங்கை அரசு புதிய அடையாள அட்டை - விக்னேஸ்வரன் மதன்குமார் என்ற பெயரில் கொழும்பில் பிறந்ததாகவும்; பதுளையில் வசிப்பதாகவும் பதிவு.
நன்றி>நிதர்சனம்
இன்றைய நிலைமைகளை நிதர்சனமாக்குகிறது. எதிரிகள்/துரோகிகள் புரியும் பாஷையில் புரிய வைக்கிறது. இதே போன்று தமிழ்நெற் தொடர்ந்தும், மற்றைய இணையத்தளங்களான "புதினம், சங்கதி, ..." போன்றவையும் தங்களுக்குள் உண்டாக்கியிருக்கும் வரம்புகளைத் தாண்டி உண்மைகளை வெளிக் கொணர முயல வேண்டும்.
"முட்களுக்கு முட்களாலேயே பதிலளிப்போம்"
24 February, 2006
ஜெனிவாவில் அரசுக்கு நேர்ந்த அவலம்.
ஜெனீவாப் பேச்சுகளில் முதல் நாள் ஆரம்ப நிகழ்வில் தான் வைத்த வலையில் தானே விழும் அவலம் இலங்கை அரசுத் தரப்புக்கு நேர்ந்திருக்கின்றது.
அரசுப் பிரதிநிதிகளோடு விடுதலைப் புலிகள் சரிக்குச் சரி சமதையாக - சம அந்தஸ்தில் - அமர்ந்திருந்து பேசுவதும், வாதிடுவதும் சிங்கள, பௌத்த பேரினவாத சக்திகளின் முன்னால் தனக்கு பேரிழுக்குத் தரும் விடயமென்றுகருதிய அரசுத்தரப்பு, அந்தப் பேச்சுகள் பற்றிய உள்வீட்டு விடயங்கள் அம்பலமாகாமல் அமுக்கி வாசிக்கச் செய்வதன் மூலம் விவரங்களை மூடிமறைத்து சமாளிக்கத் திட்ட மிட்டது. அதற்காக செய்தியாளர்களுக்கு முழுக் கதவடைப்பு நடவ டிக்கை வனையப்பட்டது. முன்னைய அமைதிப் பேச்சுகள் போலல் லாமல் இந்த அமைதிப்பேச்சுகள் பற்றிய விடயங்களை பேச்சு முடிவடையும் வரை ஊடகவியலாளர்களுக்கு வெளியிடுவதில்லை என்ற தீர்மானம் இந்த அடிப்படையில்தான் எடுக்கப்பட்டது.
ஆனால், இந்தத் தீர்மானத்தை முதலில் மீறியதே இலங்கை அரசுத்தரப்புத்தான். பேச்சுகளில் கலந்துகொள்ள ஜெனீவா வந்திருந்த இருதரப்புப் பிரதிநிதிகள் குழுவும் ஊடகவியலாளர்கள் நெருங்கமுடியாதவாறு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நகரிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள சாட்டோ டி பொய்ஸி அரண்மனையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அரசுத் தரப்பு பிரதிநிதிகள் குழுவில் ஒருவரான அமைச்சர் ரோஹித போகொல்லாகம மட்டும், பேச்சு நடைபெறும் புதன்கிழமை தினத் துக்கு முதல்நாள் மாலை அந்த அரண்மனையிலிருந்து பிய்த்துக் கொண்டு ஜெனீவா நகருக்கு வந்தார். திடீரென ஊடகவியலாள ரைக் கூட்டி ஒரு செய்தியாளர் மாநாடு நடத்தினார்.
அப்போது, யுத்த நிறுத்த உடன்பாட்டை திருத்தியமைத்தல் பற்றியே அடுத்த நாள் ஆரம்பமாகும் பேச்சுகளின்போது கலந்துரையாடப்படும் என்ற அரசின் கொள்கை நிலைப்பாட்டை திட்டவட்டமாகப் பகிரங்கப்படுத்திப் பிரகடனப்படுத்தவும் அவர் தவறவில்லை.
செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை என்ற பொது உடன்பாட்டை அரசுத்தரப்பு மீறிய நிலையில் பேச்சுகள் புதனன்று தொடங்கின. அந்தத் தவறுக்கான விளைவை அரசுத் தரப்பு பேச்சின் ஆரம்பக் கட்டத்திலேயே வாங்கிக் கட்டிக்கொள்ளவேண்டியதாயிற்று.
முதல் நாள் ஆரம்பப் பேச்சில் புலிகளின் பிரதிநிதிகள் சார்பில் அதன் பேச்சுக் குழுத்தலைவர் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் நிகழ்த்திய அங்குரார்ப்பண உரையின் பிரதியைப் பெற்றுக்கொண்ட ஊடகவியலாளர்கள் சில கணங்களில் அதைப் பகிரங்கமாக உலாவரச் செய்துவிட்டனர். ஆழமான கருத்துகள் அடங்கியிருந்த அந்த உரை, யுத்தநிறுத்த ஒப்பந்தம் முழு அளவில் செம்மையாக நடைமுறைப்படுத்தப்படுவதே மாற்றமுடியாத ஒரே நடவடிக்கையாக இருக்கவேண்டும் என்பதைக் காரிய, காரணங்களோடு விளக்கமாக வற்புறுத்தியது.
மதியுரைஞர் பாலாவின் அங்குரார்ப்பண உரை ஊடகங்களுக்குக் கிடைத்துவிட்டது என்பதை அறிந்துகொண்ட அரசுத் தரப்பு அதற்குப் பதில் நடவடிக்கை எடுக்கிறேன் என்று கறுவிக்கொண்டு தனக்குத் தானே குழிபறித்துக்கொண்டமைதான் வேடிக்கையான நிகழ்வு. பாலாவின் அங்குரார்ப்பண உரை வெளியானதால் அதற்குப் பதிலடியாக தனது தரப்பு பேச்சுக் குழுவின் தலைவர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் அங்குரார்ப்பண உரையைப் பகிரங்கப்படுத்தத் தீர்மானித்தது அரசுத்தரப்பு. அந்த உரையின் உள்ளடக்கம், பேச்சுமேசையில் முதல் நாள் காலையில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஆகியவை பற்றியெல்லாம் கருத்திலெடுக்காமல் பழிக்குப் பழி - அறிக்கைக்கு அறிக்கை- உரைக்கு உரை - என்ற அடிப்படையில் நடந்து தன்னைத்தானே முட்டாளாக்கிக் கொண்டது அது.
அப்படி என்னதான் இந்த அங்குரார்ப்பண உரை வெளியானதால் நேர்ந்துவிட்டது? அதை அறிவதற்கு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் அந்த உரையின் அடிப்படை அம்சங்களை நாம் கவனிக்கவேண்டும்.
""அரசும் புலிகளும் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கை அரசுத்தரப்பால் ஏற்றுக்கொள்ளமுடியாதது. அது இலங்கையின் அரசமைப்புக்கு முரணானது. இலங்கையின் தேசியப் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கத்தக்கது. இலங்கையின் இறைமைக்கு ஆபத்தானது. ஆகவே, அந்த ஒப்பந்தத்தை மாற்றியமைக்க வேண்டும்'' இதுதான் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் அந்த உரையின் சாராம்சம். இதைப் பகிரங்கப்படுத்தித்தான் தனக்குத்தானே மண்வாரிக்கொண்டது இலங்கை அரசுத்தரப்பு.
மேற்படி ஒப்பந்தம் அரசமைப்புக்கு உட்பட்டதே என்பதை, ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப் பொதுக்கட்டமைப்புக்கு எதிரான வழக்கில் தான் வழங்கிய தீர்ப்பின் நடுவே இலங்கை உயர்நீதி மன்றம் தெளிவாகத் தெரிவித்திருந்தது. அரசமைப்பு ஏற்பாடுகள் குறித்து வியாக்கியானம் செய்து தீர்ப்பளிக்கும் ஏக அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கே உண்டு. அந்த நீதிமன்றம் மேற்படி அரசு - புலிகள் யுத்த நிறுத்தத்துக்கு வழிவகுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசமைப்புக்கு இணக்கமானதே என்று தனது தீர்ப்பில் கூறியிருக்க, அதற்கு முரண்பட்டு அந்த ஒப்பந்தம் அரசமைப்புக்கு மாறானது என்று அரசுப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அறிவித்திருக்கிறார். அது மட்டுமன்றி அதனை அரச சமாதானச் செயலகத்தின் இணையத்தளம் ஊடாகத் தனது உரையாகப் பகிரங்கப்படுத்தியும் இருக்கிறார்.
உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணாக - மாறாக- இவ்வாறு பகிரங்கமாக விமர்சனம் முன்வைப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் விடயமாகக் கொள்ளப்பட முடியாததா என்று ஆராய்வது ஒருபுறமிருக்க, இவ்வாறு கருத்து வெளியிட்டு, அதைப் பகிரங்கப்படுத்திய அரசுத்தரப்பு, கடைசியாக ஜெனீவாப் பேச்சில் என்ன செய்திருக்கிறது?
தற்போதைய யுத்தநிறுத்த ஒப்பந்தம் தனது நாட்டின் அரசமைப்புக்கு முரணானது என்றும், தனது நாட்டின் ஐக்கியம், ஆட்புல ஒருமைப்பாடு, இறைமை, தேசியப் பாதுகாப்பு என்பனவற்றுக்கு ஆபத்து விளைவிக்கத்தக்கது என்றும், முதல்நாள் பேச்சின் ஆரம்பத்திலேயே தான் வலியுறுத்தி, பின்னர் அதைப் பகிரங்கப்படுத்திவிட்டு, அடுத்த கணம் முதல் அந்த ஒப்பந்தத்தை வரிக்குவரி- ஷரத்துக்கு ஷரத்து அப்படியே செம்மையாக நடைமுறைப்படுத்துவது குறித்து அமர்ந் திருந்து விரிவாகப் பேசவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக் கிறது.
ஆக இப்போது, தனது நாட்டின் அரசமைப்புக்கு மாறாக தனது நாட்டின் ஐக்கியம், இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, தேசியப் பாதுகாப்பு என்பனவற்றிற்குப் பங்கம் விளைவிக்கும் - ஒரு நடவடிக் கையை அரசின் மூத்த அமைச்சர்கள் நால்வர், பொலீஸ்மா அதிபர், கடற்படைத் தளபதி ஆகியோர் உட்பட அரச உயர்மட்டத்தினர் அடங்கிய குழுவினர் ஜெனீவாப் பேச்சுகளில் மேற்கொண்டுள்ள னர் என்பதை அரசே ஒப்புக்கொள்ளவேண்டிய நிலைமை எழுந்திருக்கிறது.
பாலாவின் அங்குரார்ப்பண உரை பகிரங்கப்படுத்தப்பட்டதற்குப் பதில் நடவடிக்கை என்று சீறி, தனது தரப்புப் பேச்சுக் குழுத்தலைவரின் ஆரம்ப உரையைப் பகிரங்கப்படுத்திய இலங்கை அர சுத்தரப்பு, அந்த உரையை அம்பலப்படுத்திவிட்டு, அதற்கு முரணான விதத்தில் ஒப்பந்தத்தை செம்மையாக நடைமுறைப்படுத்துவது குறித்துப்பேச இணங்கி, தன்னைத்தானே சிறுமைப்படுத்திக்கொள்ள நேர்ந்திருக்கிறது. ஜெனீவாவில் அரசுக்கு நேர்ந்த அவலம் இது.
நன்றி>உதயன்
23 February, 2006
இனவாதம் கக்கும் ஜே.வி.பி, நோர்வேயை வெளியேற்ற பணிப்பு.
நேற்று முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடைந்திருக்கும் சமயத்தில், நோர்வேயை பேச்சுவார்த்தையில் இருந்தும், இலங்கையில் இருந்தும் வெளியேற்றவேண்டும் என ஜேவிபி அறிவித்துள்ளது, நோர்வே விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அளித்து வருவதாகவும், அது நாட்டை பிளவு படுத்தி பிரித்து கொடுத்து விடுமென்றும், பேச்சுவார்த்தைகளை குழப்பும் விதமாக கருத்து தெரிவித்த ஜேவிபி, நோர்வேயை இலங்கையில் இருந்து வெளியேற்ற சம்மதித்ததாலேயே, ராஜபக்சா அரசுக்கு அதாரவு அளித்து, ஜனாதிபதியாக ஆக்கியதாகவும் தெரிவித்துள்ளது.
நன்றி>ரிரிஎன்செய்திகள்
TBC வானொலியின் பணிப்பாளர் ராமராஜ் போலீசாரால் கைது.
நேற்று ஜெனிவாவில் ஜேவிபி, ஜாதிககெல உறுமய கட்சியின் ஆதரவாளர்களும், தமிழ்குழுக்களின் ஆதரவாளர்களும் இணைந்து தமிழீழ தேசியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினர். வெகு குறைவானவர்கள் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தில் கைகலப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ரிபிசி பணிப்பாளர் ராமராஜ் உட்பட சில தமிழர்கள் சுவிஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி இந்த ஊர்வலத்தை ஒழுங்கு செய்வதில் முக்கிய பங்காற்றிய சிலருடன் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளையின் முக்கிய உறுப்பினர்கள் தங்களை படம் பிடிக்க முற்பட்டதாகவும், அதனாலேயே தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். அப்பொழுது தாங்கள் இருவரை பிடித்து வைத்திருந்ததாகவும், ஓடிப் போன மற்றையவர்கள் பொலிஸாரை அழைத்து வந்து ராமராஜ்தான் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியதால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர். அத்துடன் ராமராஜ் இன்று காலை விடுவிக்கப்படுவார் எனவும் கூறினார்கள்.
இவர்களின் கூற்றின்படி ஊர்வலத்தை படம் பிடித்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதும், ரிபிசி பணிப்பாளர் ராமராஜ் கைது செய்யப்பட்டதும் உண்மை என்று தெரிகிறது. சென்ற முறை இவர்கள் நடத்திய ஊர்வலத்தின் போதும் தேசியத்திற்கு ஆதரவான இரண்டு சிறுவர்கள் படம் பிடிக்க முற்பட்டதாக கூறி இவர்களால் துன்புறுத்தப்பட்டிருந்தனர். ஊர்வலம் போவதன் நோக்கமே, தங்களையும் தங்களின் கோரிக்கைகளையும் உலகுக்கு அறிய செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். அதனாலேயே மக்கள் கூடுகின்ற வீதிகளால் ஊர்வலம் போகின்றனர். ஒரு வெளிப்படையான ஊர்வலத்தை படம் பிடிக்கும் ஜனநாயக உரிமை அனைவருக்கும் உண்டு. தங்களை படம் பிடித்து விடுவார்கள் என்று அஞ்சுபவர்கள் வீதியில் இறங்கி போராடக் கூடாது. ஆனால் யுத்தம் வேண்டாம் என்று ஊர்வலம் போகின்ற இவர்கள் தங்களை படம் பிடிப்பவர்கள் மீது மேற்கொள்ளும் அராஜகங்களில் இருந்தே, இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என அறிந்து கொள்ளலாம். இவ்வாறானவர்கள் தங்களை ஜனநாயகத்திற்காக குரல் கொடுப்பதாக சொல்லிக் கொள்வது மிகவும் நகைப்பிற்கிடமான ஒன்று.
அதே வேளை ராமராஜ் மீதான கைதும் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. இது ஒரு உள்வீட்டு வேலை என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஊர்வலத்தில் பல ஈபிடிபி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். ஈபிடிபிக்கும் ரிபிசிக்கும் ஆகாது என்பது உலகு அறிந்த விடயம். டக்ளஸ் தேவானந்தாவை ரிபிசி தொடர்ந்து விமர்சித்து வருவதால், ஆத்திரத்தில் இருந்த ஈபிடிபியினர் பொலிஸாரிடம் ராமாராஜை காட்டிக் கொடுத்தனர் எனச் சொல்லப்படும் செய்தியையும் புறம் தள்ளுவதற்கில்லை.
நன்றி>வெப்புலகம்.
உங்கை ஒரு தளம் புரண்டு புரண்டு அழுது வடிக்குது. உவன் காமரசான் வரலாறு இது தான். அண்டப் புழகு புழுகி ஒரு பெண்ணை சுவிசிலை மடக்கினான்.. அவ நல்ல காசு வைச்சிருந்தான் அது தான் பிறவு அங்கை கள்ள மட்டை கடன் மட்டை தூள் வியாபாரம் போடர் போன்ற வற்றிலை இருக்க சுவிஸ் பொலிஸ் இவனை மடக்கிப்போட்டுது. பிணையிலை வெளியிலை வந்த ராமராசு அங்கை மடக்கின பொட்டையை மயக்கி லண்டனுக்க தப்பி வந்திட்டான். பிறகு திரும்ப அங்கை போகையில்லை. உந்த ரீபீசி நடத்தின பணக்கொள்ளை விழா சுவிசிலை நடந்தும் போகயில்லை. ஆன இப்ப பிரித்தானிய புத்தகம் சமாளிக்கலாம் எண்டு போனவனை சுவிஸ் பொலிஸ் மடக்கிப்போட்டுது. உந்த வ பிறந்ததுதின்றை மனிசியும் இப்ப ரீபிசியிலை அழுது கொட்டுறா. தம்பி காமராசுவும் உண்டியலானும் இப்ப மொட்டை கடிதாசி பிசினசு தான் செய்யினம். ஆனால் கடைசியை காமராசனுக்கே இந்த கதி என்டால் உண்டியலான்???? வெகு விரைவில்.
22 February, 2006
ஜெனிவாவில் காத்திருக்கும் பொறி
- முப்பது ஆண்டுகளாகப் போராடிவரும் தமது சகஜீவிகளைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்ளாமல், வெளிநாட்டு நிபுணர்கள் வந்து வகுப்பு எடுக்கும் நிலையிலேயே அரசின் மிக மூத்த அமைச்சர்கள் காணப்படுவது எதைக்காட்டுகிறது?
- முன்பு ஜெயவர்த்தனவின் யுத்தத்தை ராஜீவ்காந்தி செய்தார். இப்பொழுது மஹிந்த யாரைவைத்துச் செய்யலாம்? என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்.
"உங்களுக்குச் சமாதானம் வேண்டுமானால் உங்களை அதற்கு ஆயத்தப்படுத்திக்கொள்ளுங்கள்" என்று ஒரு லத்தீன் வாசகம் உண்டு. கொழும்பில் கடந்தசில வாரங்களாக நடைபெற்றுவரும் ஏற்பாடுகளை வைத்துப்பார்த்தால் ஒன்றில் அரசாங்கம் ராஜதந்திர ரீதியாக மிகவும் கத்துக்குட்டி நிலையில் உள்ளது என்ற முடிவுக்கு வரநேரிடும். அல்லது அரசாங்கம் சமாதானத்துக்கு விசுவாசமில்லை என்ற ஒரு முடிவிற்கும் வரலாம்.
அரசாங்கம் உண்மையாகவே பேச்சுவார்த்தைக்கு தன்னை விசுவாசமாக ஆயத்தப்படுத்திவருகிறது என்று ஒரு கதைக்காக எடுத்துக்கொண்டாலும் அதற்காக அவர்கள் தருவித்திருக்கும் நிபுணர்களால் எவ்வளவுதூரத்துக்கு அவர்களை ஆயத்தப்படுத்த முடியும்?
இச்சிறு தீவில் கடந்த சுமார் முப்பது ஆண்டுகளாகப் போராடிவரும் தமது சகஜீவிகளைப்பற்றி அதிகம் தெரியாத ஒரு நிலையிலேயே, அதாவது இது விஷயத்தில் வெளிநாட்டு நிபுணர்கள் வந்து வகுப்பு எடுக்கும் நிலையிலேயே அரசாங்கத்தின் மிக மூத்த அமைச்சர்கள் காணப்படுகிறார்கள் என்பது எதைக்காட்டுகிறது?
பிரச்சினையில் ஆழ அகலத்தைப் புரிந்துகொள்வது என்றால் முதலில் அவர்கள் உள்ளுரிலேயே அணுகக்கூடிய ஆட்கள் இருக்கிறார்கள். முதலாவதாக அவர்களுடைய அமைச்சரவையிலேயே ஒரு உறுப்பினராக இருக்கும் டி. குணசேகரவிடம் வகுப்பு எடுக்கலாம். ஒற்றையாட்சி முறைக்குள் ஏன் பிரச்சினையைத் தீர்க்க முடியாதுஎன்பதை அவரிடம் கேட்டுத்தெளியலாம். அவரைத்தவிர பேராசிரியர் ஜெயதேவஉயாங்கொட இருக்கிறார். பேராசிரியர் சுசரித்த கமலத் இருக்கிறார். விக்ரர் ஐவன் இருக்கிறார். இவர்களைப் போன்ற உள்ளுர் நிபுணர்களை அழைத்து ஆலோசனை கேட்கலாம்.
ஜீ.எல்.பீரிஸோ அல்லது மிலிந்த மொறகொடவோ வெற்றிகரமாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தியவர்கள் அல்லர். அவர்கள்செய்த சமாதானம் ஆறு சுற்றுப்பேச்சுக்களின் பின் இறுகிப்போய் நின்று விட்டதை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்.
மற்றது நாராயண சுவாமியிடம் வகுப்பு எடுப்பது பற்றியது. நாராயண சுவாமி விடுதலைப் புலிகளின் உள் வட்டங்களுக்குள் தொடர்ச்சியாக பழகிய ஒருவரல்லர். றொகான் குணரட்ணவைப்போல அவரும் இரண்டாங்கை, மூன்றாங்கை தகவல்களை வைத்துக்கொண்டு எழுதுபவர்தான். அவரும் அவரையொத்த எல்லாருமே விடுதலைப் புலிகளை தமது நோக்கு நிலையிலிருந்து பார்ப்பவர்கள்தான். விடுதலைப் புலிகள் இயக்கத்தை, அதை அதுவாகப் பார்க்கத் தயாரில்லாத இவர்களுக்கு புலி மனம் எனப்படுவது எளிதில் பிடிபடாது வழுக்கிச் செல்லும் ஒன்றாகவே - 'இலூசிவ்' ஆகவே - தோன்றமுடியும்.
நாராயணசுவாமி மட்டுமல்ல றொகான் குணரட்ண மட்டுமல்ல புதுடில்லியில் இருந்துகொண்டு தமது பிராந்திய பேரரசு நலன்களுக்கூடாக தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையும் பார்க்கும் எவருக்குமே புலிகள் இலூசிவ் ஆகத்தான் இருப்பர். கொழும்பிலிருந்துகொண்டு புலிகளை தமது நோக்குநிலையில் இருந்து பார்க்கும் எல்லா அறிவுஜீவிகளும் ஊடகக்காரர்களும் என்றைக்குமே புலிமனத்தைக் கண்டுபிடிக்கப்போவதில்லை. யாரெல்லாம் புலிமனதை, அதை அதுவாகப் பார்க்க முடியாதிருக்கிறார்களோ, அல்லது அதை அதுவாகப் பார்க்க மறுக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் அது 'இலூசிவ்' ஆகத்தான் இருக்கும்.
புலிமனதை அதை அதுவாகப் புரிந்துகொள்வது என்பது தமிழர்களை தமிழர்களிற்கேயான பிரச்சினைகளுக்கூடாகப் புரிந்துகொள்வதுதான். தமிழர்களின் பிரச்சினைகளை அவற்றின் வரலாற்றுத் தொடர்ச்சிக்கூடாக புரிந்துகொள்ளும் எவரும் அந்தப் பிரச்சினைகளின் தவிர்க்கவியலாத ஒரு விளைவே புலிகள் என்பதைக் கண்டுபிடிப்பார்கள்.
எனவே புலிமனதைக் கண்டுபிடிப்பது என்பது அதன் ஆழமான அர்த்தத்தில் தமிழர்களின் பிரச்சினைகளைக் கண்டுபிடிப்பதுதான். இதற்கு ஹவார்ட்டில் படித்து பட்டம்பெற வேண்டியதுமில்லை நாராயண சுவாமியிடம் வகுப்பெடுக்க வேண்டும் என்றுமில்லை.
பிரித்தானியக் கடற்படையின் புகழ்பெற்ற தளபதியாக இருந்தவர் நெல்சன். இவருக்கு ஒரு கண் இல்லை. தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் அதிகம் வளர்ச்சியடைந்திராத அந்நாட்களில் கடற்கரையிலிருந்து காட்டப்படும் சமிக்ஞைகளே சமர்களை வழிநடத்தின.
தளபதி நெல்சன் சமர்களை வழிநடத்திக் கொண்டிருக்கும் போது கள யதார்த்தத்திற்கேற்ப முடிவுகளை எடுக்க விரும்பினால் கரையை நோக்கி பார்வையிழந்த தனதுகண்ணை வைத்துக்கொள்வாராம். இதன் மூலம் கரையில் காட்டப்படும் சமிக்ஞைகள் தனக்குத் தெரியவில்லை என்று சொல்லிவிட்டு தன்முடிவுப்படி சண்டையை வழிநடத்துவாராம்.
நெல்சனின் சகோதரர்கள் இப்பொழுதும் புதுடில்லியிலும், கொழும்பிலும் இருக்கிறார்கள். அவர்கள் எதையாவது புரிந்துகொள்ள விரும்பவில்லை என்றால் அதைப்பார்க்காமலேயே விட்டுவிடுகிறார்கள். ஜெனிவாவுக்குப் போகவிருக்கும் அரச தரப்புப் பிரதிநிதிகளும் இப்படி நெல்சனின் கண்கொண்டே பிரச்சினைகளைப் பார்க்க விரும்புவது தெரிகிறது. மெய்யாகவே அவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்க விரும்புவார்களாயின் அவர்கள் ஆலோசனை பெற்றிருக்கவேண்டியது வேறு ஆட்களிடமே.
எனவே கொழும்பில் நடந்தவை அனைத்துப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பயிற்சிப்பட்டறைகள் அல்ல. மாறாக பிரச்சினைகளைக் காலம் கடத்தவும் விடுதலைப்புலிகளை ஒரு புதிய பொறிக்குள் சிக்கவைப்பதற்குமாகத்தான் அவர்கள் புலிமனதைப் படிக்கிறார்கள்.
அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளுடன் ஒத்துப்போய் அல்லது அதிகம் விட்டுக்கொடுப்பதுபோல ஒரு போக்கைக்காட்டி அதன் மூலம் விடுதலைப்புலிகளை மேற்கு நாடுகளுடன் முரண்பட வைக்கும் விதத்தில் ஒருபொறி கொழும்பில் தயாராகி வருகிறது. இது 1987இல் ஜெயவர்த்தன இந்தியாவுடன் சேர்ந்து செய்த ஒரு பொறியைப்போன்றதே. அந்தப் பொறி நடுவராக வந்த இந்தியாவை விளையாட்டு வீரராக்கியது. முடிவில் அது தமிழர்களையும் இந்தியாவையும் மோத விட்டது.
ஜெயவர்த்தனவின் யுத்தத்தை ராஜீவ்காந்தி நடத்தினார். அதிலிருந்து தொடங்கி சிதையத்தொடங்கிய இந்திய -ஈழத்தமிழ் உறவுகள் முற்றாக வழமைக்குத் திரும்பிவிடாத ஒரு பின்னணியில் இப்பொழுது புலிகளையும் மேற்குநாடுகளையும் மோதவிடும் விதத்தில் ஒரு புதியபொறி வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது முன்பு ரணில் வைத்திருந்த பொறியின் திருத்தப்பட்ட ஒரு வடிவமாகவும் இருக்கலாம். முன்பு ஜெயவர்த்தனவின் யுத்தத்தை ராஜீவ் காந்தி செய்தார். இப்பொழுது மஹிந்த தன்னுடைய யுத்தத்தை யாரைவைத்துச் செய்யலாம்? என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்.
முன்பு ரணில் ஒஸ்லோவிலும், டோக்கியோவிலும் பொறிவைக்க முயன்றார். இப்பொழுது மஹிந்த ஜெனிவாவில் பொறி வைக்க முயல்கிறார். தமிழீழ விடுதலைப் போராட்டம் இது வரை எத்தனையோ பொறிகளைக் கண்டுவிட்டது. முதலாவது பொறி திம்புவில் வைக்கப்பட்டது. அங்கிருந்து தொடங்கி டோக்கியோ வரையிலும் விதம்விதமான பொறிகள் வைக்கப்பட்டன. சில பொறிகள் தர்மர்பொறிகள். சிலபொறிகள் வீமன்பொறிகள். சிலபொறிகள் தர்மர்பொறிபோல உருமறைக்கப்பட்ட வீமன்பொறிகள். இப்பொழுது ஒரு புதிய பொறி ஜெனிவாவில் காத்திருக்கிறது.
தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்னும் எத்தனை பொறிகளைக் கடக்கவேண்டியிருக்கும்?
-நிலாந்தன்-
நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 19-022006
கணனித் தட்டச்சு: திருமகள் (தமிழீழம்)
குறிப்பு: நிலாந்தன் அவர்கள் தமிழீழத்திலிருந்து வெளிவரும் ஈழநாதம் பத்திரிகையில் தொடர்ச்சியாக அரசியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுதிவருவதுடன், புலிகளின் குரல்வானொலியிலும் தனது அரசியல் ஆய்வுகளை வழங்கிவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருணா குழுவை ஒப்படைக்கவேண்டும்> சுபதமிழ்செல்வன்
ஜெனீவாவிற்கு விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தைக் குழு பயணமாகிறது. விடுதலைப்புலிகள் சிறலங்காவின் உலங்குவானூர்த்தியில் கிளிநொச்சியில் இருந்து புறப்பட்டு கொழும்பை வந்தடைந்தனர். புறப்படுமுன் விடுதலைப்புலிகளின் அரசியற் பொறுப்பாளர் சுப.தமிழ்செல்வன் ஊடகவியலார்களுக்கு செவ்வி வழங்கினார். அப்பொழுது கருணா விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்ட பொழுது, கருணாவின் விவகாரம் என்பது உள்முரண்பாடுதான். ஆகவே உள்முரண்பாட்டோடு தொடர்புடையவர்களை எங்களிடம் ஒப்படைப்பதுதான் முறையானது. அவர்களை வைத்துக்கொண்டு வெறியாட்டங்களை நிகழ்த்துவது அனுமதிக்க முடியாது என சுப.தமிழ்செல்வன் தெளிவாக பதிலளித்தார். இதிலிருந்து கருணா குழுவை தங்களிடம் கையளிக்கும்படி ஜெனீவாவில் விடுதலைப்புலிகள் கோரிக்கை விடுப்பார்கள் என்பது உறுதியாகின்றது. ஆயினும் சிறிலங்கா அரசு இந்தக் கோரிக்கைக்கு நேரடியாக இணங்குவதற்கு சாத்தியங்கள் இல்லை. அதே வேளை கருணா குழு மீது விடுதலைப்புலிகள் நடவடிக்கை எடுப்பதை கண்டும் காணாது விடுவதற்கு சிறிலங்கா அரசு சம்மதிக்கலாம். எவ்வாறாயினும் தமிழினத்தை இரு பிளவுகளாக காட்ட முனையும் இந்தச் சதிகாரக் கும்பல் விரட்டியடிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழினம் விடுதலைப்புலிகளுடன் இணைந்தே நிற்கும்.
நன்றி>வெப் ஈழம்
தமிழகத்தில் இருந்து கோழிக்கடத்தல் சிறிலங்காஅரசின் புதிய கண்டுபிடிப்பு.
கோழி கடத்தல்": சிறிலங்காவின் புதிய கண்டுபிடிப்பு -அருஸ் (வேல்ஸ்)- பொதுவாக இலங்கைத்தீவில் என்ன கோளாறு வந்தாலும் அதற்குக் காரணம் தமிழர்களே என கண்ணை மூடிக்கொண்டு கூறும் வழக்கம் சிங்களவர்களிடம் உண்டு. இது அவர்களுக்கு பரம்பரையினு}டாகக் கடத்தப்பட்ட வியாதி. அரசியல்வாதிகளிலிருந்து பத்திரிகையாளர்கள் வரை எவருமே இதற்கு விதிவிலக்கல்ல. இந்த மாற்ற முடியாத புற்றுநோயின் ஒரு வெளிப்பாடே இந்தியாவிலிருந்து படகுகளில் கடத்திக் கொண்டு வரப்படும் கோழிகள் மூலம் இலங்கையில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் பறவைக்காய்ச்சல் நோய் தொற்றக்கூடிய அபாயம் இருப்பதாக வெளிவந்துள்ள கூற்று அமைந்துள்ளது. இது தொடர்பான செய்தியொன்றினை ரொய்ட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்திணைக்களத்தின் பணிப்பாளர் அமரசேகராவே இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார். அவரது பேட்டியில் 'இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இடம்பெயரும் அல்லது கடத்தப்படும் பறவைகள் முதலில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்கே வந்து சேர்கின்றன. ஆனால் அப்பகுதிகளில் நாம் மிருக வைத்தியங்களை மேற்கொள்ள முடியாத ஒரு நிலை இருக்கிறது. இப்போதுள்ள நிலைமையின் படி பறைவைக்காய்ச்சல் நோய் இலங்கையிலும் தொற்றுவதற்கான சாத்தியங்களே கூடுதலாக இருக்கின்றன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக தமிழர்கள் தமது பிள்ளைகளின் ஆரம்பக்கல்வியின் போது 'பஞ்ச தந்திரக்கதைகள்" போன்றவற்றையே கற்பிப்பதுண்டு. மூளை விருத்தியைக்கருத்திற்கொண்டே இவ்வாறான கதைகளைச் சொல்வதுண்டு. ஆனால் 'மாதன மூத்தா" போன்ற கதைகளையே பெரும்பாலும் சிங்களக் குழந்;தைகளுக்கு சுவையுடன் சொல்லிக் கொடுப்பதுண்டு. இவற்றின் வெளிப்பாடே பணிப்பாளர் அமரசேகராவின் கருத்து என்றெண்ணி இதனை புறந்தள்ளி விடவேண்டியது தான். இந்தியா - தமிழர்கள் தொடர்பாக இப்போது தான் சிங்களவர்கள் 'அதி புத்திசாலித்தனமான கருத்துக்களை வெளியிடுகின்றார்களென்றில்லை. 1970 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணிக் கட்சியில் இருந்தபோது கடுமையான உணவுத்தட்டுப்பாடு நிலவியது. மாவட்டத்திற்கு மாவட்டம் குறிப்பிட்ட அளவுக்குமேல் அரிசி கொண்டுபோக அனுமதியில்லை. பாணுக்குக் கூட இரவிரவாக வரிசையில் நின்றே ஒன்றோ இரண்டோ இறாத்தல் பாண் பெறமுடியும். அப்போது கிளிநொச்சி;த் தொகுதி யாழ். மாவட்டத்தினுள் அடங்கியிருந்தது. (இப்போதும் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்குள் தான்) மாவட்டத்திற்கு மாவட்டம் அரிசி கொண்டுபோகத்தானே தடை - ஏன் ஒரே மாவட்டத்தினுள் இருக்கும் கிளிநொச்சியிலிருந்து மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்கு அரிசியைக் கொண்டு செல்ல தடை விதிக்கிறீர்கள் என்று அடிக்கடி கேட்கப்படுவதுண்டு. ஒரு சமயம் அப்போதைய விவசாய அமைச்சரான ஹெக்டர் ஹொப்பேகடுவ ஒரு து}தனமான பதிலைச் சொன்னார். 'வல்வெட்டித்துறையிலிருந்து இந்தியாவுக்கு அரிசி கடத்தப்படுகிறது. அது தான் நாட்டில் நிலவும் அரிசித்தட்டுப்பாட்டுக்குக் காரணம்." இந்தப் 'புத்திசாலி" தான் பின்னர் 1982 இல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். இனவாதம் என்ற கண்ணாடியைச் சிங்களவர்கள் போட்டுக்கொண்டிருப்பதால் தான் அவர்களால் எந்தப்பிரச்சனையையும் சரியாக விளங்கிக் கொள்ள முடியாது என்பதற்கு ஹெக்டர் ஹொப்பேகடுவவின் கூற்றுக்கும் அமரசேகராவின் கூற்றுக்கும் இடையில் ஆயிரம் உதாரணங்களைக் கூறமுடியும். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இந்தியாவிலிருந்து கோழிகளைக் கொண்டு வருவதைக் கண்டுபிடித்த அமரசேகராவின் கண்ணாடி அவரது கூற்றில் உள்ள இன்னொரு விடயத்தைப் பற்றி ஏன் அலட்டிக்கொள்ளவில்லை. 'அப்பகுதிகளில் (விடுதலைப் புலிகளின் பகுதிகளில்) நாம் மிருக வைத்தியங்களை மேற்கொள்ள முடியாத ஒரு நிலை இருக்கிறது." என்ற அவரது கூற்று எதைக்குறிக்கிறது. மிருகங்களிலும் தமிழ் மிருகம், சிங்கள மிருகம் என்றிருக்கிறதா? இப்பகுதியில் மிருக வைத்தியங்களை மேற்கொள்ள முடியுமாயிருக்கின்றது. என்றால் அதற்கான தவறுக்கு அவரும் அவர் சார்ந்த சிங்கள அரசும் தானே காரணம்? தமது பகுதியில் மிருக வைத்தியம் மேற்கொள்ள அரச வைத்தியர்களுக்குத் தடை என்று விடுதலைப் புலிகள் சொன்னதாக எந்தச் செய்தியுமே வெளிவரவில்லையே? முழுமையான இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசமான யாழ். மாவட்டத்தின் கரவெட்டிப்பகுதியில் ஆளற்ற வேவு விமானமொன்று வீழ்ந்ததற்கு நோர்வே புலிகளுக்கு வழங்கிய வானொலிச் சாதனமே காரணம் என்று அந்தச் சாதனத்தாலேயே வீழ்த்தினர் என்று ஒரு புத்திசாலித்தனமான ஜே.வி.பி உறுப்பினர் கண்டுபிடித்தமை பற்றி ஜே.வி.பி இரண்டு தடவையும் புரட்சி (கிளர்ச்சி) செய்து இரண்டு தடவையும் தோற்றது. ஏன் என்பது இப்போது தான் புரிகிறது. என்று ஒரு தமிழ்ப்பத்திரிகை கிண்டல் செய்ததும் குறிப்பிடத்தக்கது. இதேபோல முன்னொரு தடவை இலங்கையில் புகைப்பிடிப்போர் வீதம் கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிகம் என ஒரு அதிகாரி கண்டுபிடித்ததும் நினைவு கூரத்தக்கது. தென்னிலங்கைப் பத்திரிகைகளும் தமது பங்குக்கு அடிக்கடி ஏதாவது புரளியைக் கிளப்பி பின்பு தாமே அதை நம்பி விடுவதுமுண்டு. ஆக தாங்கள் செய்யத் தவறிய ஒரு விடயம் தொடர்பான குற்றத்தையும் சிங்களவர் தமிழர்மீதே (குறிப்பாக புலிகள் மீது) போடும் முயற்சி இது. எந்த மருந்துத் தடை இருந்த போதும் தமது மக்களின் சுகாதாரம் தொடர்பான விடயங்கள், சூழல் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் விடுதலைப் புலிகள் எவ்வளவு கரிசனையாகவுள்ளனர் என்பதை வெளியுலகம் அறிந்த ஒன்று. சிங்களப் பகுதிகளில் எந்தத் திட்டமும் இல்லாமலே வனவளம் அழிக்கப்படுகின்றது. ஜெயசிக்குறு நடவடிக்கை இடம்பெற்ற காலத்தில் வன்னியிலும் பெருமளவிலான மரங்களை வெட்டி (குறிப்பாக தேக்கு) சிங்கள இராணுவ அதிகாரிகள் பதவிநிலைக்கேற்ப இலட்சாதிபதிகளாகவும் கோடீஸ்வரர்களாகவும் மாறியதும் இரகசியமான விடயமல்ல. தமிழீழ வனவளப்பிரிவு, தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் என்பன வனவளத்தைப் பேண மேற்கொள்ளும் முயற்சிகளில் எத்தனை வீதம் சிங்கள அரசினால் மேற்கொள்ளப்படுகின்றது என்பதைக் கணக்கிட்டால் சுற்றுச்சூழல் தொடர்பாக விடுதலைப் புலிகள் எவ்வளவு கரிசனையுடன் உள்ளனர் என்பது புரியும். மேலும் டெங்கு நோய் பற்றிய பீதி தென்னிலங்கையை உலுப்பிய போது அவ்வளவு மருந்துத் தடைகளுக்கும் மத்தியில் தமது பகுதிக்குள் அதை நெருங்க முடியவில்லை.. புலிகளால் அவ்வளவு தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார விழிப்புட்டல், நோய்த்தடுப்பு தொடர்பில்; சிறிலங்கா அரசைவிட விடுதலைப் புலிகள்; எந்தளவிற்கு அக்கறையாக இருக்கின்றனர் என்பது திரு.அமரசேகராவுக்குத் தெரியாவிட்டாலும் அனேகருக்கு நன்கு தெரியும். புலிகளின் பகுதிக்குள் இந்தியாவில் இருந்து கோழி கடத்தி வரப்படுகின்றது என்ற கூற்று நகைப்புக்கிடமானது. இது திரு அமரசேகராவிற்குப் புலிகளைப் பற்றியும்; தெரியாது, இலாப நட்ட கணக்கும்; பார்க்கத் தெரியாது என்பதையே வெளிப்படுத்துகின்றது. சிங்களவர் ஒருவர் தற்செயலாகத் சறுக்கி வீழ்ந்தாலும் அதற்கும் தமிழரே காரணம் எனக் கூறுமளவிற்கு சிறிலங்காவில் இனவாதம் கோலோச்சுகிறது.
நன்றி>தமிழ் நாதம்
21 February, 2006
விடுதலைப்புலிகள் என்னை கொன்று விடுவார்கள்: கருணா அலறல்
கொழும்பு, பிப். 21- விடுதலைப்புலிகள் இயக் கத்தில் தளபதியாக இருந்து வந்த கருணா தனியாக பிரிந்து புதிய அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறார். இதை தொடர்ந்து இரு அமைப்புகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. தற்போது கருணா இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவர் இ-மெயில் மூலம் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:- விடுதலைப்புலிகளிடம் இருந்து அனைத்து ஆயுதங்களையும் பறிக்க வேண்டும். சர்வதேச கண்காணிப்புடன் இதை செயல்படுத்தலாம். எங்கள் அமைப்பு மட்டும் அல்லாமல் மற்ற அமைப்புகளிடம் இருந்தும் ஆயுதங்களை பறிக்கலாம். விடுதலைப்புலிகளிடம் இருந்து ஆயுதங்களை பறிக்காவிட்டால் அவர்கள் என்னை கொன்று விடுவார்கள். அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிக்காதது விடுதலைப்புலிகளுக்கு என்னை கொல்ல சட்டப்பூர்வ அனுமதி அளிப்பது போல உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அமைதி ஏற்படுத்த இலங்கை அரசின் துணை ராணுவ படையிடம் இருந்து ஆயுதங்களை பறிக்க வேண்டும் என்று ஏற்கனவே விடுதலைப்புலிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர். அதற்கு பதிலடியாக கருணா இந்த தகவலை வெளியிட்டு இருப்பதாக தெரிகிறது. இதற்கிடையே ஜெனீவாவில் விடுதலைப்புலிகள்-இலங்கை அரசு பிரதிநிதிகள் இடையே நாளையும் நாளை மறுநாளும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதற்காக இருதரப்பு பிரதிநிதிகளும் ஜெனீவாவில் உள்ளனர்.
நன்றி>மாலைமலர்
தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது சான்றோர் வாக்கு.
19 February, 2006
லண்டனில் இன்று நடந்த ஊர்வலமானது அவசியமான ஒன்றா?
பேர்ச்சுவார்த்தைக் குழுவில் பேரியல் அஸ்ரப் சேர்த்துக்கொள்ளப்பட்டமை சட்டவிரோதமானது - ஹக்கீம
அரசாங்க பேச்சுவார்தைக் குழுவில் முஸ்லீம் தரப்பு பிரதிநிதியாக அமைச்சர் பேரியல் அஸ்ரப் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்தைகளில் முஸ்லீம்கள் தனித்தரப்பாக கலந்து கொள்ள வேண்டும் என முஸ்லீம் காங்கிரஸ் வலியுறுத்திவந்துள்ளது
எனினும் தனித்தரப்பாக முஸீம்கள் கலந்து கொள்ள வேண்யடிதில்லை என்றும் அரசாங்க பேச்சுவார்தைக் குழுவில் முஸ்லீம் பிரதிநிதித்துவம் இடம்பெறும் என்றும் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்திருந்தார்
இதனை அடுத்து முஸ்லீம் தரப்பு பிரதிநிதியை தெரிவு செய்யும் சந்தர்ப்பம் முஸ்லீம் கட்சிகளுக்கு வழங்கப்பட்டது எனினும் இதனை முஸ்லீம் காங்கிரஸ் புறக்கணித்தது
தற்போது அரசாங்க பேச்சுவார்தைக் குழுவில் அமைச்சர் பேரியல் அஸ்ரப் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறித்து முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
முஸ்லிம் தனித்தரப்பு கோரிக்கையினை அரசங்கம் நிராகரித்தால் பேச்சுவார்தைகளில் அரசாங்க தரப்பு பிரதிநிதியாக முஸ்லீம்கள் கலந்து கொள்வதில்லை என்று ஏற்கனவே அனைத்து முஸ்லீம் கட்சிகளும் இணக்கம் கண்டுள்ள நிலையில் அதனை புறக்கணித்து விட்டு பேரியல் அஸ்ரப் அரசாங்க பேச்சுக்குழுவில் தன்னை இணைத்து கொண்டுள்ளதாக ரவூப் ஹக்கீம் குற்றம் சுமத்தியுள்ளார்.
நன்றி> பதிவு.
இன்று நடந்த ஊர்வலத்தில் முஸ்லிம்களை இனைத்துக்கொள்ளவில்லை என முஸ்லிம்கள் தரப்பில் கூறப்பட்டது, ஆனால் பேரியல் அஸ்ரப் கலந்து கொண்டதுக்கு ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டி உள்ளார்.
யாழ் மாநகரசைக்கு போட்டியிடும் மெளலி எஸ்.எம். லகீஸ் மற்றும் எஸ்.எம்.ஸஹப் கூறுகிறார்கள், தேசியத்தலைவர் முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறவும், தமிழர்களுடன் முஸ்லீம்கள் ஒற்றுமையாக வாழவழி சமைப்பார் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வே.
Subscribe to:
Posts (Atom)