17 June, 2006
தடை அநாகரிகமானது: டென்மார்க் அமைதிச்சபை கண்டனம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடை அநாகரிகமானது என்று டென்மார்க் நாட்டின் அமைதிச் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
டென்மார்க் அமைதிச் சபையின் பிரதித் தலைவர் லெவி கே. ப்ரவுச் இது குறித்து கூறியுள்ளதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பியத் தடையானது அமைதியை உருவாக்காது. அமைதியின் பக்கத்தைத் தவிர எந்த ஒரு பக்கச் சார்பு நிலையையும் நாம் மேற்கொள்ளமாட்டோம்.
இந்தப் பிரச்சனையில் தொடர்புடைய இருதரப்பினருமே வன்முறையை கையாளுகின்றனர். அனைத்து வகையிலான வன்முறைகளையும் நாம் கடுமையாக எதிர்க்கிறோம்.
இருதரப்பினரையும் ஒரே பாதையில்தான் சர்வதேச சமூகம் அணுக வேண்டும். வன்முறையை யார் உருவாக்குகிறார்கள் என்பது குறித்து உரிய விசாரணை நடத்திய அதற்குப் பொறுப்பான நபர்களை அடையாளப்படுத்த வேண்டியது அவசியமானது.
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்திவிட்ட பின்னர் அமைதிப் பேச்சுக்களை நடத்துவது என்பது கடினமானது. இதனால் அப்பாவித் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவர். ஏனெனில் இலங்கைத் தீவிலும் சிறிலங்காவின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் வாழுகிற தமிழர்களுக்காக குரல் கொடுக்கிற பிரதான அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளனர்.
நாம் நோர்வேயின் வழியைத்தான் பின்பற்றுவோம். ஐரோப்பிய ஒன்றியத்தை பின்பற்றமாட்டோம். நோர்ட்டிக் அமைதி குழுவின் அங்கமாகவே நாங்கள் உள்ளோம். ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதிக்கிற முடிவுகளுக்கு அப்பால் அமைதிக்கான ஆதரவைத் தர வேண்டும். ஐரோப்பியத் தடைய அநாகரிகமானதாகவே நாம் பார்க்கிறோம்.
அமைதியை உருவாக்குவதில் ஸ்காண்டிநேவிய நாடுகள் நடுநிலையுடன் செயற்பட வேண்டியதை உலகுக்கு காட்ட வேண்டிய சூழ்நிலை இப்போது உள்ளது என்றார் அவர்.
நன்றி>புதினம்.
ஈழத்தில் போர் வெடிக்குமா?
பதிலடி கொடுக்க நேரிடும் என்ற எச்சரிக்கையை சிறிலங்காவுக்கு எமது தலைமைப்பீடம் அனுப்பியுள்ளது: சு.ப.தமிழ்ச்செல்வன்
சிறிலங்கா இராணுவத்தின் வான் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க நேரிடும் என்று சிறிலங்காவுக்கு எமது தலைமைப்பீடம் எச்சரிக்கையை அனுப்பியுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இந்த எச்சரிக்கையை சிறிலங்காவுக்குத் தெரிவிக்குமாறு இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் மற்றும் அனுசரணையாளராகிய நோர்வேயின் சிறிலங்காத் தூதுவர் ஆகியோரை தமிழீழ விடுதலைப் புலிகள் கேட்டுக்கொண்டுள்ளனர் என்றும் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியுள்ளதாவது:
இலங்கையில் உள்ள கள நிலைமைகளைப் புரிந்து கொள்ளாமல் கெப்பிட்டிக்கொல்லாவ தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளை குற்றம்சாட்டி சில நாடுகள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அத்தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகளும் கண்டனம் செய்துள்ளனர்.
கெப்பிட்டிக்கொல்லாவ பயணிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கவில்லை என்றும் அக்கிளைமோர்த் தாக்குதலுக்கும் எமக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளோம்.
இத்தகைய கொடூரமான தாக்குதலுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை என்று மீண்டும் கூறுகிறோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்துகிற சக்திகள் குறித்து நாம் அவதானமாக உள்ளோம். அமைதி முயற்சிகளை எதிர்க்கும் அந்த சக்திகளே பொதுமக்கள் மீதான தாக்குதலை நடத்தி நிலைமையை மேலும் கொழுந்துவிட்டு எரியச் செய்துள்ளனர். ஒரு முழு அளவிலான யுத்தத்தை தூண்டியுள்ளனர்.
ஓஸ்லோவில் சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புடன் நடந்து கொள்ளாமை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தடைக்குப் பின்னைய சூழ்நிலையால் இருதரப்பு சமநிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அது இலங்கையில் ஒரு யுத்தத்தை நோக்கியுள்ளது.
விமானக் குண்டு வீச்சுக்கள் மூலம் பொதுமக்கள் குடியிருப்பை பொறுப்பற்ற முறையில் தாக்கியமைக்கு சிறிலங்கா அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்த நேரிடும் என்ற தமிழர் தலைமைப்பீடத்தின் கடும் எச்சரிக்கையை சிறிலங்காவுக்கு தெரியப்படுத்தி உள்ளோம் என்றார் சு.ப. தமிழ்ச்செல்வன்.
நன்றி: புதினம்
படையினரின் வெறியாட்டம் ஐவர் பலி! 44 பேர் காயம்.
மன்னாரில் பொதுமக்கள் இடம்பெயர்ந்து தங்கியிருந்த பேசாலை தேவாலய முன்றலில் இன்று காலை சிறீலங்கா கடற்படையினர் மேற்கொண்ட கைக்குண்டுத் தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லபட்டதுடன் 44 பேர் காயமடைந்துள்ளனர்
அத்துடன் பேசாலைக் கடலில் வைத்து நான்கு மீனவர்கள் சிறீலங்கா கடற்படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 6.45 மணியளவில் மன்னார் கடற்பரபில் இடம்பெற்ற மோதலை அடுத்தே கரையோரக் கிராமங்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளார்கள்.
இதன் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலை மற்றும் தேவாலயங்களில் தஞ்சம் புகுந்திருந்தனர்.
இவ்வாறு தேவாலயத்தில் தஞ்சம் புகுந்த மக்கள் மீது சிறீலங்கா படையினர் இந்த கொலை வெறியாட்டத்தை நடாத்தியுள்ளனர்.
இதில் பெண்னொருவர் சம்பவம் இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். மேலும் 44 பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.
நன்றி>பதிவு.
16 June, 2006
ஈழத்தமிழருக்காக தமிழகத்தில் எழுச்சி ஆர்ப்பாட்டம்.
இந்திய நாடாளுமன்றக் குழுவை ஈழத்துக்கு அனுப்ப வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பேரெழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் .
ஆர்ப்பாட்ட நிகழ்வில் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் பேசியதாவது:
ஈழத் தமிழரைப் பாதுகாக்கிற- தன்னுடைய கடமையை ஆற்ற தமிழ்நாடு இன்று கிளர்ந்து எழுந்துள்ளது.
கடந்த இரு மாதங்களில் மட்டுமே 200-க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் மிகக் கொடூரமாக பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
இணையத்தளங்களிலே வெளியாகியுள்ள அந்தப் படங்களை பார்க்கவே முடியாத அளவுக்கு மிகக் கொடூரமாகக் கோரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனால் இணையத் தளங்களிலே அந்த படங்கள் வெளியாகி உள்ளபோதும் கூட இங்கே உள்ள ஊடகங்கள் அவற்றை இருட்டடிப்புச் செய்துவிட்டன.
இலங்கைப் பிரச்சனையில் இந்திய அரசு ஒருசார்பாக நிலைப்பாடு எடுத்துவிட முடியாது. உண்மை நிலையை அறிய நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்.
ஈழத் தமிழர்களுக்கு உதவாமல் சிங்கள அரசை இந்திய அரசாங்கம் ஆதரிப்பது என்பது இந்தியக் கட்டமைப்பிலே தமிழ்நாடு ஒரு தேசிய இனமாக உள்ளது. இந்தியக் கட்டமைப்பின் குடிமக்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தேசிய இனமாக வாழ்கின்ற இந்தத் தமிழர்களின் உணர்வுகளை அவமதிப்பதாகவும்.
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டமானது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட போராட்டம்.
ஈழத் தமிழர்களே!
தமிழகத்தில் உள்ள தமிழர்கள் கட்சிகளை-இயகங்களை கடந்து இன்று உங்களுக்காக இணைந்து நிற்கிறோம் என்றார் விடுதலை இராசேந்திரன்.
இங்குள்ள தமிழக அரசும் பொறுப்பில்லை என்று சும்மா இருந்துவிட முடியாது. இந்தக் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசும் வலியுறுத்த வேண்டும் என்றார் ரவிக்குமார்.
இடையே எழுப்பப்பட்ட முழக்கங்கள்:
ஈழத் தமிழர் துயர்துடைக்க
இன்று நடக்கும் ஆர்ப்பாட்டம்
வெல்கவே!வெல்கவே!
வெல்கவே! வெல்கவே!
வெல்லட்டும் வெல்லட்டும்
ஈழத் தமிழர் வெல்லட்டும்!
வீழட்டும் வீழட்டும்
சிங்கள இனவெறி
வீழட்டும்
ஈழத் தமிழர் எங்கள் இரத்தம்
ஈழத் தமிழர் எங்கள் சொந்தம்
ஈழத் துயரயம் எங்கள் துயரம்
ஈழத் துயரம் எங்கள் துயரம்
சிங்களவன் போடுறான் வெறியாட்டம்
செத்து மடியுது தமிழ்க் கூட்டம்
செத்து மடியுது தமிழ்க் கூட்டம்
வேடிக்கை பார்க்குது இந்திய அரசு
இந்திய அரசே! இந்திய அரசே!
தட்டிக் கேள் தட்டிக் கேள்!
இலங்கை தமிழ் எம்பிக்கள்
இந்திய பிரதமரை சந்திக்க
அனுமதி இல்லையா அனுமதி இல்லையா
சிங்களவரென்றால் இனிக்குதா?
தமிழரென்றால் கசக்குதா?
ஏமாளி தமிழனே
இளிச்சவாய் தமிழனே
இன்னுமா உறக்கம்
இன்னுமா உறக்கம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா:
ஈழத் தமிழர்கள் நாதியற்றவர்கள் அல்ல என்பதற்காக தமிழர் நலன் காப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
ஆர்ப்பாட்டத்தின் மூலமாக இந்திய அரசாங்கம் மற்றும் தமிழ்நாடு அரசாங்கங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு கருதாமல் எங்கள் தொப்புள் கொடிக்குச் சொந்தக்காரர்கள் என்பதை மனதில் கொண்டு இந்திய அரசங்கம் செயற்பட வேண்டும்.
அவர்களுக்கு இழப்பு ஏற்பட்டால் தாய் தமிழகத்தினர் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
தமிழர்கள் 60 நாடுகளுக்கும் மேற்பட்ட இடங்களிலே வாழ்கின்றனர். 2 நாடுகளில்தான் தமிழ்நாட்டிலும் ஈழத்திலும்தான் தேசிய இனமாக உள்ளனர்.
எமது தேசிய இனத்துக்கு ஆபத்து ஏற்படுகிற போது தட்டிக்கேட்டால் நமக்கு ஊறு வரும் என்று இந்திய அரசு கருதுகிறத
சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்திப்பதைக் காட்டிலும் தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தியப் பிரதமர் சந்திக்க வேண்டும்.
ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிற அரசாங்கம் தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் இருப்பது வேதனையான செய்தி.
மொழி வேறு- மொழி பேசுகிற மக்கள் வேறு என்ற மனப்பான்மையில் தமிழகத் தலைவர்கள் உள்ளனர்.
இரண்டையும் ஒன்றாக வைத்துப் பார்த்து ஈழத்தமிழர் விடியலை உருவாக்க ஒருங்கிணைய வேண்டும்.
சிறிய தீவில் இருக்கிற சிங்கள ஆதிக்கவாதிகள் மிகக் கொடூரமாக நடத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது.
தமிழ்நாட்டுத் தமிழர்கள் சீற்றம் கொண்டால்.... எரிமலை வெடிப்பதற்கு முன்னால் எச்சரிக்காது.
எங்கள் கடலை பார்க்கிறபோது மீன் முத்து ஆகிய சொத்துகள் மட்டுமல்ல கடலுக்கு அப்பாலே உள்ள எங்கள் சொந்தங்களும் அவர்களின் கண்ணீரும்தான் நினைவுக்கு வரும்.
ஈழத் தமிழர் பிரச்சனையில் பாரபட்சமற்ற முறையில் செயற்பட தமிழக அரசு உறுதுணையாக இருக்க வேண்டும்.
தமிழக நாடாளுமன்ற- சட்டமன்ற உறுப்பினர்களை அல்லது தமிழகத் தலைவர்களை ஈழத்துக்கு அனுப்பி நிலைமையை பார்க்கவேண்டும் என்றார் மல்லை சத்யா.
இதைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட முழக்கங்கள்:
வெல்லட்டும் வெல்லட்டும்
ஈழத் தமிழர் வெல்லட்டும்
வீழட்டும் வீழட்டும்
சிங்கள இனவெறி
வீழட்டும்
தடுத்து நிறுத்த நாதியில்லை
வேடிக்கை பார்க்குது வெறியாட்சி
கூலிகள் கொடுக்குது சிங்கள நரிக்க
இந்தி பேசும் இனத்தாருக்கு
இப்படி கொடுமை செய்திருந்தால்
இப்படி கொடுமை நிகழ்ந்திருந்தால்
இந்திய அரசு கொஞ்சுமா
இந்திய அரசு கொஞ்சுமா
சிங்களன் தலைதான் மிஞ்சுமா
நேபாள நாட்டின் துயர் துடைக்க
நீட்டுது டில்லி 1,000 கோடி
யாழ்ப்பாண நாட்டின் துயர் துடைக்க
என்னே செய்யதது இந்திய ஆட்சி
ஈழத் தமிழரை இன்னும் கொல்ல
சிங்கள சேனைக்கு ராடார் கருவி
பலாலி விமானத்தளத்தை பழுது பார்க்க போர்முற
இந்தியா செய்யுது
இந்தியா செய்யுது
ஏமாளித் தமிழா
இளிச்ச வாய்த் தமிழா
இன்னுமா உறக்கம்
இன்னுமா உறக்கம்
ஆகிய முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் வே.ஆனைமுத்து:
சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பா என்பவர் சமாதான காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மொத்தம் 5 ஆயிரம் முறைக்கு மேல் தாக்குதல் நடத்தியதாகக் கூறுகிறார். புதுடில்லியில் உள்ள சிறிலங்கா தூதுவர் ஜயசிங்கவோ 72 முறை என்கிறார். சென்னையில் உள்ள துணைத் தூதுவரோ மூவாயிரம் முறை என்கிறார். ஆகையால் இதில் எதுவுமே உண்மை இல்லை என்று தெரிகிறது.
இலங்கையின் அனுராதபுரத்தில் கண்ணிவெடித் தாக்குதல் நேற்று நடந்தது. அது சிறிலங்கா இராணுவத்தின் பகுதி. அங்கே எப்படி புலிகள் நுழைந்து தாக்கியிருக்க முடியும்? எல்லாமே பொய்யாகவே பரப்புகின்றனர் சிங்களவர்.
இந்த உண்மையை நம்நாட்டு ஊடகங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன்:
இலங்கைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்ப வேண்டும
ஈழத்தமிழ் நாடாளுமன்ற உறுபினர்கள் அங்குள்ள நிலைமையை இந்தியத் தலைவர்களிடத்தில் விளக்குவதற்கு அனுமதிக்க வேண்டும்.
கடந்த சில மாதங்களாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொந்தங்கள் இங்கே வந்திருப்பதன் மூலம் ஈழத்திலே வன்முறைகள் எந்த அளவுக்கு நடந்திருக்கிறது என்பதை அறியலாம்.
1983 ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலையில் போது அணிதிரண்டு தாய் தமிழகத்தை நோக்கி கதறி அழுதவாறு வந்தது போல் இரண்டு மூன்று மாதங்களில் ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் வந்துள்ளனர்.
சிங்களப் பேரினவாத அரசுக்கு இந்திய அரசு மறைமுகமாக பல்வேறு உதவிகளை வழங்குகிறது.
இங்கே எழுப்பப்பட்ட முழக்கங்களில் கூட அது கூறப்பட்டது.
தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக-
ஈழத் தமிழர்களுக்கு எதிராக-
சிங்களப் பேரினவாதத்துக்கு ஆதரவாக-
உறுதுணையாக இந்திய அரசு செயற்பட்டு வருகிறத
இந்தப் போக்குகள் கைவிடப்பட்டு தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள்- ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து கூறுகிற போது "இந்திய அரசின் நிலைப்பாடுதான் எங்கள் நிலைப்பாடு" என்று கூறியுள்ளார்.
இந்திய அரசின் நிலைப்பாடு என்ன?
- சிங்கள அரசுக்கு ராடார் கருவி கொடுப்பத
இந்திய அரசின் நிலைப்பாடு என்ன?
- பலாலி விமானத் தளத்தை சீர்படுத்தித் தருவத
இந்திய அரசின் நிலைப்பாடு என்ன?
- சிங்களப் பேரினவாதத்துக்கு உறுதுணையாக இருப்பத
இந்திய அரசின் நிலைப்பாடு என்ன?
- ரணில் விக்கிரமசிங்க வந்தாலும்- ராஜபக்ச வந்தாலும் சந்திரிகா வந்தாலும் அவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பத
இதுதான் இந்திய அரசின் நிலைப்பாடு.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே!
தமிழினத் தலைவர் அவர்களே!
இந்த நிலைப்பாடுதான் உங்கள் நிலைப்பாடா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
மகிந்த ராஜபக்சவுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறீர்களா-
சிங்களப் பேரினவாதிகளுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்கப் போகிறீர்களா?
அல்லத
தமிழர்களுக்கு குரல் கொடுக்கப் போகிறீர்களா?
தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்.
எமது சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டப்பேரவையிலே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் முதல்வர் தனது பதில் உரையில் இது பற்றி குறிப்பிடவில்லை.
கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனை கைதுசெய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது பேரவையிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் வெளிநடப்பு செய்தது.
ஆனால் தி.மு.க.வோ ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை என்ற நிலைப்பாட்டில் இருந்தது.
இன்றும் நாங்கள் சுட்டிக்காட்டவும் கண்டனம் செய்யவும் கடமைப்பட்டுள்ளோம்.
சிங்களப் பேரினவாத அரசுக்கு உறுதுணையாக இருக்கிற இந்திய அரசின் நிலைப்பாடுதான் உங்களின் நிலைப்பாடா?
அகதிகளுக்கான ஐ.நா. ஆவணத்திலே இந்திய அரசு இதுவரை கையெழுத்திடவில்லை. தமிழ்நாட்டின் 13 அமைச்சர்கள் மத்தியிலே உள்ளனர். அவர்களின் அமைச்சுப் பொறுப்புகளுக்கு நெருக்கடி கொடுக்கிற தமிழக முதல்வர், ஈழத் தமிழர்களுக்காக ஏன் அதைச் செய்யக் கூடாது? என்றார் திருமாவளவன்.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், தமிழ்நாடு அன்னையர் முன்னணியின் தலைவர் பேராசிரியர் சரஸ்வதி உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்பின் பிரதிநிதிகளும் தமிழின உணர்வாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.
நன்றி>புதினம்.
15 June, 2006
விமான குண்டு வீச்சுக்கு ஆழிப்பேரலை அகதிமுகாம் தப்பியது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளான கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இன்று வியாழக்கிழமை மாலை சிறிலங்கா விமானங்கள் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளன. இதில் 300 பேர் தங்கியிருந்த ஆழிப்பேரலை அகதிகள் முகாம் தப்பியது.
சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான நான்கு கிபீர் விமானங்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு அடங்கிய வன்னி வான்பரப்பில் இன்று மாலை 6.25 மணிக்கு மீண்டும் நுழைந்தன.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் மாலை 6.25 மணி முதல் 6.35 வரை நான்கு தடவை நான்கு குண்டுகளை வீசி விட்டுச் சென்றன. இக்குண்டு வீச்சுத் தாக்குதலை 10 நிமிட நேரம் தொடர்ச்சியாக நடத்தினர்.
அதன் பின்னர் மீண்டும் 6.45 மணிக்கு இரு கிபீர் விமானங்கள் குண்டுகளை வீசிச் சென்றன.
அதைத் தொடர்ந்து 6.55 மணிக்கு இரு கிபீர் விமானங்கள் மீளவும் குண்டுகளை வீசின. ஒவ்வொரு விமானமும் ஒவ்வொரு குண்டை வீசின.
வானில் மிக உயரத்தில் பறந்தவாறு ஏவுகணை எதிர்ப்பு சாதனத்தை இயக்கியபடியே விமானங்கள் குண்டுகளை வீசின என்று கிளிநொச்சியிலிருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
அதேபோல் மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளான தரவை மற்றும் புலிப்பாய்ந்தகல் பகுதிகளில் மாலை 3.15 மணியளவில் கிபீர் விமானங்கள் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியதாக மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயா மோகன் கூறியுள்ளார்.
மேலும் வவுணதீவு சிறிலங்கா இராணுவ முகாமிலிருந்து விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி மோர்ட்டார் எறிகணைகள் மூலம் இன்று காலை 8 மணி முதல் முற்பகல் 11 மணி வரை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
முன்னதாக இன்று காலையில் முல்லைத்தீவில் சிறிலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதலை நடத்தின.
இரு கிபீர் விமானங்கள் இன்று முற்பகல் 11.45 மணிக்கு முல்லைத்தீவு வான்பரப்பில் நுழைந்து செல்வபுரம் வட்டுவாகல் மக்கள் குடியிருப்புகளையும் ஆழிப்பேரலை அகதிகள் முகாமையும் இலக்குவைத்து இரு குண்டுகளை வீசின.
இதில் மக்கள் 5 பேர் காயமடைந்தனர். குடியிருப்புக்கள் சேதமாகின. மேலும் கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன. மீண்டும் முற்பகல் 11.57 மணிக்கு இரண்டாவது முறையாக கிபீர் விமானங்கள் குண்டுகளை வீசின.
இந்தத் தாக்குதலில் 300 பேர் தங்கியிருந்த ஆழிப்பேரலை அகதிகள் முகாம் தப்பியது. இதையடுத்து அங்கிருந்து ஆழிப்பேரலையால் இடம்பெயர்ந்த அகதிகள் வெளியேறியுள்ளனர்.
கடற்பரப்பிலிருந்து மூன்ற கடல்மைல் தொலைவில் சிறிலங்காவின் டோரா அதிவேகத் தாக்குதல் படகுகள் விமானக் குண்டு வீச்சை அவதானித்துள்ளன.
ஆழிப்பேரலை அகதிகள் முகாம் அருகே ஆறு குண்டுகள் விழுந்துள்ளன. இரு குண்டுகள் வெடிக்க்கவில்லை. இன்று முற்பகல் 11.30 மணி தொடக்கம் 10 நிமிட இடைவேளையில் இக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மீண்டும் தற்போதும் திடீரென தொடர் விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல்களை சிறிலங்கா இராணுவம் நடத்தி வருகிறது.
நன்றி>புதினம்
100க்கு மேற்பட்ட இளைஞர்கள் கருணா குழுவால் கடத்தல்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல கிராமங்களின் கருணா குழுவினர் இளைஞர்களை கடத்திலுள்ளார்கள். இன்று அதிகாலை முதல் பிற்பகல் வரை நூற்றுக்கும் அதிகமானவர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள்.
சந்திவெளி கிரான் வாழைச்சேனை கல்குடா பேத்தாழை பட்டியடிச்சேனை போன்ற பகுதிகள் இராணுவத்தினர் சுற்றிவளைக்க கருணா குழுவினர் இளைஞர்களை பிடித்து சென்றுள்ளார்கள். கடத்தப்பட்வர்களில் மாணவர்களும் அடங்குவதா தெரிவிக்கப்டுகின்றது.
இதுதொடர்பாக ஏறாவூர் காவல் துறையினர் மற்றம் வாழைச்சேனை காவல் துறையினரிடம் முறையிட்டுள்ளார்கள. அத்துடன் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினரிடமும் முறையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி>புதினம்.
தமிழர் பிரதேசங்கள்மீது குண்டு வீச்சு.
முல்லைத்தீவில் திடீர் விமானக் குண்டுவீச்சு: 5 பேர் படுகாயம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான முல்லைத்தீவில் சிறிலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் மக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்து இன்று வியாழக்கிழமை குண்டுத் தாக்குதலை நடத்தின.
இரு கிபீர் விமானங்கள் இன்று முற்பகல் 11.45 மணிக்கு முல்லைத்தீவு வான்பரப்பில் நுழைந்து செல்வபுரம் வட்டுவாகல் மக்கள் குடியிருப்புகளை இலக்குவைத்து இரு குண்டுகளை வீசின.
இதில் மக்கள் 5 பேர் காயமடைந்தனர். குடியிருப்புகள் சேதமாகின. மேலும் கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.
தொடர்ந்து முற்பகல் 11.57 மணிக்கு இரண்டாவது முறையாக கிபீர் விமானங்கள் குண்டுகளை வீசின.
நன்றி-புதினம்
இதேவேளை திருகோணமலை முதூர்பிரதேசங்களிலும் தமிழர் குடியிருப்புகள் மீது பாரிய எறிகனை வீச்சுக்கள் நடை பெறுவதாக அறிய முடிகிறது. சம்பூர், மூதூர் பிரதேங்களை இலக்குவைத்து பல்குழல்எறிகணைகள், மற்றும் ஆட்லறிகள் ஏவப்படுகின்றன சேதவிபரம் தெரியவில்லை.
14 June, 2006
கண்காணிப்புக் குழு குற்றச்சாட்டு.
யதார்த்த நிலைமைக்கு புறம்பானவற்றைத்தான் மகிந்த சர்வதேச சமூகத்திடம் தெரிவிக்கிறார்:
இலங்கையின் வடக்கு - கிழக்கில் உள்ள யதார்த்த நிலைமைக்குப் புறம்பானவற்றைத்தான் ஊடகங்களிலும் சர்வதேச சமூகத்திடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்து வருவதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளார்.
போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியுள்ளதாவது:
சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் தமது பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்தால் இந்தத் தீவில் நாங்கள் தொடர்ந்து இயங்குவோம். இல்லையெனில் இயங்க மாட்டோம்.
போர் நிறுத்த கண்காணிப்புக் குழு இல்லாத நிலையில் யுத்த நிறுத்த ஒப்பந்தமும் இல்லாமல் போகும்.
சிறிலங்கா அரசாங்கமும் அரச படையினரும் இணைந்து செயற்பட வேண்டும். அரசாங்கத்தின் ஆணைகளுக்கு அரச படையினர் கீழ்படிந்து செயற்பட வேண்டிய காலம் இது.
அண்மையில் உண்மைகளின் அடிப்படையிலான அறிக்கை கண்காணிப்புக் குழுவினரால் வெளியிடப்பட்டது. அதில் சில விடயங்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.
பொதுமக்கள் பகுதியில் நடைபெறும் படுகொலைகள் குறித்த அரசாங்கத்தின் விசாரணைகள் பாரபட்சமாக உள்ளன. வடக்கு - கிழக்கில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது மற்றும் குழந்தைகளினது எதிர்காலம் குறித்த அச்சத்துடன் வாழ்கின்றனர்.
முறையான விசாரணைகளை அரசாங்கம் நடத்தினால்தான் கொடூரப் படுகொலைகளை நிறுத்த முடியும்.
அரசாங்கம் இந்தப் படுகொலைகள் தொடர்பில் கண்ணை மூடிக்கொண்டு உள்ளது. எந்த ஒரு சம்பவங்களிலும் விசாரணைகள் கூட தொடங்கப்படவில்லை.
அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில்தான் இத்தகைய படுகொலைகள் நடைபெறுகின்றன.
இதற்கான பொறுப்பு சிறிலங்கா காவல்துறையினரிடம் உள்ளபோதும் படுகொலைகள் தொடர்பான தரவுகளை கண்காணிப்புக் குழுவுக்கு அனுப்புவதில்லை.
நிறைய வழக்குகளை நிலுவையில் வைத்துக் கொண்டு தரவுகளை அளிப்பதில் முடக்கத்தை சிறிலங்கா காவல்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வழக்குகள் அனைத்தும் விசாரணைக்குள்ளாக்கப்பட வேண்டியவை. அனைத்து வசதிகளும் மனித வளங்களும் உள்ள நிலையில் எதுவித காரணமும் கூற முடியாது.
இந்தப் படுகொலைகள் தொடர்பான சர்வதேச சமூகத்தின் விசாரணைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் தீர்வு காணப்படும். அப்பாவி குழந்தைகள் நாளாந்தம் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பதை சர்வதேச சமூகம் மறுக்கவில்லை. சில வாரங்களுக்கு முன்பாக வட பகுதியில் நடைபெற்ற படுகொலைகள் தொடர்பாக சிறிலங்கா காவல்துறை மா அதிபரினது முடிவை கண்காணிப்புக் குழு எதிர்பார்த்து உள்ளது.
இலங்கையின் வடக்கு கிழக்கு குறித்து ஊடகங்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் மகிந்த ராஜபக்ச தெரிவித்து வரும் கருத்துகளுக்கும் யதார்த்த கள நிலைமைகளுக்கும் முரண் உள்ளது
கடற்கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் கண்காணிப்புக் குழுவினர் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து உறுதியான உத்திரவாதம் அளிக்கப்படாத வரையில் சிறிலங்கா கடற்படையினரின் கலங்களில் பயணிக்க மாட்டோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பகுதிகளில் தற்போது கண்காணிப்புக் குழுவில் இரு நாட்டுப் பிரதிநிதிகளே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நோர்வே மற்றும் ஐஸ்லாந்து பிரதிநிதிகளே உள்ளனர். நோர்வேத் தரப்பில் தங்களது பிரதிநிதிகளை அதிகரிப்பதாக இல்லை என்று தெரிவித்துவிட்டனர் என்றார் ஹென்றிக்சன்.
நன்றி> புதினம்.
13 June, 2006
ஜுன் 16-இல் ஈழத் தமிழர்களுக்கான ஆர்ப்பாட்டம் தமிழகத்தில்.
நெடுமாறன், இராமதாசு, வைகோ, கொளத்தூர் மணி, திருமாவளவன் பங்கேற்பு
தமிழ்நாடு முழுவதும் எதிர்வரும் ஜுன் 16ஆம் நாளன்று ஈழத் தமிழர்களுக்கான ஆர்ப்பாட்டத்தை தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு நடத்த உள்ளது.
இது தொடர்பாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிங்கள முப்படைகளின் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு ஆளாகி ஆயிரக் கணக்கான தமிழர்கள் தப்பிப் பிழைத்து இந்தியாவில் அகதி களாகக் குவியத் தொடங்கியுள்ளனர். மேலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகித் தப்பி வர வழியில்லாமல் தவிக்கின்றனர். இந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக மக்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்பவேண்டிய அவசரமும் அவசியமும் ஏற்பட்டுள்ளது.
இதை வலியுறுத்தும் வகையில் வரும் வெள்ளிக்கிழமை (16-ந்தேதி) மாலை 4 மணிக்கு சென்னையிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் அனைத்துக் கட்சிகள், அனைத்து தமிழர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
1. இலங்கைத் தமிழர் பகுதியில் உண்மை நிலவரங்களைக் கண்டறியவும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆறுதல் கூற வும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அனைத்துக்கட்சிக் குழு ஒன் றினை உடனடியாக அனுப்ப வேண்டும்.
2. இந்தியப் பிரதமரை சிங்களத் தலைவர்கள் அடிக்கடி சந்தித்துப் பேச அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஈழத்தமிழர் பிரதிநிதிகள் சந்தித்துப் பேச அனுமதிக்கப்படவில்லை. இலங்கை நாடாளுமன்றத் தமிழ் உறுப்பினர்களின் குழு பிரதமரைச் சந்தித்துப் பேச அனுமதிக்க வேண்டும்.
இவற்றை வலியுறுத்தி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நிறு வனர் மரு.இராமதாசு, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் வே.ஆனைமுத்து, விடுதலை சிறுத்தைகள் பொதுச் செய லாளர் தொல்.திருமாவளவன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் சேதுராமன், பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழக ஒடுக் கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் பொழிலன், பா.ம.க. தலைவர் கோ.க.மணி, தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் சௌந்தரராசன் மற்றும் தமிழ்த் தேசிய அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மதுரையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க பொருளாளர் மாணிக் கம், தமிழ் தமிழர் இயக்கத் தலைவர் தியாகு மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள் கிறார்கள்.
சேலத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.மணி, தமிழ்த் தேசியக் கட்சிப் பொதுச் செயலாளர் இளமுருகனார் கலந்து கொள் கிறார்கள். தஞ்சையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் சி.முருகேசன் பங்கேற்கிறார்கள்.
கோவையில் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ராமகிருட்டிணன், தமிழர் தேசிய இயக்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் காந்தி கலந்து கொள்கிறார்கள். சிவகங்கையில் உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவர் மெல்கியோர், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் பரந்தாமன் கலந்து கொள்கிறார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>லங்காசிறி
தமிழர் கொலைகளின் பின்நின்று செயல்படுபவர்.
ராஜபச்சவின் சகோதரர்களின் உத்தரவில் வடக்கு கிழக்கில் தமிழர் படுகொலை - TCHR
அதிபர் மகிந்த ராஜபச்சவின் சகோதரர்களின் உத்தரவிலேயே வடக்கு கிழக்கில் தமிழர் மீதான படுகொலைகள் நடைபெறுவதாக பிரான்சை தளமாகக் கொண்டு இயங்கும் தமிழர் மனிதர் உரிமைகள் மையம் தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.
வடக்கு கிழக்கில் நடைபெறும் அப்பாவி மக்கள் மீதான படுகொலைகள் யாவும் தமிழ் மக்களை பீதி கொள்ளும் நோக்கில் அதிபர் மகிந்த ராஜபக்சாவினாலும், பாதுகாப்பு அமைச்சின் செயலாரான ராஜபக்சாவின் சகோதரன் கொத்பாய ராஜபக்சாவினதும் உத்தரவிலுமேயே தமிழர் கொலைகள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளது.
இப்படுகொலைகளை மேற்கொள்ளும் துணை ஆயுதக்குழுக்களுக்கு சன்மானப்பட்டியல் ஒன்று தாயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு படுகொலைகளுக்கும் சன்மானம் வழங்கப்படுவதாகவும் தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட இவ் சன்மானப்பட்டியலில், கைக்குண்டுத் தாக்குதல் செய்வோருக்கு 15.000 ரூபாவும், கிளைமோர் தாக்குதல் செய்வோருக்கு 20.000 ரூபாவும், விடுதலை போராட்டத்திற்கு ஆதரவாக முன்னின்று உழைப்போரை கொலை செய்வோருக்கு 100.000 ரூபாவும் சன்மானமாக வழங்கப்படுவதுடன், அரச படைகள் மன்னிப்புடன், தாம் விரும்பியவர்களை வடக்கு கிழக்கில் கொலை செய்யவும், பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தவும் ராஜபக்சா சகோதரார்களினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போதைய சிறிலங்காவின் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரிகளாகவும், சிறிலங்காவில் பாதுகாப்பு முடிவுகளை மேற்கொள்பவர்களாகவும் சிறிலங்காவின் தென் பகுதியை சேர்ந்த ராஜபக்சா சகோதரார்ளும், அவர்களது முன்னாள் பாடசாலை தோழர்களும், நண்பர்களும், உறவினர்களுமே உள்ளார்களென்றும் தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
நன்றி>பதிவு.
சிறுவர் படுகொலையை சர்வதேசம் கண்டிக்காதது ஏன்?
சிறிலங்கா படைகளினால் 24 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டது, தொடர்பில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மௌனமாக இருப்பதாக தமிழீழ விடுதலைப்புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிறுவர்களை படையில் சேர்ப்பதாக இச்சர்வதேச உரிமை அமைப்புக்கள், விடுதலைப்புலிகள் மீது தொடர்ச்சியாக குற்றம் சாட்டிவந்தன.ஆனால் இன்றைய நிலையில், இலங்கை இனப்பிரச்சினையால் அண்மைக்காலமாக சிறுவர்கள் கொலை செய்யப்படுவதைக் கண்டிப்பதற்கு இச்சர்வதேச அமைப்புக்கள் தவறிவிட்டன என, விடுதலைப்புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சிறுவர்களின் நலன்களில் அக்கறை செலுத்துவதாகக் கூறிக்கொள்ளும் இச்சர்வதேச உரிமை நிறுவனங்கள், தற்போது நடைபெறும் சிறுவர்களின் ஒவ்வொரு படுகொலையின் பின்னரும் தமது கண்டனத்தை வலியுறுத்திக் கூறியிருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் தொடர்ந்தும் மௌனமாகவே இருக்கின்றனர்.
அண்மைய நாட்களில் படுகொலை செய்யப்பட்ட 24 சிறுவர்களின் பெயர்களையும் புலிகள் பட்டியல் படுத்தியுள்ளனர். இதில் அண்மையில் மன்னார், வங்காலையில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டிருந்த குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்களும் அடங்குகின்றனர்.
கடந்த மாதமும் யுனிசெவ் அமைப்பு விடுதலைப்புலிகள் சிறுவரை படையில் சேர்ப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.
12 June, 2006
சிறிலங்காவில் 40 ஆயிரம் சிறார் பாலியல் தொழிலாளர்கள்.
சிறிலங்காவில் 40 ஆயிரம் சிறார் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக யுனிசெஃப் மற்றும் சர்வதேச தொழிலாளர் நிறுவன அறிக்கைகளைச் சுட்டிக்காட்டி சிறிலங்காவின் தேசிய சிறார் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளதாக கொழும்பின் ஆங்கில நாளேடான டெய்லி மிர்ரர் செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
5 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலான சிறிலங்கா சிறார்களை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஒருபால் உறவுக்காக பயன்படுத்துகின்றனர். அதேபோல் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையிலான கிராமப்புற சிறிலங்கா சிறார்களை குற்றச் செயல்களைப் புரிகின்ற குழுவினர் கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர் என்றும் யுனிசெஃப் மற்றும் சர்வதேச தொழிலாளர் நிறுவன புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
சிறார் பாலியல் தொழிலில் உலகின் சொர்க்கமாக சிறிலங்கா விளங்குகிறது.
சிறிலங்காவில் 2 ஆயிரம் சிறார் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக அரசாங்கம் கணக்கிட்டுள்ளது. ஆனால் பல்வேறு அமைப்புகள் இந்த எண்ணிக்கை 40 ஆயிரம் என்று தெரிவிக்கின்றன.
இந்த சிறார்களில் 80 வீதமானோர் ஆண்கள். இவர்களில் சுற்றுலா மையங்களில் வெளிநாட்டுப் பயணிகளின் ஒருபால் உறவுக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர்.
35 ஆயிரம் சிறார்கள் சிறு தொழிற்சாலைகளிலும் கடைகளிலும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்று அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நன்ரி>புதினம்.
10 June, 2006
ஈழத்தமிழர் குறித்து தமிழகத்தமிழர் கருத்து.
ஈழத் தமிழர் குறித்த தமிழகத் தமிழரின் இன்றைய நிலை என்ன?: தினமணி நாளேட்டில் வெளியான கடிதங்களின் தொகுப்பு
தமிழீழத் தமிழர் பிரச்சனை, ஐரோப்பிய ஒன்றியத் தடை, அகதிகள் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாட்டு தமிழர்களின் மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தினமணி நாளேட்டில் பொதுமக்களின் கடிதங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அவற்றின் தொகுப்பு:
இந்திராவின் அணுகுமுறை
"புலம் பெயர்ந்த தமிழர்கள்" தலையங்கம் (31.05.06) படித்தேன். இலங்கைத் தமிழர்கள்பால் சிங்களப் பேரினவாத அடக்குமுறை கட்டவிழ்க்கப்பட்டபோது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எடுத்த நிலைப்பாடு தொடர்ந்திருக்குமேயானால் இலங்கைத் தமிழர் சிக்கல் எப்போதோ தீர்வு கண்டிருக்கும். பாகிஸ்தானுக்கு எதிரான கிழக்கு வங்க மக்களின் எழுச்சிக்கு இந்திரா கண்ட தீர்வு இதற்கு முன்னுதாரணம் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ராஜீவின் மரணம் என்ற ஒரே காரணத்தைச் சுட்டிக்காட்டி நம் தார்மீகக் கடமையை நிறைவேற்றாமல் கையைக் கட்டிக் கொண்டிருப்பதும் இதில் மேலை நாடுகளைத் தாராளமாக தலையிட அனுமதித்து பார்வையாளர்கள் நிலையில் இருந்து கொண்டு இருப்பதும், உலகின் மிகப் பெரிய சனநாயக நாடாகிய நமக்கு ஏற்புடையதன்று.
சோம. நடராசன், கரூர்.
நீதியின் பக்கம் நிற்போம்
"விடுதலைப் புலிகள் அமைப்புக்குத் தடை விதித்தது ஐரோப்பியக் கூட்டமைப்பு" எனும் செய்தி (31.05.06) படித்தேன்.
ஈராக்கின் மீது அநியாயமாகப் போர் தொடுத்து, லட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்து, அமெரிக்க மக்கள் உள்ளிட்ட உலக மக்களால் "ஆக்கிரமிப்பாளன்'' என வன்மையாகக் கண்டனம் செய்யப்படும் அமெரிக்க ஏகாதிபத்திய ஆட்சியாளர்களும்,
இலங்கைத் தமிழர்களின் நியாயமான சுயாட்சிக் கோரிக்கைக்கு எவ்விதத்திலும் இணங்காத சிங்களப் பேரினவாதப் போர் வெறி ஆட்சியாளர்களும் இணைந்து மேற்கொண்ட செயலே இது என்பது தெளிவு.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான, கௌரவமான அமைதித் தீர்வு காண ஊறுசெய்யும் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் மேற்கொண்டுள்ள தடைகளை இந்திய அரசும் தமிழக அரசும் புறக்கணிக்க வேண்டும்;
நீதியின் பக்கம் நாம் நிற்க வேண்டும்.
தி.க.சி., நெல்லை 6.
நியாயமான கோரிக்கை
ஈழத் தமிழர் பிரச்சினைகள், துன்ப - துயரங்களைப் பற்றி உணர்ச்சி வசப்படாமல் அறிவுபூர்வமாக, தக்கச் சான்றுகளுடன் - தீர்வுகளுடன் மறவன்புலவு க.சச்சிதானந்தன் எழுதி வருவதற்கு மேலும் ஒரு சான்று - அவர் எழுதிய "அகதிகளுக்குப் பாதுகாப்பு ஓடை'' (01.06.06) எனும் கட்டுரை.
பேசாலை மீனவர்கள் பற்றிய குறிப்புகள் அரிய தகவலாகும்.
இலங்கைத் தமிழ் அகதிகள் பாதுகாப்பிற்கு இந்திய எல்லைக்குள் "பாதுகாப்பு ஓடை" அமைக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை மிக நியாயமானது வரவேற்கின்றேன்.
அவருடைய இந்தத் தனிநபர் கோரிக்கை - தமிழர்களின் கோரிக்கையாக, தமிழ்நாடு அரசின் கோரிக்கையாக இந்திய அரசிடம் வலியுறுத்தப்பட வேண்டியதாகும்.
பெ.சு. மணி, சென்னை 33.
இலங்கைக்கு உதவக் கூடாது
தன் சொந்த மண்ணைவிட்டு உயிர்பிழைக்க தமிழகம் வந்து சேரும் ஈழத் தமிழர்களை மனிதநேயத்தோடு அரவணைப்பதும் அவர்களைக் கொண்டு வந்து சேர்க்கும் படகுகளைத் திருப்பி அனுப்புவதும் மிகவும் அவசியமானது.
இதுவரை சிங்கள அரசுகள் ஒப்புக்கொண்ட "உடன்பாட்டை" மதித்ததே இல்லை என்பதுதான் வரலாறு. ஆகவே இலங்கை அரசுக்குத் துணை போகக் கூடாது என தமிழக சட்டமன்றத் தீர்மானம் மூலம் இந்திய அரசுக்கு உணர்த்துவது அவசியம்.
மா.கோ. தேவராசன், சிதம்பரம்.
காக்கும் படை
நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்களைக் கற்பழித்துக் கொன்று ஒரே குழியில் போட்டுப் புதைத்த இராணுவத்தையோ, யாழ். நூலகத்திலுள்ள புத்தகப் பொக்கிசங்களைத் தீயிட்டு அழித்த வக்கிர புத்திக்காரர்களைப் பற்றியோ, சிறைக்குள் நிராதவராக இருந்த குட்டிமணியையும் அவருடன் சேர்ந்த துடிப்புள்ள இளைஞர்களையும் கண்களைப் பிடுங்கி துடிக்கத் துடிக்கக் கொலை செய்த பாவிகளையோ நாம் மறந்து விடுகிறோம்.
ஆனால் "தமிழ் அகதிகளை" மிகச் சாதாரணமாக எண்ணி, போனால் போகிறதென்று ஆட்டு மந்தை போல தங்குவதற்கு இடமளிக்கிறோம்! என்ன கொடுமை! நாம் தந்த அன்பளிப்பு கச்சதீவு. அதை நாமே கேட்டுப் பெற வேண்டும் அல்லது பறித்துக் கொண்டு அதில் நமது இராணுவத்தை - தமிழ் அகதிகளை, மீனவர்களைக் காக்கும் படையாக நிறுத்த வேண்டும்!
இரா. கல்யானசுந்தரம், அனுப்பானடி
நாதியற்ற தமிழர்கள்!
"புலம் பெயரும் தமிழர்கள்" - தலையங்கம் (31.05.06) கண்டேன். கிழக்குப் பாகிஸ்தானில் நிகழ்ந்ததை "இனப் படுகொலை' என அறிவித்து உலக நாடுகளுக்கெல்லாம் பறையறைந்த கையோடு இந்திய இராணுவத்தை அனுப்பி வங்காளதேசம் உருவாக முழுமூச்சாக ஈடுபட்டார் இந்திரா காந்தி.
சிங்களக் காடையர்களால் இலங்கைத் தமிழர்கள் கூட்டம் கூட்டமாக வெட்டிக் கொல்லப்பட்டபோது "இனப் படுகொலை" என்று கூற டில்லியில் யாருக்கும் மனம் வரவில்லை.
நேரு - கொத்தலவாலா, சாஸ்திரி - சிரிமாவோ காலத்திலிருந்தே இந்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினையை அணுகிய போதெல்லாம் பேரிழப்புக்குள்ளாவோர் தமிழர்களே என்பதை மறந்துவிட முடியாது.
யாசீர் அராபத்துக்குத் தூதரகம் அமைக்க அனுமதியும், ஐ.நா. சபையில் அங்கம் வகிக்க உரிமையும் பெற்றுத் தர முன்வந்த இந்திய அரசு, இலங்கைத் தமிழர்களின் இன உணர்வை மதிக்கத் தவறிவிட்டது.
ஈழப் போராளிகள் தங்கள் இன விடுதலைக்காகப் போராடுவோர் என்ற அடிப்படை உண்மையைப் புறக்கணித்துவிட்டுச் சிங்கள அரசுடன் சமரசம் செய்து கொள்ளக் கச்சதீவைக் காணிக்கையாக அளித்த இழிவு, தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையைப் பறித்து அன்றாடம் உயிரையும் பறித்துக் கொண்டிருக்கிறது.
மைய அரசைப் பொறுத்த அளவில் ஈழத் தமிழரும் தமிழ்நாட்டுத் தமிழரும் ஒரே இனம் என்று கருத வேண்டிய தேவையின்றி, இங்கே குறட்டைச் சத்தம் பலமாகக் கேட்க ஈழத்தில் துப்பாக்கியும் பீரங்கிகளும் முழங்குகின்றன.
வங்கதேச அகதிகள் இந்தியாவில் குவிந்தபோது அவர்களின் மறுவாழ்வுக்கென "அகதிகள் நிவாரண நிதி" என்னும் பெயரில் ஒவ்வோர் அஞ்சல் அட்டை, அஞ்சல் உறையில் ஐந்து காசு சிறப்புத் தபால் தலை ஒட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
அகதிகளில் இன வேறுபாடு பார்க்கும் மைய அரசு, ஈழத் தமிழர்கள் திடீரென ஆயுதமேந்திய போராளிகளாக மாறிவிடவில்லை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அறவழிப் போராட்டங்களை நடத்தியும் பயனற்றுப் போன நிலையில், ஈழத் தமிழினம் பூண்டற்றுப் போகாமல் தடுக்க ஆயுதமேந்திய போரே இறுதிவழி என்னும் தவிர்க்க இயலாத முடிவுக்கு வர நேர்ந்தது என்று தினமணி நாளேட்டில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
நன்றி>புதினம்.
08 June, 2006
ஒஸ்லோ மாநாட்டின் சிறீலங்காவின் சதிமுயற்சி படுதோல்வி.
நோர்வேத் தலைநகர் ஒஸ்லோ தலைநகரில் இன்று ஆரம்பமாகி நாளை மாலை வரை நடைபெறும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தை பேச்சுவார்த்தையாக மாற்றுவதற்கு சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட சதிமுயற்சி படுதோல்வியில் முடிவடைந்துள்ளது.
தமிழர் தாயகத்தில் கொலை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டு சமாதான முன்னெடுப்புக்களுக்கான புறச்சூழலை இல்லாதொழி்த்த சிறீலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்தினை திசை திருப்பும் நோக்கோடு இருதரப்பிற்குமான பேச்சு வார்த்தையாக சித்தரிப்பதற்கான நலினத்தனமான முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டு வந்தது.
அத்துடன் ஒஸ்லோ கூட்டத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளையும் சிறீலங்கா அரசாங்கத்தையும் நேருக்கு நேர் சந்திக்க வைத்து கடந்த கால பேச்சுக்களைப் போன்று பேச்சுக்கான தொடக்க நிகழ்வு ஒன்றை முன்னெடுக்க இராஜதந்திரிகள் சிலர் முயற்சி செய்துள்ளனர்.
முடங்கிக் கிடக்கும் பேச்சுவார்த்தையை பின்வாயிலாக ஆரம்பித்து சமாதானம் தொடர்பான போலியான நம்பிக்கையைப் தோற்றுவிப்பதற்கு சிறீலங்கா அரசாங்கமும் சில இராஜதந்திரிகளும் மேற்கொண்ட திரைமறைவு முயற்சி விடுதலைப் புலிகளின் சாதுரியமான இராஜதந்திர நகர்வால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும நடைபெறும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் நோர்வே அனுசரணையாளர்களையும் கண்காணிப்பாளர்களையும் தனித்தனியாகச் சந்திக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் சிறீலங்கா அரசாங்கத் தூதுக்குழுவினரை சந்திப்பதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்துள்ள சூழலில் நடுநிலைமைத் தகமையை இழந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான சுவீடன், டென்மார்க், பின்லாந்து ஆகியவை தொடர்ந்தும் கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிப்பது பொருத்தமாக இருக்காது என விடுதலைப் புலிகள் கருதுகின்றனர்.
இதுகுறித்த தலைமைப்பீடத்தின் தீர்க்கமான முடிவுகளை ஒஸ்லோ கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக்குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.
ஒஸ்லோ கூட்டம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் தமிழினத்தை அழித்தொழிப்பதில் கங்கணம் கட்டியவாறு அப்பாவித் தமிழர்களை கொன்றொழிப்பதில் ஈடுபடும் சிறீலங்கா அரசாங்கத்தோடு எதுவும் பேசுவதற்கு இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நன்றி>பதிவு.
07 June, 2006
அல்லைப்பிட்டி மக்களை டக்கிளஸ் மிரட்டினார்.
ஈபிடிபி ஆயுதாரி டக்கிளஸ் தேவானந்தா யாழ் விரைவு.
ஈபிடிபி ஆயுததாரி டக்கிளஸ் தேவானந்தா இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் சென்றுள்ளார். சிறீலங்காப் பாதுகாப்பு படையினரின் பலத்த பாதுகாப்புடன் சென்ற இவர் ஈபிடிபிஇன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
முன்னதாக அல்லப்பிட்டி மற்றும் நெடுந்தீவு பகுதிகளுக்குச் சென்ற ஆயுததாரியான டக்கிளஸ் தேவானந்தா ஈபிடிபி உறுப்பினர்களைச் சந்தித்த பின்னர் அங்குள்ள சிறீலங்காப் படையினரைச் சந்தித்த ஈபிடிபி ஆயுததாரிகளுக்கு கூடிய பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுள்ளார்.
இதனை அடுத்து யாழ் குருநகர், நாவாந்துறை ஆகியவற்றுக்கு சென்ற ஒட்டுக்குழு ஆயுதாரி டக்கிளஸ் தேவானந்தா அல்லப்பிட்டியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களை அல்லப்பிட்டிக்குத் திரும்புமாறு மிரட்டியுள்ளார்.
நன்றி>புதினம்
06 June, 2006
அல்லைப்பிட்டி வழக்கில் மற்றுமொருவர் இன்று சாட்சியம்.
இலங்கையின் வடக்கில் யாழ் தீவகப்பிரதேசமாகிய அல்லைப்பிட்டியில் அண்மையில் குழந்தைகள் உட்பட 13 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது சாட்சியமளித்த சாட்சி ஒருவர், தமது வீட்டின் மாடிப்பகுதிக்கு பெட்ரோமக்ஸ் விளக்கை கையில் கொண்டு வந்த கடற்படையினர் தன் கண்முன்னால் தனது கணவனையும், தம்பியையும் சுட்டுக்கொன்றதாகத் தெரிவித்துள்ளார். ரொபின்சன் வயலட் என்ற 28 வயதுடைய இப்பெண்ணின் தங்கை, கணவன், அவர்களின் பிள்ளைகள் இருவர் ஆகியோர் அந்த வீட்டின் கீழ் தளத்தில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், இதன்போது சாட்சியின் தந்தை காயமடைந்ததாகவும், வீட்டிற்கு வெளியில் வைத்து தமது உறவினர் ஒருவரும், தனது தந்தையுடன் கடற்றொழில் செய்யும் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தனது கணவனையும், தம்பியையும் சுட்டுக்கொன்றவர்களை அடையாளம் காட்ட முடியும் என்றும் அந்தச் சாட்சி இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே உத்தரவிட்டபடி இந்த வழக்கு தொடர்பான அடையாள அணிவகுப்புக்கு புலனாய்வு பொலிசார் ஒழுங்கு செய்யாமைக்கும், புலனாய்வு தொடர்பான அறிக்கையை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குத் தவறியமைக்கும் ஊர்காவற்துறை நீதிபதி ஜெயராமன் புலனாய்வு பொலிசார் மீது அதிருப்தியைத் தெரிவித்ததுடன், நீண்டகால இடைவெளியில் அடுத்த தவணைக்கான விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார். எதிர்வரும் 20 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு ஒழுங்கு செய்வதுடன், இந்தக் கொலைகள் தொடர்பான புலனாய்வு பொலிசாரின் அறிக்கையை அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் புலனாய்வு பொலிசாருக்கு நீதிபதி உத்தரவிடடுள்ளார்.
இணைப்பு : newstamilnet.com
05 June, 2006
தமிழர்களின் சுயாட்சிக்கு அமெரிக்கா ஆதரவு!
'விடுதலைப் புலிகளுக்கு எதிராக அமெரிக்கா தடை விதித்திருக் கின்ற போதிலும், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு சுயாட்சி முறையின்கீழ் அவர்கள் வாழும் உரிமை களை பெறுவதற்கு அமெரிக்கா மதிப்பளிப்பதோடு நின்றுவிடாமல் அங்கீகாரத்தையும் வழங்கு கிறது" என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை ராஜாங்க அமைச்சர் ரிச்சார்ட் பௌச்சர் கொழும்பில் வைத்து வலியுறுத்திக் கூறியிருக்கிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அமெரிக்கா வரலாற்றில் முதல் முறையாக இந்தத் தடவையே தமிழர்களின் தாயகக் கோட்பாட்டைப் பகிரங்கமாக வரவேற்றும், அங்கீகரித்தும் ரிச்சர்ட் பௌச்சர் மூலம் அமெரிக்க அரசு சொல்லவும் வைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சட்டபுூர்வமான இலட்சியத்தை நோக்கியதாகவே தமிழர் போராட்டம் இருக்கிறது. ஆனால், அதனை அடையப் புலிகள் கையாளும் ஆயுதப் போராட்ட வழியைத்தான் அமெரிக்கா எதிர்க்கிறது. வெறுக்கிறது. ஏற்புடைய ஜனநாயகப் போராட்ட வழிகள் பல இருக்கும் பொழுது எவராலும் ஏற்க முடியாத ஆயுதம் து}க்கும் வழியைப் புலிகள் கையாளுவதையே அமெ ரிக்கா வெறுக்கிறது; எதிர்க்கிறது என்றும் ரிச்சர்ட் பௌச்சர், குறிப்பிட்டிருக்கிறார். கொழும்பில் நடந்த பத்திரிகையாளர் மாநாடு ஒன்றிலும், பின்னர் ஜூன் முதலாம் திகதி நடந்த இலங்கை அமெரிக்க வர்த்தக 'சேம்பர்ஸ்" கூட்டத்தில் பேசும் போதும், தமிழர்களின் சுயாட்சிக் கோரிக்கை மீது அமெரிக்காவின் நிலை என்ன என்பதைத் தெட்டத் தெளிவாக பௌச்சர் எடுத்து முன்வைத்திருக்கிறார். ' பரம்பரை பரம்பரையாகத் தாங்கள் வாழ்ந்து வரும் தாயக மண்ணில் தங்களைத் தாங்களே ஆளும் தங்களது தலைவிதியைத் தாங்களே நிர்ணயிக்கும் தங்களது வாழ்க்கை முறையைத் தாங்களே வகுத்துக் கொள்ளும் விருப்பங்கள் ஒரு இனத்தின் சட்டபுூர்வமான அபிலாஷை களே! இதனை அமெரிக்கா அங்கீகரித்தே வருகிறது"என்றும் அவர் சுட்டிக் காட்டிப் பேசினார். 'புலிகள் பயங்கரவாதத்தைக் கைவிட வேண்டும். அப்படி அவர்கள் கைவிட்டால், அவர்களு டன் பேசுவதற்குரிய வாய்ப்புகளை அமெரிக்கா, பின்னர் பரிசீலனைக்கு எடுக்க வழிகள் பிறக்கும். பயங்கரவாத்தை முறியடிப்பதற்கு முழு உலகமுமே இன்று ஒன்றுபட்டுத் திரண்டு வருகிறது என்பதை விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் விளங்கிக் கொள்ள வேண்டும். அந்தப் பயங்கரவாதம் ஆப்கானிஸ்தான் மலைகளிலிருந்து வந்தால் என்ன, வன்னியின் வயல் வெளிகளிலிருந்து வந்தால் என்ன அவற்றை முடியடிக்கவே உலகம் திரண்டு ஒன்றுபட்டு நிற்கிறது. இலங்கை அரசுக்கும் கடப்பாடு உண்டு தமது உரையின்போது அமெரிக்கத் துணை ராஜாங்க அமைச்சர் ரிச்சார்ட் பௌச் சர், இலங்கை அரசு செய்ய வேண்டியவற்றையும் எடுத்துக் கூற மறக்கவில்லை. சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யக் கூடிய முறையில் இலங்கை அரசும் நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஜனநாயகத்தை வரித்துக் கொண்ட ஒரு அரசிடமிருந்து நாங்கள் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கிறோம். மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். சிறுபான்மை இன மக்க ளின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். சகலரும் கட்டுப்பாடுகள் இல்லாத தெளிவான ஆட்சி நிலவ வேண்டும். சமாதானத்துக்கான து}ர நோக்கும் தெட்டத் தெளிவாகத் தெரிய வேண்டும். இத்தகைய லட்சணங்களையே நாம் ஜனநாயக அரசுகளிடமிருந்து எதிர்பார்த்து நிற்கிறோம். இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த மட்டில், அது இங்கு வாழுகின்ற சிறுபான்மை இன மக்கள் தங்கள் தலைவிதியைத் தாங்களே நிர்ணயிக்கும், தங்கள் வாழ்க்கை முறையைத் தாங்களே தீர்மானிக்கும் தங்களின் அபிலாஷைகளை இந்த அரசு இலங்கை என்ற ஒரே தேசியத்தின் கீழ் செய்து தரும் என்பதை வெளிக்காட்டுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு தமது நேர்மையை அரசு வெளிக்காட்ட வேண்டும். அரசின் நேர்மைத் தன்மையை, விசுவாசத்தை வெளிக்காட்டுவதற்கு உதாரணம் ஒன்றையும் பௌச்சர் தெரிவித்திருக்கிறார். தமிழ்மொழியின் பாவனைக்குள்ள உரிமையை உறுதிப்படுத்தி, அதனை அரச மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் சம சந்தர்ப்பங்கள் வழங்குவதன் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அந்த உதாரணமாகும். அரசு மீது குற்றச்சாட்டு கடந்த பெப்ரவரியில் ஜெனிவாவில் நடந்த பேச்சின் போது இணங்கப்பட்டபடி, துணை ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களைவதற்கு இலங்கை அரசு தவறி விட்டது என்ற குற்றச்சாட்டையும் ரிச்சார்ட் பௌச்சர் தமது உரையின் போது முன் வைத்திருக்கிறார். வன்செயல் பெருக்கத்திற்கான பாரிய பொறுப்பை விடுதலைப் புலிகளே சுமக்க வேண்டி யிருக்கிறது. யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏறக்குறைய முறிந்து விழும் நிலைக்கு தள்ளப்பட் டிருப்பதற்கும் புலிகளே ஓரளவுக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்றும் அமெரிக்க துணை ராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார். புலிகளுக்கு எதிராக நாங்கள் இலங்கைக்கு ஆதரவு தருகிறோம். இந்த ஆதரவை, ராஜரீக ரீதியாக, பொருளாதார ரீதியாக, இராணுவ ரீதியாக வழங்குகிறோம். ஆனாலும், மறுபடியும் யுத்தம் மூளுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களின் இந்த உதவி, யுத்தத்துக்குப் போவதற்கு ஊக்கம் தருவதற்காக வழங்கப்படவில்லை. இலங்கையின் இனப்பிரச்சினை க்கு இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வைக் காண முடியாது என்பது எமக்குத் தெரியும். மீண்டும் ஒரு முழு அளவிலான யுத்தம் மூளுமாயிருந்தால் இலங்கையின் பொருளாதாரம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும். முதலீடுகள் வராது. உல்லாசப் பயணிகள் வருகை நின்று விடும். கப்பல் சேவைக்கான காப்புறுதிக் கட்டணம் உயரும். அபிவிருத்திக்குப் பயன்படுத் தப்பட வேண்டிய நிதி யுத்தத்துக்கு முடக்கப்படும் என்றும் அவர் கூறினார். சாத்தியமானளவு மிக விரைவாக விடுதலைப் புலிகளும், அரசும் பேச்சுக்குப் போக வேண்டும் என்பதே எங்கள் எல்லோரது விருப்பம் என்றும் அவர் கூறத் தவறவில்லை.
நன்றி>sankathi.com
தடையை நீக்க ஐரோப்பிய நாடுகள் முடிவு!
இலங்கையின் சமாதான பேச்சுவார்த்தையில் விடுதலைப்புலிகள் கலந்து கொள்வதை ஊக்கு விக்கும் வகையில் அவர்கள் மீதான தடையை ஜரோப்பிய நாடுகள் தளர்த்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்காலத்தில் ஐரோப்பிய நாடு ஒன்றில் சமாதான பேச்சுவாhர்ததைகள் நடைபெறுமாயின் தமிழீழ விடுதலைப்புகள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல கூடிய வகையில் அந்த அமைப்பு மீதான தடையை தளர்த்த ஐரோப்பிய ஓன்றிய நாடுகள் கொள்கையளவில் இணங்கியுள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் சமாதான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை யை அந்த நாடுகள் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
நன்றி>Sankathi
04 June, 2006
பத்தாயிரம்பேரின் தற்காப்பு பயிற்சி நிறைவு.
பத்தாயிரம் பேரின் தற்காப்பு பயிற்சி இன்று எழுச்சியுடன் நிறைவு. பத்தாயிரம் பேர்வரை பங்குகொண்ட தற்காப்புப் பயிற்சி நிறைவு நிகழ்வு இன்று வன்னி புதுக்குடியிருப்பில் எழுர்ச்சிபூர்வமாக இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசரீதியாக பங்குகொண்டவர்களே இந்த தற்காப்பு பயிற்சி நிறைவில் பங்கேற்றனர். தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு உந்து நத்தியாக விளங்கும் மக்கள் சக்தியின் உந்து சக்தியாக விளக்கும் மக்கள் சக்தியின் வெளிப்பாடாக இந்த நிகழ்வு எழுர்ச்சியுடன் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆண்கள் பெண்கள் என கிராம மட்டத்தில் தற்காப்பு பயிற்சினை பெற்ற இவர்களுக்கு பயிற்சியின் நிறைவு நிகழ்வாக இந்த நிகழ்வு நடைபெற்றது. புதுக்குடியிருப்பை அண்மித்தபகுதியில் இருந்து அணிவகுத்து வந்த இவர்கள் புதுக்குடியிருப்பு மாலதி விளையாட்டு அரங்கில் ஒன்று கூடினர். இந் நிகழ்வின் போது பயிற்சியாளர்களால் எடுக்கப்பட்ட உறுதி உரையினை அடுத்து தமது தற்காப்பு பயிற்சியினை நிகழ்வுக்கு வருகை தந்திருந்த விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளுக்கு தமது பயிற்சி மாதிரியினை செய்து காட்டினர். இதனை தமிழீழ கடற்படையின் சிறப்புத்தளபதி கேணல் சூசை தளபதி கேணல் ரமேஸ் உட்பட்டோர் ஏற்றுக்கொண்டனர். இதன்போது அங்கு இடம் பெற்ற அரங்க செயற்பாடுகள் நிகழ்வுக்கு எழுச்சியூட்டின எமது விடுதலையை நாமே வென்றெடுக்கவேண்டும் என்றும் எமது நிலம் எமக்கு வேண்டும். என்றும் நிகழ்வில் உணர்வு எழுர்ச்சியுடன் கோசம் எழுப்பி உணர்வு பூர்வமாக உணர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்று பிற்பகல் 4.00மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர் இளங்குமரன் அவர்கள் தமிழீழ தேசியக் கொடியேற்றி ஆரம்பித்து வைத்தார். இதே வேளை கனகபுரம் மக்களுக்கான தற்காப்புப்பயிற்சி நிறைவு நிகழ்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தகவல்:சங்கதி
03 June, 2006
Subscribe to:
Posts (Atom)

