thankes>sangathi
ஆழக்கடல் எங்கும் சோழமகராஜன் ஆட்சி புரிந்தானே அன்று, தமிழ் ஈழக்கடல் எங்கும் எங்கள் கரிகாலன் ஏறி வருகிறானே இன்று.
‘‘ஒரு முறை தலைவர் பிரபாகரன் என்னிடம் சொன்னார்... ‘ஓய்வென்பது நமக்கு மரணத்தில்தான் சாத்தியம்!’ என்று. அதுதான் சத்தியம்!’’
வசந்த காலத்தின் கைகளைக் குலுக்கி விடைபெறுகிறது குளிர்காலம். தெற்கு லண்டனில், மனைவி அடேல் பாலசிங்கத்துடன் எளிமையாக வாழ்கிறார் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகரான ஆண்டன் பாலசிங்கம்!
சிறுநீரகக் கோளாறு, நீரிழிவு என உடலைத் துன்புறுத்தும் நோய் களுக்கிடையிலும், ஓயாத உழைப்பு, ஓய்வில்லாத பயணங்கள், இயக்கப் பணிகள் என உற்சாகமாக இருக்கிறார் தமிழ் ஈழத்தின் "சிந்தனைச் சுரங்கம்"!
விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான தனது பிணைப்பு பற்றிப் பேச ஆரம்பித்தார் ஆண்டன் பாலசிங்கம்...
எழுபத்தெட்டாம் வருடம்... லண்டன் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராக இருந்தபோதுதான், முதன்முறையாக அடேலைச் சந்தித்தேன். ஒருமித்த கருத்துடைய நாங்கள் பல்வேறு அரசியல் இயக்கங்களில் பங்குபெற ஆரம்பித்தோம். தென்னாப்பிரிக்கா, பாலஸ்தீனம், ஜிம்பாப்வே போன்ற நாடுகளின் விடுதலைக்கு ஆதரவான போராட்டங்களிலும், அமெரிக்கக் காலனி ஏகாதிபத்தியத்துக்கு எதிரா கவும் தீவிரமாகப் போராடி வந்தோம். இந்த நிலைமையில்தான், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தின் தலைவர் பிரபாகரன் என்னைத் தொடர்பு கொண்டார். உலகிலுள்ள பல்வேறு ‘கெரில்ல’ விடுதலைப் போராட்டங் களைப் பற்றியும், அவற்றின் வரலாறுகளையும் தமிழில் மொழி பெயர்த்துத் தரும்படி கேட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அரசியல் பயிற்சி வகுப்புகள் நடத்த அழைப்பு விடுத்தார். நான் முதன்முதலாக பிரபாகரனை சென்னையில்தான் சந்தித்தேன். அதன் பிறகு, வருடந்தோறும் சென்னைக்கு வந்து சில மாதங்கள் தங்கி, போராளி களுக்கு அரசியல் பயிற்சி வகுப்புகள் நடத்த ஆரம்பித் தேன். அப்படி ஆரம்பித்தது எங்கள் நட்பு!
இத்தனை வருட உறவில், எனக்கும் பிரபாகரனுக்கும் கருத்து வேறுபாடுகள் வந்திருக்கின்றன. ஆனால், எங்களுக் கிடையிலான நல்லுறவில் எப்போதும் பாதிப்பு ஏற்பட்டதில்லை. காரணம், நாங்கள் மிகச் சிறந்த நண்பர்கள்.
விடுதலைப் புலிகளின் சிந்தனை வடிவம், லட்சியம், அரசியல் கொள்கை ஆகியவற்றை வகுத்துக் கொடுத்தது நான்தான். ஆனால், போரியல் ரீதியான வளர்ச்சியில் இந்த இயக் கத்தை நெறிப்படுத்தித் திட்டமிட்டு, ஆயுதப் போராட்டத்தின் தந்தையாக விளங்குபவர் பிரபாகரன். என்னுடைய அரசியலும், அவரது போரியலும் இணைந்துதான் எமது விடுதலைப் போராட்டம் முன்னெடுத்துச் செல்லப் படுகிறது. தலைவர் என்கிற ரீதியில் அவருக்குதான் நாங்கள் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் கொடுக் கிறோம்.
இந்த இயக்கத்தில் நான் ஒரு தொண்டன். எல்லாக் காட்டிலேயும் சிங்கம்தான் ராஜா. ஆனால், எங்கள் காட்டில் புலிதான் ராஜா!’’ என்கிறார் அழகான சிரிப்புடன்.
கேள்விகளை முன்வைக்கிறோம். சில கேள்விகளுக்குச் சிரிக்கிறார். சில கேள்விகளைத் தவிர்க்கிறார். ஆனால் எது குறித்துப் பேசினாலும், அதன் வரலாறும், அது தொடர்பான புள்ளிவிவரங்களும் கொட்டுகின்றன
""முதன்முதலாக விடுதலைப் புலிகளை ஒரு போராளி அமைப்பாக அங்கீகரித்ததோடு, ஈழப் பிரச்னையில் பேச்சுவார்த்தைகளைத் துவக்கி வைத்த இந்தியா, தற்போது ஈழப் பிரச்னையிலிருந்து விலகி இருப்ப தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?""
""புலிகள் இயக்கத்தின் தோற்றத்துக்கு முன்பிருந்தே இந்தியா, ஈழத் தமிழ் மக்கள் மீது அனுதாபமும் கருணையும் காட்டி வந்துள்ளது. அதற்குக் காரணம், ஈழத்தில் இருந்தாலும் இன ரீதியாக நாங்கள் இந்தியர்கள்தான்! எங்களது மூல வரலாறு இந்தியாவிலிருந்துதான் ஆரம்பமாகிறது.
எண்பத்து மூன்றாம் வருடம், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக ஒரு மிகப் பெரிய வன்முறை கட்ட விழ்த்துவிடப்பட்டு, பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் கொல்லப் பட்டனர். உடைமைகள் சேதப்படுத்தப் பட்டன. அது தமிழ்நாட்டில் பெருங் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆர்ப் பாட்டங்களின் மூலமும், பேரணிகள் மூலமும் தமிழக மக்கள் தங்கள் ஈழத் தமிழர் ஆதரவு உணர்ச்சிகளைக் காட்டினார்கள். அப்போதுதான், ஈழத் தமிழர் பிரச்னை என்பது ஏதோ இலங்கைத் தீவுக்குள் அடங்கும் பிரச்னை அல்ல; அதன் விளைவுகள் இந்தியாவின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற உண்மையை உலகம் உணர்ந்தது.
அதன் பிறகு, இந்திய அரசு ஈழத் தமிழர் பிரச்னையில் நேரடியாகத் தலையிட ஆரம்பித்தது. இந்தச் சூழ்நிலையில்தான், ஈழத் தமிழர் பாதுகாப்புக்கு ஒரு கவசமாக எமது விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும், வேறு சில போராளிக் குழுக்களுக்கும் ஆயுதம் கொடுத்து, ராணுவப் பயிற்சி கொடுத்து எங்களை வளர்த்தது இந்தியா. இது வரலாற்று உண்மை!
அதை நாங்கள் எப்போதும் மறந்ததில்லை. இப்படியாக எங்களுக்குப் பேருதவிகள் செய்து, எங்களை ஒரு விடுதலை அமைப்பாக அங்கீகாரம் செய்து, திம்பு பேச்சு வார்த்தையில் பங்கு பெறச் செய்ததும் இந்தியாதான். அதன் பிறகு பல்வேறு காரணங்களால், இந்திய அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சில முரண்பாடுகள் எழுந்தன (இந்த இடத்தில், கவனத்தோடு சில கடந்த கால நிகழ்வுகளைத் தவிர்க்கிறார்).
அதனால், இடைவெளிகள் தோன்றின. சில மனக் கசப்பான சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆனாலும், ஒட்டுமொத்தமாகச் சொல்லும்போது, இந்தியா அன்றிலிருந்து இன்றுவரை எப்போதுமே ஈழத் தமிழர்கள்பால் அனுதாபத்தோடுதான் நடந்து வருகிறது. இந்த நிலை தொடர வேண்டும், ஈழத் தமிழர்களின் நியாயமான உணர்வுகளை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்பதே எம் விருப்பம்.""
""இந்தியா & புலிகள் உறவில் முரண்பாடு ஏற்பட முக்கியமாக என்ன காரணம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?""
""தமிழீழம் சுதந்திர நாடாக உருவாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது விடுதலைப் புலிகள் இயக்கம். சிங்களப் பேரினவாதிகளிடம் இருந்து எம் மக்களுக்கு எந்த நியாயமும் கிடைக் காது என்று நாங்கள் உறுதியாக நம்பி னோம். அதனால் தான் எம் மண்ணை மீட்டெடுத்து, எமக்கான சுதந்திரத் தமிழீழத்தை உருவாக்குவதில் தெளிவாக இருந் தோம். ஆனால், இந்திய அரசு இதை விரும்பவில்லை.
தமிழீழத்தில் ஒரு தனியரசு உருவானால், அது தமிழ்நாட்டிலும், இந்தியாவின் மற்ற சமூகங்களிடத்திலும் பிரிவினை எண்ணத்தைத் தோற்று விக்கும் என்ற அச்சத்தினால், எமது லட்சியத்தை அவர்கள் ஏற்க மறுத் தார்கள். இந்த அடிப்படையில்தான் முரண்பாடு எழுந்தது.""
""தற்போது இந்திய அரசின் அணுகுமுறையில் மாற்றம் வரும் என்று நினைக்கிறீர்களா?""
""இந்தியா நேரடியாக இந்தப் பிரச்னையில் ராணுவ ரீதியாகத் தலையிட்டு, புலிகளுக்கு எதிராக ஒரு பெரும் ராணுவ நடவடிக்கையை எடுத்துப் பெரும் தோல்வியைத்தான் சந்தித்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்திய ராணுவத்தால் நசுக்க முடியவில்லை. மற்றபடி புலிகள் இயக்கம், இந்தியாவைப் பகைத்துக் கொள்ள விரும்பியதில்லை. எங்களுக்கு எதிராக யுத்தம் திணிக்கப்பட்ட காரணத்தால்தான் எதிர்த்துப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டோமே தவிர, நாங்கள் இந்தியாவுக்கு எதிராக ஆயுதங் களைத் தூக்குவதற்கு ஒருபோதும் விரும்பியதில்லை.
ஏனென்றால், தமிழீழத்தைத் தாய்நாடாகப் பார்க்கும் நாங்கள், இந்தியாவைத் தந்தை நாடாகத்தான் எப்போதும் பார்த்துக்கொண்டிருக் கிறோம். புலிகளுக்கும் இந்திய அரசுக்கும் மத்தியில் நல்ல நட்புறவு ஏற்பட வேண்டும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அப்படியான ஒரு சூழ்நிலை நிச்சயம் விரைவில் ஏற்படும் என்பதுதான் எனது கருத்து.""
""ஈழப் போராட்டத்தில், உங்களது பங்களிப்பில் நெகிழ வைத்த தருணம் என்று எதைக் கருதுகிறீர்கள்?""
""இந்திய அமைதிப்படை ஈழத்தில் இருந்தபோது நடைபெற்ற துயரச் சம்பவம்தான் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
எண்பத்தேழாம் வருடம், அக்டோபர் இரண்டாம் தேதி பருத்தித்துறை கடற்பகுதியில் வைத்து குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பதினைந்து முக்கியப் போராளிகள் ஸ்ரீலங்கா கடற்படையினரால் நிராயுதபாணி களாகக் கைது செய்யப்பட்டு, பலாலி ராணுவ முகாமில் தடுத்து வைக்கப் பட்டிருந்தார்கள். இந்திய அரசுடனும், இலங்கைக்கான இந்தியத் தூதுவரிடமும் பேசி அவர்களை விடுவிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டு இருந்தது.
நான் இந்தியத் தூதரிடம் பேசியபோது, இலங்கை ராணுவத்துடன் பேசி அவர்களை விடுதலை செய்து விடலாம் என்று நம்பிக்கை தெரி வித்தார். நான் பலாலி ராணுவ முகாமில், சிங்கள ராணுவத்தின் வசமிருந்த எம் போராளிகளை இந்திய அமைதிப்படை அதிகாரிகளின் உதவியுடன் சந்தித்தேன். எம் போராளிகள் அங்கு குற்றவாளிகளைப் போலத் தரையில் உட்கார வைக்கப்பட்டிருக்க, அவர்களை நோக்கித் துப்பாக்கி முனைகளைத் திருப்பியவாறு சிங்கள ராணுவத்தினர் நின்றிருந்தனர். நான் போராளிகளிடம் பேசினேன். அவர்கள் மகிழ்ச்சியுடனும், கலக்கமின்றியும் தாங்கள் விடுவிக்கப்பட்டு விடுவோம் என்ற முழு நம்பிக்கையுடனும் இருந்தார்கள்.
குமரப்பாவும், புலேந்திரனும் அதற்குச் சமீபத்தில்தான் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். அவர்கள் தங்கள் மனைவியருக்கு, ‘கவலைப்பட வேண்டாம். விரைவில் வந்துவிடுவோம்’ என்கிற தகவலை என் மூலம்தான் சொல்லியனுப் பினார்கள். ஆனால், மறுநாளே நிலைமை மோசமானது. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் அதுலத் முதலி, போராளிகளை கொழும்புவுக்குக் கொண்டுவந்து விசாரணைக்கு உட்படுத்த ரகசியத் திட்டமிட்டிருப்பதாக, இந்திய ராணுவ அதி காரிகள் என்னிடம் தெரிவித்தனர்.
நான் மறுபடியும் போராளிகளைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், தலைவர் பிரபாகரனுக்கு ஒரு ரகசிய கடிதத்தை என்னிடம் தந்து அனுப்பினர். நான் அந்தக் கடிதத்தை அன்றிரவே தலைவரிடம் சேர்த்தேன். இயக்க மரபுப்படி, எதிரிகளிடம் சிக்காமல் வீர மரணம் அடைய ஏதுவாக, தங்களுக்கு சயனைட் குப்பிகளை வழங்கக் கோரி எழுதிய கடிதம் அது. அதைப் படித்ததும் பிரபாகரனின் கண்கள் கலங்கின. உதடுகளைக் கடித்தபடி சற்று நேரம் யோசித்தவர், இந்திய அரசுடன் மேலும் பேசி, உடனடியாகப் போராளிகளை மீட்கும்படி சொன்னார். நான் மீண்டும் முயன்றேன். ஆனால், என் முயற்சி எதுவும் பலன் அளிக்கவில்லை. இந்தியத் தூதரும் தன்னால் எதுவும் செய்ய முடியாத அளவுக்கு நிலைமை ஆபத்தாகிவிட்ட தாகத் தெரிவித்தார்.
மறுநாள், ஒரு விசேட ராணுவ விமானத்தை அதுலத் முதலி, பலாலிக்கு அனுப்பிவைத் துள்ளார் என்றும், அன்று மாலை ஐந்து மணிக்கு எமது போராளிகள் பலவந்தமாக விமானத்தில் ஏற்றப்படுவார்கள் என்றும் இந்தியத் தூதர் என்னிடம் கூறினார்.
நான் உடனடியாக விரைந்து சென்று, பிரபாகரனிடம் தகவலைத் தெரிவித்தேன். துயரமும், கவலையும், கோபமும், விரக்தியுமாக பல்வேறு உணர்வலைகள் கலந்ததால், பிரபாகரனின் முகம் விகாரமாக மாறியது. தனது மெய்ப் பாதுகாவலர்களான புலி வீரர்களை அழைத்து, அவர்களது கழுத்து களில் தொங்கிய சயனைட் விஷக் குப்பிகளைச் சேர்த் தெடுத்து, என் கழுத் திலும், மாத்தையாவின் கழுத்திலும் மாலையாக அணிவித்தார். எப்படியாவது அந்தக் குப்பிகளை எமது போராளிகளிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப் பிக்கப்பட்டது.
அன்று மதியம் உணவுப் பொதிகளுடன் பலாலி தளம் சென்று, எமது போராளிகளுடன் நிகழ்த்திய இறுதிச் சந்திப்பின்போது தலைவரின் வேண்டு கோளை நான் நிறைவு செய்தேன். எதிரிகளிடம் சிக்கிச் சாவதைவிட, தங்களின் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்ள, அந்தப் பதினைந்து போராளிகளும் சயனைட் குப்பியைக் கடித்தார்கள். சிங்கள ராணுவத்தார் துப்பாக்கி பேனட் டாலும், லத்தியாலும் அவர்களின் தொண்டைக் குழிக்குள் குத்தி, விஷம் இதயத்தில் பாய்வதைத் தடுக்க முயன்றபோதும், எமது மிக முக்கியமான பத்து வேங்கைகள் அந்த இடத்திலேயே வீர மரணம் எய்தினர். ஐந்து பேர் மட்டும் பிழைக்கவைக்கப்பட்டனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராட்ட லட்சியத்துக்காக நான் பட்ட அனுபவங்களில், இதுவே எனது ஆன்மாவை உலுக்கிய மிக வேதனையான சம்பவமாகும்!""
(அடுத்த இதழிலும் அண்டன் தொடர்கிறார்)
படங்கள்: லண்டன் சாந்தன்
நன்றி>vikatan.com
ஜே.வி.பி.யின் எச்சரிக்கையை நிராகரித்த மகிந்த!
நோர்வேயை மத்தியஸ்த பணியிலிருந்து நீக்காது விடின் மகிந்த அரசிற்கான ஆதரவு மீள பெறப்படும் என ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்கவும், பொதுச் செயலாளர் விமல் வீரவன்சவும் விடுத்திருந்த எச்சரிக்கையினை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பேச்சுக்களுக்கு முன்னதாக நோர்வேயை மத்தியஸ்த பணியிலிருந்து நீக்காது விடின் மகிந்த அரசிற்கான ஆதரவு மீள பெறப்படும் என கடந்த புதன்கிழமை கண்டியில் ஜே.வி.பி. கட்சி விடுத்திருந்த எச்சரிக்கையினையே மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,
இப் பேச்சுகளின் ஊடாக சமாதானத்தை உருவாக்குவதில் மிகவும் கடினமானதும் சவாலானதுமான ஒரு சூழ்நிலையில், மூன்றாம் தரப்பொன்று வகித்து வரும் மத்தியஸ்த பணி தொடர்பாக எதுவித தெளிவுமின்றி ஜே.வி.பி.யினர் இருப்பதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக பாலசிங்கம் கொழும்பு வாரப்பத்திரிகைக்கு கடந்த வெள்ளிக்கிழமை மேலும் கூறுகையில்,
ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்றவற்றின் ஆதரவை காட்டி சமாதனத்திற்கு எதிரான மிகவும் வலுவான சக்கதிளுடன் இயங்கி வரும் மகிந்தவின் அரசின் சமாதான அணுகுமுறைகளை விடுதலை புலிகள் மிகவும் சந்தேகத்துடனேயே எதிர்நோக்குவதாகவும் தெரிவித்தார்.
சிறிலங்கா அரசின் ஊடக அமைச்சர் பிரியதர்சன யாப்ப, ஜே.வி.பி.யின் எதிர்ப்புக்கும் மத்தியிலும் நோர்வேயை தொடர்ந்தும் மத்தியஸ்த பணியினை வகிக்கும் என்ற மகிந்தவின் முடிவினை கடந்த வியாழக்கிழமை உறுதிப்படுத்தியிருந்தார்.
அரசியல் கட்சிகள் தங்களது அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவது அவர்களது உரிமை எனினும், சர்வேதேச நிலைப்பாடுகளை எடுக்கும் அதிகாரம் சிறிலங்கா அரசிற்கு மட்டுமே இருப்பதுடன், அரசு தனது நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருப்பதாக பிரியர்சன யாப்ப மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சிறிலங்கா விடுதலை புலிகளினதும் அழைப்பினையடுத்தே, நோர்வே மத்தியஸ்த பணிபுரிய முன்வந்தாகவும், தொடர்ந்தும் தனது பணியினை நோர்வே மேற்கொள்ள தனது நாடு தீர்மானித்திருப்பதாகவும் நோர்வே நாட்டு தூதரக பேச்சாளர் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்
திருமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஸ்ரீலங்கா படைப்பிரிவின் புலனாய்வு கட்டளை அதிகாரிகளின் நேரடிகண்காணிப்பின் கீழ் தனித்துவமான அணியாக ஜிகாத் குழு இயங்கி வருகின்றது என ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ஐ.பி.ஸி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெனிவா பேச்சுவார்த்தைகளின்போது, ஜிகாத் ஆயுதக்குழு உட்பட ஐந்து பிரதான ஸ்ரீலங்கா துணைப்படைக்குழுக்கள் குறித்த முக்கிய தகவல்களை உள்ளடக்கிய அறிக்கையொன்று, தமிழீழ விடுதலைப் புலிகளால் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து முக்கிய தகவல்கள் கசிந்துள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிகாத் குழுவில் அங்கம் பெறும் குறிப்பிடத்தக்க ஆயுததாரிகள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தான் சென்று ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது.
பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவினர் ஆதரவுடன் இஸ்லாமிய சமயக் கல்வி என்ற போர்வையில், பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்ட ஜிகாத் குழு அங்கத்தவர்கள், பாகிஸ்தானின் மலையோரங்களில் உள்ள லஸ்கர் ஈ தொய்பா தீவிரவாதிகளின் பாசறைகளில் ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ராஜதந்திரியாக தற்போது கடமையாற்றும் பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரியொருவர், ஜிகாத் ஆயுத் குழுவினருக்கான பயிற்சிகளை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான இந்த ராஜதந்திரி, அண்மையில் யாழ். குடாநாட்டிற்கு பாகிஸ்தான் உளவாளிகள் அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னணியில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மாத இறுதியில் பாகிஸ்தான் செல்வதன் பின்னணியில், இந்த ராஜதந்திரி செயற்படுவதாகவும் கூறப்படுகின்றது.
லண்டனில் முன்னர் பணியாற்றிய இந்த ராஜதந்திரி, சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில், மகிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கு காரணமாக ஸ்ரீலங்காவிற்கு அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது எனவும் அவ் இணையத்தள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
நன்றி>வீரகேசரி.
பிரஸ் கிளப்பில் வந்திறங்கிய பின்னர் அங்கிருந்தபடி அரண்மனைக்குள் இடம்பெற்ற முதல் நாள் காலை அமர் வின் போதான பேச்சுகளின் விவரங்களை ஊடுருவி அறி யும் நோக்கில் பலருடனும் தொலைபேசி மூலம் தூண்டில் போட்டபடி இருந்தோம். புலிகளின் மதியுரைஞர் பாலாவின் அங்குரார்ப்பண உரையினதும் அரசுத் தரப்புப் பேச்சுக் குழுத் தலைவர் அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வாவின் ஆரம்ப உரையினதும் பிரதிகள் கிடைத்ததால் அவற்றை மொழி பெயர்ப்புச் செய்து அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கும் மும்முரத்தில் நாம் ஈடுபட்டிருந்த போதுதான் அதே ஊடகவியலாளர் மீண்டும் நாம் இருந்த பக்கம் அவசர அவசரமாக வந்தார்.
""அங்கு ஆர்ப்பாட்டத்துக்கு மிகமுக்கியமான ஒரு பிர முகர் வந்திருக்கிறார். அதுபற்றிய செய்திகளைச் சேகரிக்க நீர் செல்லவில்லையா?'' என்று என்னிடம் அவசர அவசர மாக வினாவினார்.
""யார் அப்படி முக்கியமான நபர்?'' நான் பதில் கேள்வி கேட்டேன்.
""என்ன ஐஸே! இப்படிக் கேட்கிறீர்? ராம்ராஜ் வந்திருக்கி றார். போய் விடயங்களைச் சேகரித்து அலுவலகத்துக்குச் செய்தி அனுப்பும்'' என்று "அன்புக் கட்டளை'யிட்டார்.
""ஓ! அப்படியா?'' என்று சிரித்துக்கொண்டு தலை யாட்டினேன். தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு எதிராகச் செயற்படும் புல்லுருவிகள், இந்த ஊடகவியலாளர் போன்ற பேரினாவதிகளைப் பொறுத்தவரை மிக முக்கிய பிரமுகர்தான் என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டேன்.
""ஆர்ப்பாட்டத்தில் எத்தனை பேர் பங்கு பற்றுகின்றார் கள்?'' என்று சாட்டுக்குக் கேட்டு வைத்தேன்.
""ஐந்நூறுக்கும் அதிகமானோர்!'' என்று அவரிடமிருந்து பதில் வந்தது.
ஆச்சரியமாக இருந்தது. அது சரிதானா என்று உறுதிப் படுத்த ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தை நோக்கி எட்டி ஒரு நடைபோட்டேன். ஏன் வீண் வம்பு என்று தூரத்தில் நின்ற படியே நோட்டம் விட்டேன். ஒரு நூற்றியைம்பது பேர்வரை அந்தக் குளிரிலும் கூடிநிற்பதை அவதானிக்க முடிந்தது. பதா கைகள் பெரும்பாலும் சிங்களத்தில் காணப்பட்டன. கோஷங் களும் அந்த மொழியில்தான் அமைந்திருந்தன.
இந்த ஆர்ப்பாட்டத்துக்காகவா லண்டனிலிருந்து சுவி ஸுக்கு ராம்ராஜ் என்ற பிரகிருதி வந்தார் என எண்ணிக் கொண்டேன். கடந்த மாவீரர் தின நிகழ்வு ஜேர்மனியில் நடை பெற்>ற சமயம் அதற்கெதிராக அதைத் தடுத்து நிறுத்து வதற்காக ஜேர்மன் அதிகாரிகளிடம் நேரடி முறைப்பாடு செய்வதற்காக ராம்ராஜும் அவரது அணியினரும் லண்ட னில் இருந்து ஜேர்மனியின் டுஸில்டோர்வ் நகருக்கு வந்து சென்றார்கள் என அறிந்திருந்தேன். அதனால் அவர் இந்த ஆர்ப்பாட்டத்துக்காக லண்டனிலிருந்து சுவிஸுக்கு வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கவில்லை. அத்தோடு விட யத்தை விட்டு விட்டேன்.
சற்று நேரத்தில் பிரஸ் கிளப்புக்கு ஒரு தகவல் வந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வந்திருந்த ராம்ராஜை சுவிஸ் பொலீ ஸார் காத்திருந்து அள்ளிப் போட்டுக்கொண்டு போய்விட் டார்கள் என்பதுதான் அத்தகவல். அதையடுத்து அது பற்றிய செய்தியைத் தோண்டத் தொடங்கினோம். கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாயிற்று அது.
* * *
ராம்ராஜ் அல்லது அவரது லண்டன் பாஸ் போர்ட்டில் குறிப்பிட்டபடி விராஜா ரமியராஜ் அண்மைக் காலத்தில் ரி.பி.ஸி. என்ற புலி எதிர்ப்பு வானொலிச் சேவை ஒன்றை லண்டனிலிருந்து "திறம்பட' இயக்கிப் புகழ்பெற்றவர். வெளிநாடுகளில் வதியும் தமிழர்களிடையே அவரது புலி எதிர்ப்புப் புறணி காரணமாக அதிகம் பேசப்பட்டவர்.
தமிழர்கள் பலர் எரிச்சலோடும் சிலர் விருப்போடும் கருதும் நபர் இவர்.
சுவிஸ் பொலீஸாருக்கும் இவருக்கும் இடையிலான கசப்புகளை அறிவதற்கு எண்பதுகளின் பிற்பகுதிகளையும் தொண்ணூறுகளின் முற்பகுதியையும் நாம் ஒரு தடவை தோண்டிப் பார்க்க வேண்டியிருக்கும்.
1989இல் புளொட் தலைவர் உமாமகேஸ்வரன் கொழும் பில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட் டார். அவரைச் சுட்டுக்கொன்றவர் அவரின் முன்னாள் மெய்ப் பாதுகாவலரான ராபின் என்பவரே என்ற பேச்சு புளொட் வட்டாரத்தில் பின்னர் அடிபட்டது.
இந்த ராபின் 90களின் முற்பகுதியில் இயக்க நட வடிக்கைளை எல்லாம் துறந்து சுவிஸில் தஞ்சம் புகுந்து சாதாரண வாழ்கையை ஆரம்பித்தார். இலங்கையிருந்து ஒரு தமிழ்ப் பெண்ணை சுவிஸுக்கு அழைப்பித்து அங்கேயே மணந்து கொண்டார்.
பேர்ன் கன்டனில் லஸ்கன்தாள் என்ற இடத்தில் அவர் மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென அவரதும் மனைவியதும் சத்தம் சந்தடி அடங்கியதால் அயலவர்கள் பொலீஸாரின் உதவியுடன் அவர்கள் வசித்த வீட்டை உடைத்துப் பார்த்தனர்.
வீட்டுக்குள் மூன்று நாள்களுக்கு முன்னர் ராபினும் அவ ரது மனைவியும் கத்தியால் குத்தப்பட்டு இறந்த நிலையில் அழுகிய சடலமாகக் காணப்பட்டனர்.
விசாரணைகள் நடந்தன. சம்பவதினம் பகல் வீட்டுக்குள் நுழைந்த சிலர் தனியாக இருந்த ராபினின் துணைவியாரை நான்கு மாதக் கர்ப்பிணியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் கத்தியால் குத்திப் படுகொலை செய் தமையும், பின்னர் வீட்டுக்குள் மறைந்து, காத்திருந்து மதிய போசனத்துக்காக அலுவலகத்திலிருந்து வீடுதிரும்பிய ராபினை மடக்கிக் கொலை செய்தமையும் விசாரணைகளில் அம்பலமாகின.
ராபினின் மனைவியின் அந்தரங்க உறுப்பிலிருந்து மூன்று வெவ்வேறு நபர்களின் விந்துப்பாய எச்சங்களும் விசா ரணையாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டன.
உமா மகேஸ்வரனுக்குப் பின்னர் புளொட் அமைப்புக் குத் தலைமை வகித்த மாணிக்கதாசனே நேரடியாக சுவிஸில் வந்துநின்று உமா படுகொலைக்குக் காரணமானவரை மற் றும் சிலரோடு நேரில் பிரசன்னமாகி தீட்டித் தள்ளிவிட்டு சுவி ஸில் இருந்து வெளியேறியுள்ளார் என சுவிஸ் விசாரணை யாளர்கள் கருதுகின்றார்கள்.
இந்தப் படுகொலைகள் தொடர்பாக புலிக்குட்டி எனப் படும் புளொட் ரஞ்சன் உட்படச் சிலர் கைதாகினர். சுமார் ஒன்றரை வருடம் விளக்கமறியலில் இருந்த புலிக்குட்டி பின்னர் விடுவிக்கப்பட்டார். மற்றொருவருக்கு எதிராக வழக்கு விசாரணை நடந்தது. எனினும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரும் விடுவிக்கப்பட்டார்.
ஆனால், கொலை விவகாரத்தை சுவிஸ் புலனாய்வாளர் கள் மூடி, மறந்துவிடவில்லை.
இதே காலப்பகுதியில் சுவிஸில் பெரும் போதைவஸ்துக் கடத்தல், வியாபாரம் ஆகியவற்றை, மேற்கொண்ட கும்ப லின் தலைவரான "முஸ்தபா' என்ற நபர் சுவிஸ் அதிகாரி களின் வலைக்குள் சிக்கவிருந்த சமயத்தில் நாட்டை விட்டுத் தப்பினார்.
இவை எல்லாவற்றுக்கும் பின்னர் நீண்ட பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து லண்டனில் தோற்றிய ராம்ராஜ் அங்கு அரசியல் தஞ்சம் பெற்று லண்டன் பிரஜையானார்.
லண்டன் பிரஜாவுரிமை பெற்ற ராம்ராஜ் சுவிஸ் பக்கம் தலைவைத்துப் படுப்பதில்லை. ஆனாலும், கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரசியல் பிரமுகர் அந்தஸ்தோடு அவர் சுவிஸில் தோற்றினார். அப்போதுதான் சுவிஸ் பொலீஸாரிடம் வகையாக மாட்டினார்.
ராபினினதும் அவரது மனைவியினதும் படுகொலைகள் தொடர்பாகத் தாம் தேடிவரும் சந்தேக நபர்களில் ஒருவரும்
"முஸ்தபா' என்ற பெயரில் இயங்கிய போதைவஸ்துக் கடத்தல் கும்பல் தாதாவும்
தாம் தற்போது கைது செய்திருக்கும் ராம்ராஜ்தானா என் பதைக் கண்டறிவதுதான் சுவிஸ் விசாரணையாளர்களின் தற்போதைய நோக்கம் எனத் தெரிகிறது.
தாம் வைத்திருக்கும் பல்வேறு ஆதாரங்கள், தொலைபேசி உரையாடல் பதிவுகள் என்பவற்றின் வலுவோடு இந்த விசா ரணைகளை சுவிஸ் புலனாய்வாளர்கள் முடுக்கி விட்டிருக்கின்றனர் என்பதை சுவிஸ் புலனாய்வு வட்டாரங்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி நாம் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் அறியமுடிந்தது.
இவ்விடயங்களில் ராம்ராஜுக்குத் தொடர்பு ஏதும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் அல்லது முன்னாள் "முஸ்தபா' அவர்தான் என்பது கண்டறியப்பட்டால் நீண்ட பல வரு டங்களுக்கு அவருக்கு மீட்சியே இல்லை என் கின்றன சுவிஸ் வட்டாரங்கள்.
ஜெனீவாப் பேச்சுகள் பற்றிய செய்திகளைத் திரட்ட வந்திருந்த ஒரு பத்திரிகையா ளரினால் முக்கிய அரசியல் பிரமுகராகக் குறிப்பிடப்பட்ட ஒருவர், சுவிஸ் வந்து சில மணிநேரத்தில் பழம்பெரும் சந்தேகநபர் என்ற கோதாவில் அந்த நாட்டு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டமை பேச்சு நடவடிக்கையை ஒட்டிய ஒரு கொசுறுத் தகவல்தான்.
நன்றி> உதயன்
சேரன், சீமான், தங்கர்பச்சான் ஆகிய மூவரும் இணைந்த ஒலி, ஒளி வடிவ கலந்துரையாடல். தமிழ்நாட்டு தமிழர்கள் பார்த்திருக்கமாட்டார்கள் என எண்ணி இங்கு பதிக்கிறேன் தலைப்பை அழுத்தி தரவிறக்கம் செய்துந பார்க்கவும்.
சுட்டி>http://www.lankasritv.com/ActresAndmore/ci-po-kalanthurajadal.wmv
நன்றி> ttnதமிழ்தொலைக்காட்சி
இந்த மனிதர்களிடம்தான் எவ்வளவு பாசம், ஈழத்தில் கற்பழித்து கொலைசெய்யப்பட்ட தர்சினிக்காக அவர் படும் வேதனை, எம்மவர்கள் அதையே அரசியலாக்கி விவாதமேடை போடுகிறார்கள். மனிதாபிமானம் இல்லாது மாற்றுக்கருத்து கூறுபவர்கள் சிந்திப்பார்களா?
சர்வதேச நாடுகள் வழங்கும் நிதியுதவிகளில், மிக அதிகமான தொகையை சிறீலங்காவுக்கு வழங்கிவரும் ஜப்பான், பல மில்லியன் டொலர் நிதியுதவிகளை, எவ்வாறு பாவிப்பது என்பதில் இழுபறிகளையும் இழுத்தடிப்புக்களையும் சிறீலங்கா அரசு திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலம், கடும் நிதி மோசடிகள் நடைபெற்று, நிதி சூறையாடப்படுகிறது என்று பகிரங்கமாக சுட்டிக்காட்டியுள்ளது.
இன்று கொழும்பில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துகொண்ட சிறீலங்காவுக்கான ஜப்பான் தூதுவர் திரு.அக்கியோ சூடா, ஏற்கனவே ஜப்பான் வழங்கிய பாரிய நிதியுதவிகள் சரியான முறையில் பாவிக்கப்படாததுடன், மக்களின் நலன்கள் தொடர்பான எந்த விடயங்களுக்கும் இந்த நிதி சரியாகப் பயன்படுத்தப் படுவதை அரசு உறுதிசெய்யவில்லை என்றும் குற்றம் சுமத்தினார்.
இதுவரை வழங்கப்பட்ட பாரிய நிதியுதவிகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது, அல்லது இதுவரை பயன்படுத்தப்படாத நிதி யாரிடம் எங்கே உள்ளது என்ற விபரங்களை சிறீலங்கா அரசு தெளிவாக வழங்கவேண்டிய தேவையுள்ளது. எதிர்கால நிதியுதவிகள் அனைத்தும், கடந்தகால சிறீலங்கா அரசுகளின் நிதிப்பாவனை தொடர்பான விபரங்களைக் கருத்தில்கொண்டே, முன்னெடுக்கப்படும் என்ற நிபந்தனையையும் சூடா தெளிவுபடுத்தினார்.
1991ம் ஆண்டு, மின்சக்தி நிலையமொன்றை அமைப்பதற்கான பாரிய நிதியுதவி வழங்கப்பட்டபோதும், 14 ஆண்டுகளாக சிறீலங்கா அரசுகள் அந்தத் திட்டத்தை இழுத்தடித்துள்ளதை சுட்டிக்காட்டியதுடன், 2004ம் ஆண்டு சுனாமி அழிவுகளின்போது வழங்கப்பட்ட பாரிய நிதியுதவிகள் எதுவும் சரியான முறையில் திட்டமிட்டு பாவிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்ட அக்கியோ சூடா, சுனாமிக்குப் பின்னர், உலக நாடுகள் வழங்க முன்வந்த 3.3 பில்லியன் டொலர் நிதியுதவிகூட, இதன்காரணமாக, முடங்கிக் கிடப்பதாகக் குறிப்பிட்டார்.
மின்சார சபையின் முன்மொழிதல்களைக் கருத்தில் எடுத்து, மின்சார உற்பத்தி தொடர்பான பாரிய திட்டமொன்றுக்கு ஜப்பான் உதவ முன்வந்திருந்த போதிலும், சிறீலங்கா ஆட்சியாளர்களின் மாற்றங்களின்போது ஏற்பட்ட கருத்து வேற்றுமைகளால் அவை முன்னெடுக்கப்படாது, காலவதியாகியதையும், சூடா சுட்டிக்காட்டினார்.
இனிவரும் காலங்களில், ஜப்பான் தொடர்ந்தும் சிறீலங்காவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க தயாராக இருக்கின்ற போதிலும், முன்மொழியும் திட்டம், குறிப்பிட்ட காலத்திற்குள், முழுமையான நிதியைப் பயன்படுத்தி நேர்மையாக முன்னெடுக்கப்படும் என்ற உறுதிமொழியை சிறீலங்கா அரசு தரும்பட்சத்தில் மட்டுமே அவை சாத்தியமாகும் என்றும் தெளிவாக விளக்கமளித்தார்.
அத்துடன், பேச்சுவார்த்தையில் ஈடுபடும் இரு தரப்பினரும், நேர்மையாக நிரந்தர சமாதானத்திற்காக செயற்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நன்றி>புதினம்
Following a news article published in the Island newspaper, posters have begun appearing to confirm the fact that the notorious fugitive V. Ramaraj is behind bars. According to the Island, Ramaraj was the head of international operations for the ENDLF paramilitary group and was on the Swiss police’s most wanted list for a serious of crimes including drug trafficking, people smuggling and credit card fraud.
How long will fugitive Ramaraj’s sentence be?
http://www.tamileditors.com/NEW/
Thangs>Tamil Editors

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி ஜே.வி.பி. வழக்கு!
[திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2006, 19:16 ஈழம்] [ச.விமலராஜா]
இலங்கையில் அமுலில் உள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமயவினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தம் செல்லாது என்று கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சிறிலங்கா பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கைச்சாத்திட்ட இந்த ஒப்பந்தம் சிறிலங்காவின் அரசியல் யாப்புக்கு எதிரானது என்றும் அம்மனுவில் ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமயவினர் தெரிவித்துள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்டோர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைதிச் செயலகத்தின் ஊடாக இந்த வழக்கின் தாக்கீதை அனுப்பி வைக்குமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை மார்ச் 29 ஆம் நாள் நடைபெற உள்ளது.
நன்றி>புதினம்.
இன்று இலங்கையின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் இருக்கிறது. ஒருகாலத்தில் சிங்கப்பூர் போன்று வருமென எதிர்பார்க்கப்பட்ட இலங்கை , இன்று முன்பிருந்த நிலைமையை விடவும் மிகவும் கீழே இறங்கிவிட்டது. இந்நிலைக்கு இருபெரும்கட்சிகளான ஜக்கியதேசியகட்சிக்கும், சிறீலங்கா சுதந்திரகட்சிக்கும் முக்கிய பங்குண்டு, அவர்கள் வழியில் இலங்கையின் பொருளாதாரத்தை சீரழிக்க ஜேவிபி ஆரம்பித்திருக்கிறது.
வெளிநாடுகள் வழங்கிய உதவிப்பணத்தை, சுனாமியால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு பகிர்ந்தளிக்க உருவாக்கப்பட்ட, சாதாரன சுனாமிகட்டமைப்புக்கே தடைபோட்டதின் மூலம், இலங்கையின் சட்டத்துக்குள் இனமுரன் பாட்டைதீர்க்கமுடியாது என்ற செய்தியை சொல்லி நின்றது, இனவாதம்கக்கும் சிங்கள நீதிமண்று.
மீண்டும் அங்கொருவழக்கு, ஜேவிபிக்கு ஆதரவாக தீர்ப்பு வரலாம். மீண்டும் புதிய ஒப்பந்தம் எழுதலாம், சிங்கள உறுமய வழக்குபோடும் தடைவரலாம், மீண்டும் புதிய ஒப்பந்தம், அப்புகாமி வழக்குபோடுவார்................இது ஒருதொடர்கதை ஆகும்.
சிங்கள இனவாத நீதிமண்று எமக்கு சொல்லி நிற்கும் ஒரு உண்மை, சிங்கள யாப்புக்குள் ஒரு தீர்வு வராது என்பதே.
சிங்கள யாப்புக்குள் அடங்காத தமிழர், சிறீலங்கா மக்களா?
சிறிலங்காவின் வெளிநாட்டு கடன் சுமையில் தமிழர்களும் பங்காளிகளா?
இந்தபணம் எதற்காக செலவழிக்கப்பட்டது?
தமிழர்களது உயிர், உடமை, வாழ்விடங்களை அழிப்பதற்காக பெறப்பட்ட, வெளிநாட்டுகடன் சுமை தமிழர் தலையிலுமா?
"கொடுவாளினை எடடா கொடியோன்
செயல் அறவே குகைவாழ் புலியே!!!"