12 April, 2006
அவசர செய்தி, திருகோணமலையில் இனக்கலவரம்.
திருமலையில் சிங்களப் பேரினவாதிகள் இனக்கலவரம் ஒன்றைத் தோற்றுவிக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர். நண்பகல் திருகோணமலை சந்தைப்பகுதியில் கைக்குண்டு ஒன்று வீசப்பட்டிருக்கின்றது. இதில் அகப்பட்டு ஐந்து பொதுமக்கள் காயமடைந்திருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து தமிழர்களின் கடைகள் படையினரின் உதவியுடன் சிங்களக் காடையர்களால் தீவைத்து எரிக்கப்பட்டன.
தொடர்ந்து பிற்பகல் 3:45 மணிக்கு மேலும் ஒரு கைக்குண்டு நகர்ப்பகுதியில் வீசப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து சிறிலங்கா படையினர்ää பொலிசார் நிற்கும் நகர்ப்பகுதியில் தமிழர்களின் கடைகள் தீ வைக்கப்படுகின்றன@ தீ வைக்கப்பட்டவை தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கின்றன என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ் மக்கள் பாதுகாப்புத் தேடி நகர்ப்பகுதியை விட்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
இதேவேளை சற்றுமுன்னதாக சிறிலங்கா இராணுவ ட்ரக் வண்டி ஒன்றும் கைக்குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கின்றது.
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்
இதுவர இறந்தவர் எண்ணிக்கை 9, இது அதிகரித்துகொண்டு செல்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment