09 September, 2006
வைகோவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு.
கேள்வி: இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் தலையீடு எப்படி அமைய வேண்டும் என நினைக்கிறீர்கள்?
பதில்: காலப்போக்கில் இந்திய அரசு நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறோம்.
கேள்வி: இடையில் இந்தியா தீர்வுத்திட்டம் ஒன்று கொடுத்ததாக வெளியான தகவல்; குறித்து?
பதில்: இறுதியில் நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இந்தத்தீர்வு அமையும் என நினைக்கிறோம். அப்படி இருக்க வேண்டும் எனவும் விரும்புகிறோம். இதைத் தவிர இவ்விடயம் குறித்து விசேடமாக மேற்கொண்டு கூறுவதற்கு ஒன்றுமில்லை.
கேள்வி: தமிழக முதல்வர் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் இராமதாஸ் உட்பட மற்றைய தமிழகத் தலைவர்களைச் சந்திக்கப் போகிறீர்களா?
பதில்: இரண்டொரு நாட்களில் தமிழகத் தலைவர்கள் அனைவரையும் சந்திப்போம். அதேநேரம் முதல்வரை சந்திக்க நீங்கள் நேரம் கேட்டதாகவும் அதற்கு அவர் மறுத்ததாகவும் வெளியான செய்தி குறித்து கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க சம்பந்தன் மறுத்துவிட்டார். தமிழகத்தில் உள்ள இதர அரசியல் கட்சித்தலைவர்கள் அனைவரையும் தாம் இரண்டொரு நாட்களில் சந்திப்பு பேசவிருப்பதாகவும் அவர் கூறினார்.
அனுராவுக்கு வைகோ கண்டனம்
இதேவேளை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சி அலுவலக வாயில் வரை வந்து வழியனுப்பி வைத்த வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் முடிந்தவுடன் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு நடக்கலாம்.
சிங்கள அரசின் இனவெறியும் தமிழர்களுக்கு எதிரான அராஜக மனப்பான்மையும் சிறிலங்கா அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கவின் வாக்குமூலத்தில் வெளிப்பட்டுள்ளது.
இந்தியத் தூதுவர் நிருபாமா ராவ் தனது இராஜிய வரம்புகளுக்கு உட்பட்டுத்தான் செயற்பட்டுள்ளார். அதற்காக அவரைக் குறை கூறிய விதம் கண்டனத்துக்குரிய என்றார்.
வைகோவுடனான சந்திப்பில் மாவை சேனாதிராசா, எம்.கே.சிவாஜிலிங்கம், பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை தமிழக முதல்வர் கருணாநிதியை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 8 ஆம் திகதி சந்திப்பது என்றும் அதைத் தொடர்ந்து அன்று மாலையோ அல்லது 9 ஆம் திகதி காலையிலோ இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுவது என்றும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் அத்திட்டத்தின் படி தமிழக முதல்வரைச் சந்திக்க இயலவில்லை என்றும் தெரிகிறது.
தமிழக முதல்வரைச் சந்திக்க முன் அனுமதி கேட்டு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாறுமன்ற உறுப்பினர்கள் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் வைகோ மூலமாக பிரதமரைச் சந்திக்கும் அவர்களது திட்டம் குறித்து கேள்விப்பட்ட தமிழக முதல்வர் அதிருப்தி அடைந்ததாகவம் இதன் விளைவாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பை தள்ளிப்போட்டதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் கடந்த 8 ஆம் திகதி மதியம் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதுடில்லி சென்று இந்தியப் பிரதமரைச் சந்திக்க முடிவு எடுத்திருப்பதாக சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.
வைகோ பிரதமரின் தனிச்செயலாளருடன் பேசி இச்சந்திப்புக்கு அனுமதி பெற்றுவிட்டதாகவும் 8 ஆம் திகதி மாலை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் சந்திப்பார் என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வட்டாரத்தில் கூறப்பட்டது.
ஆனால் மாகராஸ்டிரா குண்டு வெடிப்புச் சம்பவம் மற்றும் கியூபா பயணம் குறித்த கடைசி நிமிட ஏற்பாடுகள் தொடர்பிலும் பிரதமருடனான சந்திப்பு கைகழுவப்பட்டதாககத் தெரிகிறது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விரைவில் தாம் தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவர்களையும் சந்தித்து பேச இருப்பதாகவும் தமிழக முதல்வரைச் சந்திப்பது உறுதி என்றும் கூறியுள்ளார்.
தமிழகத் தலைவர்களைச் சந்தித்த பிறகு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதுடில்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா, பா.ஜ.க. தேசிய தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.
ஆதாரம்: வீரகேசரி.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இந்திய ராணுவமே வெளியே போ. சிங்களர்களும் நாங்களும் சகோதரர்கள் அடித்துக்கொள்வோம். சேர்ந்துகொள்வோம் என்று அறிக்கை விட்டு சிங்கள பிரேமதாஸாவிடமிருந்து கோடிக்கணக்கில் வாங்கி இந்திய ராணுவத்தை அடித்தார்களே. அந்த கோடிகளில் சில பாக்கியிருக்கும். அவற்றிலிருந்து சாப்பாடு போடச்சொல்லுங்கள்.
அப்பாவி மக்களின் மத்தியிலிருந்து இந்திய ராணுவத்தை சுட்டு பல்லாயிரம் வீரர்களை கொன்று. ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்களை மிருகங்களாக்கி, அப்படி மிருகத்தனமாக நடந்த ராணுவ வீரர்களை வைத்து இந்தியாவுக்கு எதிராக இன்றும் பிரச்சாரம் செய்ய பல கோடிகளை செலவழிக்கும் புலிகளுக்கு அந்த கோடிகளில் சிலவற்றை கொடுத்து சாப்பாடு வாங்கிப்போட முடியாதா?
கோடிக்கணக்கில் அயல்நாட்டிலிருக்கும் தமிழர்களை சுரண்டி அவர்களது பணத்தை கொண்டு ராணுவ தளவாடங்கள் வாங்கும் புலிகளுக்கு அந்த கோடிகளில் சிலவற்றை கொடுத்து தமிழர்களுக்கு சாப்பாடு வாங்கிப்போட முடியாதா?
மக்களை பட்டினி போட்டு, மக்களை பிச்சை எடுக்க வைத்து, அவர்களது அழிவில் தன்னை நிலை நிறுத்துக்கொள்ள முனையும் புலிகளுக்கு வக்காலத்து வாங்குவதை நிறுத்துங்கள்.
புலி கட்டுப்பாட்டு பிரதேசத்தில் நாங்கள் ஏரோபிளேன் பண்ணுகிறோம் என்றெல்லாம் ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கும் புலிகளுக்கு அங்கிருக்கும் மக்களுக்கு விவசாயம் பண்ணி சாப்பிட தெரியும் என்று தெரியாதா?
புலி கட்டுப்பாடு பிரதேசம் தவிர வேறெங்கும் பட்டினி சாவுகள் இல்லையென்றால், புலி கட்டுப்பாடு பிரதேசத்தை விட்டு மக்களை போக அனுமதிக்க வேண்டியதுதானே?
சுடுகாட்டு ராஜா சுடுகாட்டு ராஜாவாக இருந்துவிட்டு போகட்டும். மக்களை புலிகளின் பலிகடாவாக ஆக்காதீர்கள்.
யாழ்ப்பாணம் புலிகலின் கட்டுப்பாட்டிலா இருக்குது?:-))
Post a Comment